-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Sunday 19 December 2010

தமிழ் இலக்கிய உலகமாநாடு 2012


தமிழ்அன்பர்களே!
முத்தமழிச் சங்கமும், இலக்கியத்தேடலும் இணைந்து 2012 ஆம் ஆண்டு சூன் மாதம் 'தமிழ் இலக்கிய உலகமாநாடு" நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கான இலச்சினைய இங்கு அறிமுகப்படத்தியுள்ளோம். இவ்விலச்சினையை எழுத்தாளர் இந்திரன் அவர்கள் பொறுப்பேற்று, சினிமா கலை வித்தகர் திருவாளர் மகேந்திரன் (எ) மகி அவர்களால் உருவாக்கம் செய்து தரப்பட்டது.
இந்த மாநாட்டிற்கான தலைமைக் குழு
தலைவர் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
செயலர் : தமிழியக்கன் தேவகுமரன்
தகவல் தொடர்பு : திரு இலங்கைவேந்தன் பாண்டுரங்கன்
தனி அலுவர் : திரு ரவி பாலா


அமைப்பாளர் : திரு கோவிந்தசாமி செயராமன்

குழு பின்னர் விரிவாக்கம் செய்வதைப் பற்றி குழு கூடி முடிவெடுக்கப்படும்.
விவரங்கள் தொடர்ந்து மாநாட்டிற்கான மின் தளத்திலும் தமிழ்வாணி மின்தனத்திலும்
http://tamlitworldconf.wordpress.com/ வெளியிடப்படும்.
கோவிந்தசாமி செயராமன்

இலக்கியத்தேடலின் 7ஆம் கூட்டம்

05.12.2010 இக்கூட்டம் பாரீசு 75009, அம்மன் உணவகம்,41 rue Pierre Fontaine ல் நடைபெறவுள்ளது. இதில் 'சிறுவர்களுக்கு தமிழ் கற்பித்தல்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற போராசிரியர் தளிஞ்சான் முருகையா ஆவார். அன்பர்கள் இவர் உரையை கேட்க ஒன்று கூடி வரவும். தங்களுடைய பிள்ளைகளுக்கு பள்ளியில் தமிழ் வழி கற்ப்பித்தல் எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
தொடர்பு கொள்ள 0139862981 போராசிரியர் பெஞ்சமின் லெபோ
0603582338 கோவிந்தசாமி செயராமன்
கோவி செயராமன்

எம்.ஜி.ஆர் விழா

Friday 24 September 2010

சொல் புதிது நடத்திய 'இலக்கிய ஞாயிறு" விழா

சொல் புதிது என்ற வட்டத்தை துவக்கி இலக்கியஞாயிறு விழாவினை ஏற்பாடு செய்தவர் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா ஆவார்.Strasbourg 19.09.2010 அன்று நடந்த இலக்கிய ஞாயிறு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மங்களவிளக்கேற்ற திருமதி பூங்குழலி பெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட விழா ஆரம்பமானது. திரு.பொன்னம்பலம் அனைவரையும் வரவேற்றார்.திரு அலன் ஆனந்தன் தலைமை தாங்கி விழாவை நடத்திக் கொடுத்தார். திரு மதிவாணன் திரு இலங்கை வேந்தன் பாண்டுரங்கன் திரு ஓஷ இராமலிங்கம் திரு பாரிசு பார்த்தசாரதி திரு அண்ணாமலை பாஸ்கர் திரு முத்துக்குமரன்... முதலியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கவிச்சித்தர் கண.கபிலனார் 'சொல் புதிது" என்ற தலைப்பில் கவியுரை வழங்கினார். ஒரியா கவிஞர் முனைவர் மனோரமா பிஸ்வாஸ் எழுதிய கவிதைத் தொகுப்பின் பிரஞ்சுமொழியாக்கம் செய்த நூல் வெளியடப்பட்டது. Strasbourg துணைமேயர் திரு தணியல் பயோ முன்னிலை வகித்தார். கவிஞர் இந்திரன், திரு குப்தா, திரு தெபல் சவியே திரு பூவாச்சி ஜோசப், திரு குரோ இவர்கள் வாழ்த்துரை வழஙகினார்கள். கவிஞர் இந்திரன இந்நூலைப் பற்றி பேசினார்.

மதிய உணவிற்கு பிறகு திரு கிருபானந்தன் தமிழிசையுடன் கூட்டம் தொடங்கியது. உரை மன்றத்தில் திரு தலிஞ்சான் முருகையன் திருமதி லூசியா லெபோ திரு பாலகிருஷ்ணன் திரு நாகரத்தினம் கிருஷ்ணா..சிறப்புரை தந்தனர். தொடர்ந்து பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் பட்டி மன்றம் நடந்தது. கோவலன் தலை சிறந்தவனே என்ற அணியின் தலைவராக அடியார்க்கன்பன் திரு கோவிந்தசாமி செயராமன் அமர்ந்தார்.அவருக்கு எதிராகக் கொடி பிடித்தவர் திருமதி பூங்குழலி பெருமாள்.இவர் தலைப்பு :கோவலன் நிலை இழிந்தவனே! இந்தப்பக்கம் திருமதி லூசியா லெபோ திருமதி உஷா நடராசன் பேசினர் .
கோவலனுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியவர்கள் : திரு துய்மோன் கியோன் திரு மதிவாணன். பட்டி மன்றப் பேச்சாளர்கள் அனைவரும் சிறப்பாகவே பேசிச் சுவை சேர்த்தனர். கொண்டுபோனார் பேரா. பெஞ்சமின் லெபோ . இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர் இருவரை நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா. அறிமுகம் செய்து வைத்தார். ஒருவர் திரு இந்திரன் அவர்கள். இவர் தமிழகத்தின் தலை சிறந்த மிக முக்கியக் கலை விமர்சகர் கவிஞர் மொழிபெயர்ப்பாளர் ஓவியர். தமிழ் ஆங்கில மொழிகளில் எழுதி வருபவர். முன்னாள் வங்கி அதிகாரி. 2000 -ஆம் ஆண்டில் தமிழக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தபோது 133 அதிகாரங்களுக்கு 133 நவீன ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர். பிரிட்டீஷ் கவுன்சிலினால் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியக் கலைப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டவர். தமிழகத்துக்கு வெளியேஇ வெகு தொலைவில் இப்படி ஒரு தமிழிலக்கியத் தேடல் நடைபெற்றுக்கொண்டு இருப்பதைக் கண்டு பெரு மகிழ்வு கொள்வதாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். பின் தமிழ் அழகியல் என்பது பற்றிச் சுருக்கமாக விளக்கினார். இவர் புதுவையைச் சேர்ந்தவர். பல நாட்டவரும் தன்னை அழைத்துப் பெருமைப்படுத்தி இருந்தாலும் தமிழர் அமைப்பொன்று தன்னை அழைத்திருப்பது இதுதான் முதல் தடவை என்று நெகிழ்ந்து கூறினார் அவர். இப்பெருமைக்கு உரியவர் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா.

இன்னொரு சிறப்பு விருந்தினர் திரு ஏ. வி இளங்கோ அவர்களின் ஊர் கோபிசெட்டிப்பாளையம். பல்லாண்டுகள் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியபின் கலைத் துறையில் நுழைந்த இவர் சென்னையில் ஓவியக் கூடம் நடத்தி வருகிறார். இவர் ஓவியக் கூடம் ஒன்று மலேசியாவிலும் இயங்கி வருகிறது. உலகப் புகழ் பெற்ற இவரின் ஓவியங்கள் பல நாட்டுக் கலைக் கூடங்களில் இடம் பெற்றுள்ளன. இவர் ஓவியங்களில் நம் நாட்டுப் பழங் கலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. கலைகளுக்குப் பெயர் பெற்ற பிரான்சு நாட்டில் இவர் பெரிதும் மதிக்கப்பட்டுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும். சில மாதங்களுக்கு முன்புதான் இவருடைய சிற்பம் (காவலர் நினைவுச் சின்னம்) ஒன்றைக் கலைஞர் திறந்துவைத்து இவரைப் பாராட்டினார். சிலப்பதிகாரம்இ மணிமேகலை ஆகியவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்புகளுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் மெருகு ஊட்டி இருக்கின்றன. பொதுவாக ஓவியம் பற்றியும் குறிப்பாகத் தம் ஓவியங்களைக் குறித்தும் இவர் பல சுவையான தகவல்களைச் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இருவருமே தமிழ் இலக்கியம் தொட்டுச் சென்றார்கள்.

இலக்கிய ஞாயிறு நிகழ்ச்சியினை திருமதி உஷா நடராசன் தொகுத்து வழங்கினார்.

Thursday 23 September 2010

ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் இலக்கியத்தேடலின் ஆறாம் கூட்டம்

ஐரோப்பியப் பாராளுமன்றம் அமைந்திருக்கும் அழகிய நகரம்.
கடந்த முறை, 2009 இல், இலக்கியத்தேடலின் இரண்டாம் கூட்டத்தை அங்கு நடத்த அழைப்பு விடுத்தார் எழுத்தாள நண்பரும் இலக்கியத்தேடலின் உறுப்பினருமான திரு நாகரத்தினம் கிருஷ்ணா. விளைவாக, அதுபோல இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கி விழா நடத்த வேண்டும் என்ற ஆவல் அப்போது அங்கே கலந்து கொண்ட பலருக்கும் எழுந்திருக்கிறது. அந்த ஆவலை வளர்த்து ஆவன செய்தவர் திரு நாகரத்தினம் கிருஷ்ணா.19.09.2010 ஞாயிறு அன்று 'சொல் புதிது' என்ற இலக்கிய அமைப்பின் தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்தார் அவர்.அதற்கு முன் நாள் சனிக்கிழமை 18.09.2010 அன்று மாலைஇலக்கியத்தேடலின் ஆறாம் கூட்டத்தை நண்பரின் இல்லத்திலேயே நடத்தவும் திட்டம் இடப்பட்டது.

சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் திருமதி பூங்குழலி பெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட இலக்கித்தேடலின் கூட்டம் சிறப்பாகத் தொடங்கியது. திரளாக வந்திருந்த பெருமக்களை முறையாக வரவேற்றார் திரு நாகரத்தினம் கிருஷ்ணா. தொடர்ந்து, இலகியத்தேடலை உருவாக்கி நடத்தி வரும் பேரா. பெஞ்சமின் லெபோ, இதுவரை இலக்கியத்தேடலின் கூட்டங்களில் அலசப்பட்ட தலைப்புகளையும் அவற்றைப் பற்றிப் பேசியவர்களைப் பற்றியும் சுருக்கமாக விளக்கிப் பின் அன்றைய கூட்டத்தின் தலைப்பான 'குறுந்தொகை' பற்றிப் பேசத் திருமதி பூங்குழலி பெருமாள் அவர்களை அழைத்தார்.

திருமதி பூங்குழலி பெருமாள், M.A, M.Phil பட்டங்கள் பெற்றவர். புதுச்சேரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இனிய குரல் வளம், கவிதைக் கனிவுடன் (மரபு, புதுக் ) கவிதைகள் எழுதும் திறம் படைத்தவர். கனியமுதத் தமிழில் இனிமையாக உரையாற்றும் திறல் உடையவர்.புதுச்சேரியின் புகழ் பெற்ற புலவர்களுள் ஒருவரான இயலிசைப் புலவர் கலைமாமணி இரா. வெங்கடேசன் அவர்களின் அருமைப் புதல்வி.. தமிழிலக்கிய வரலாற்றில், சங்க இலக்கியங்களில் குறுந்தொகை பெறும் இடம் பற்றி விளக்கிய அவர் குறுந்தொகையில் காணப்படும் தமிழ்க் காதலை, அக்காலக் காதலின் மாண்புகளை, இயல்புகளை மிகச் சிறப்பாக விளக்கினார். தம் கருத்துகளுக்கு ஆதரவாகப் பலப்பல குறுந்தொகைப் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கிச் சொன்னார் செடிகொடிகளும் விலங்குகளும் எப்படி அக்கால மக்களின் பண்புகளை, மன நிலைகளை எதிர் ஒலித்தன என்பதையும் அவர் விளக்கியது சிறப்பாக இருந்தது. 45 நிமிடங்கள் நீடித்த அவர் உரை முடிந்தபின், அறுசுவை உணவை உண்ட நிறைவு எழுந்ததில் வியப்பில்லை . ஒருசிலர் எழுப்பிய வினாக்களுக்குத் தக்க விடை தந்து ஐயங்களைக் களைந்ததும் அருமையாக இருந்தது.

அதன்பின் சிறப்பு விருந்தினர் இருவரை நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா. அறிமுகம் செய்து வைத்தார். ஒருவர் திரு இந்திரன் அவர்கள். இவர் தமிழகத்தின் தலை சிறந்த, மிக முக்கியக் கலை விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதி வருபவர். முன்னாள் வங்கி அதிகாரி. 2000 -ஆம் ஆண்டில் தமிழக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தபோது 133 அதிகாரங்களுக்கு 133 நவீன ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர். பிரிட்டீஷ் கவுன்சிலினால் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியக் கலைப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டவர். தமிழகத்துக்கு வெளியே, வெகு தொலைவில் இப்படி ஒரு தமிழிலக்கியத் தேடல் நடைபெற்றுக்கொண்டு இருப்பதைக் கண்டு பெரு மகிழ்வு கொள்வதாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். பின் தமிழ் அழகியல் என்பது பற்றிச் சுருக்கமாக விளக்கினார். இவர் புதுவையைச் சேர்ந்தவர். பல நாட்டவரும் தன்னை அழைத்துப் பெருமைப்படுத்தி இருந்தாலும் தமிழர் அமைப்பொன்று தன்னை அழைத்திருப்பது இதுதான் முதல் தடவை என்று நெகிழ்ந்து கூறினார் அவர். இப்பெருமைக்கு உரியவர் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா.

இன்னொரு சிறப்பு விருந்தினர் திரு ஏ. வி இளங்கோ அவர்களின் ஊர் ோபிசெட்டிப்பாளையம். பல்லாண்டுகள் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியபின், கலைத் துறையில் நுழைந்த இவர் சென்னையில் ஓவியக் கூடம் நடத்தி வருகிறார். இவர் ஓவியக் கூடம் ஒன்று மலேசியாவிலும் இயங்கி வருகிறது. உலகப் புகழ் பெற்ற இவரின் ஓவியங்கள் பல நாட்டுக் கலைக் கூடங்களில் இடம் பெற்றுள்ளன. இவர் ஓவியங்களில் நம் நாட்டுப் பழங் கலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. கலைகளுக்குப் பெயர் பெற்ற பிரான்சு நாட்டில் இவர் பெரிதும் மதிக்கப்பட்டுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும். சில மாதங்களுக்கு முன்புதான், இவருடைய சிற்பம் (காவலர் நினைவுச் சின்னம்) ஒன்றைக் கலைஞர் திறந்துவைத்து இவரைப் பாராட்டினார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்புகளுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் மெருகு ஊட்டி இருக்கின்றன. பொதுவாக ஓவியம் பற்றியும் குறிப்பாகத் தம் ஓவியங்களைக் குறித்தும் இவர் பல சுவையான தகவல்களைச் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
" the space between two points is the painting ; the silent between two words is the poetry" என்று இவர் சொல்லி விளக்கியபோது மெய்ம்மறந்து கேட்டோம். இருவருமே தமிழ் இலக்கியம் தொட்டுச் சென்றார்கள். விவாதத்தின் பொது அடிக்கடி சுட்டப்பட்ட உள்ளுறை உவமம், இறைச்சி பற்றிப் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ சுருக்கமாகச சொல்லி இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கினார். சிறப்பு விருந்தினர்களுக்கும் பேச்சாளருக்கும் இலக்கியத்தேடலின் சார்பாகப் பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்தவர் முதுபெருங் கவிஞர் கண. கபிலனார் அவர்கள். தள்ளாத வயதிலும் பாரிஸ் நகரில் இருந்து வந்திருந்துஇவ்விழாவில் கலந்துகொண்டவர் இவர். பின்னர், கவிஞர் கண. கபிலனார் அவர்கள், இலக்கியத்தேடலுக்குப் பலவிதங்களில் உதவி வரும் இனிய நண்பர் அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன் மேல் தான் எழுதிய அந்தாதிப் பாடலை அரங்கேற்றினார். 100 பாடல்களையும் படிப்பதற்கு நேரம் போதாமையால், ஒருசில பாடல்களை மட்டுமே கவிஞர் படித்தார்.

உலகப் புகழ் பெற்ற இவ்விருவரும் நம் இலக்கியத்தேடல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை யாற்றியது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எங்களைச் சந்திததில் அவர்களுக்கும் பெரு நிறைவே. அங்கே இருந்த இரு நாள்களும் அவர்கள் இருவருடன் உரையாடிப் பல செய்திகளைத் தெரிந்துகொண்டோம். உலகப் புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் பழகுவதற்கு இனிமையானவர்களாகவே இருவரும் இருந்தனர். இறுதியாக இலக்கியத்தேடலின் முக்கிய உறுப்பினரும் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான அடியார்க்கன்பன் திரு கோவிந்தசாமி செயராமன் அவர்கள் நன்றி கூறினார்கள். இலக்கியத்தேடலின் முதுகெலும்பு இவர். சிரமம் பாராமல், இலக்கியத்தேடலுக்கான இடம் தேடி, ஆவன செய்து கூட்டம் நல்லபடி நடைபெறப் பெரிதும் உழைத்து வருபவர். இரவுச் சிற்றுண்டி வழங்கப்படக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது .
இக்கூட்டத்த்தில் கலந்துகொள்ள Strasbourg நகரத் தமிழர்களும் - திரு &; திருமதி நாகரத்தினம் கிருஷ்ணா, திரு கிருபானந்தன் , திரு பொன்னம்பலம் வடிவேலு, திரு துய்மோன் கியோன், திரு லூர்து நாதன் சலோமோன்... போன்றோர் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பாரிஸ் நகரிலிருந்து வந்தவர்கள் பட்டியல் : முதுபெருங் கவிஞர் கண கபிலனார் அவர்கள், அவர் நண்பர்,அடியார்க்கன்பன் திரு கோவிந்தசாமி செயராமன், திரு & திருமதிஅலன் ஆனந்தன், திரு திருமதி பெருமாள், திருமதி லூசியா லெபோ, திரு மதிவாணன், திரு ஓஷ இராமலிங்கம், திரு பாரிசு பார்த்தசாரதி, திரு அண்ணாமலை பாஸ்கர், திரு குமார், திரு தலிஞ்சான் முருகையன், திரு இலங்கைவேந்தன் பாண்டுரங்கன், திரு கணேஷ், ..
நிறைவான மனத்தோடு ஊர் திரும்பினோம்.
பேரா. பெஞ்சமின் லெபோ .

அண்ணல் காந்திவிழா

தமிழ்மாமணி-கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி



புதுச்சேரி அரசு முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வரின் தந்தையாருமான் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் வெ.வெங்கடசுப்பா [ ரெட்டியாரின்] நூற்றாண்டு விழாவை 16.08.2010 அன்று செயராம் திருமண மண்டபத்தில் கொண்டாடியது.அதில் 2008-2009 ஆண்டுக்கான தமிழ்மாமணி விருதுகளை ஆறு தமிழ் அறிஞர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்.இக்பால் சிங் வழங்கினார். 91 வயது மூத்த தமிழறிஞரும் பாவேந்தரின் சீடருமான வைணவ வித்தகர் சித்தன் அவர்களும்,திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நாவலர்.நந்திவர்மன் அவர்களும், பேராசிரியர் திருமாவளவன் அவர்களும், புலவர் திருமேனி நாகராசன் அவர்களும், பரிதி.வெங்கடேசன் அவர்களும்,மா.தன.அருணச்சலம் அவர்களும் விருதுகளையும் 30,000 ரூபாய் பொற்கிழியையும் 3 பவுன் தங்கப்பதக்கமும் பெற்றுக்கொண்டனர்.

முதலமச்சர் வெ.வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். கலைப்பண்பாட்டுத்துறை அமைச்சர் எம்.ஒ.எச்.ஷாஜகான் வரவேற்றார். சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் இரா,சிவா, ஆர்,விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
47 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதும் 20,000 ரூபாய் பொற்கிழியும் 2 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

P.S: http://www.scribd.com/doc/34677248/French-Indians-and-Land-Mafia-INDIENS-FRANCAIS-A

செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சமின் லெபோ

முதல் நாள் : திறப்பு விழா

கட்சிக் கொடிகள் கட்டக் கூடாதென்ற கலைஞரின் கட்டுப்பாடான கட்டளையைக் கடமையெனக் கொண்ட கழகக் கண்மணிகள் கண்ணியத்துடன் நடந்துகொள்ளக் கட்சிக்கொடி கோவை நகரில் காணாமல் போயிருந்தது. ஆனால், காற்றிலே (மாநாட்டுக்) கொடிகள் கலகலக்கக் களிப்பு ஊற்றிலே குளித்துக்கொண்டிருந்தது கோவை மாநகரம். சூன் திங்கள் 23 -ஆம் நாள் - காலை 10 மணி. கோபங்கொண்ட மனையாளைப் போலக் கோவைச் சூரியன் காய்ந்துகொண்டிருந்தான். பாவையைப் பார்க்க வரும் காளைகளாய் மேகங்கள் மேய்ந்துகொண்டிருந்தன. செம்மொழி மாநாட்டுக்குத் தன்னாலான உதவி செய்வோமெனப் பாலக்காட்டு இதமான 'தென்றல்' பதமாக வீசிகொண்டிருந்தது. உதய சூரியனாய்க் கலைஞர் (கூட்டத்தில், கலைஞரின் மேல் தலையை மட்டும்தான் காணும் பேறு பெற்றேன்! அதனால்தான் இந்த உவமை!) உலா வந்து மாநாட்டு அரங்கின் மாஆஆஆஆ... பெரும் பந்தலில் (அடேங்கப்பா, மூணு கி.மீ. இருக்குமா!!!) நுழைந்தார். அவருக்கும் முன்னாடியே அவருடைய ஆரவாரப் பரிவாரங்கள் வந்து சேர்ந்திருந்தன. இறுதியாக, ஒரு வழியாக வந்து சேர்ந்தார் இந்தியக் குடியரசின் தலைவர் மேதகு பிரதீபா பாட்டில் அவர்கள். அலை மோதிய மக்கள் கூட்டம் அமைதியாக எழுந்து நிற்க, அழகாகச் சோடிக்கப்பட்ட அரங்கினுள் இந்தியத் தேசியக் கீதம் கம்பீரமாக எதிரொலித்தது. தொடர்ந்து, மருத்துவர் சிவசிதம்பரம் (அட நம்ம சீர்காழியோட மவன்தானுங்கோ) தமிழ்த்தாய் வாழ்த்தைத் தம் தந்தையின் குரலில் (ஒரு சுருதி இறக்கியே) பாடினார். நாட்டுப்பண் பாடியபோது எழுந்து நின்ற மக்கள் கூட்டம் தமிழ்த் தாய் வாழ்த்தின்போது டபெக்கென்று அமர்ந்துகொண்டது! 'எல்லாரும் எழுந்து நில்லுங்கள்' என நான் சத்தம் போட, என்னவோ ஏதோவென்று சிலர் எழுந்து நிற்க, அவர்களைப் பார்த்து மற்றவர்களும் எழ... தமிழ்த் தாயின் மானத்தைக் காப்பற்றிவிட்ட பெருமிதம் எனக்குள்.

Image

Image
Image
Image

பிறகு? பிறகு என்ன... நடந்தனவற்றைப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள் @ தொ(ல்)லைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆங்கிலத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், (நம் நாட்டில்தான் தமிழைவிட ஆங்கிலம் படித்தவர்கள்தாம் அதிகம் அல்லவா. அதனால்தானோ என்னவோ மொழி பெயர்க்க மொழிபெயர்ப்பாளர் எவரையும் அமர்த்தவில்லை!) தமிழின் அருமை பெருமைகளைப் பேசினார். உயர்வான மொழி என்றார். அம்மொழி செம்மொழியே எனப் புகழாரம் சூட்டினார். 'அத்தகைய சிறப்பான மொழியை இந்தியப் பாராளுமன்றத்தில் நுழைய விடாமல் தடுத்திருகிறீர்களே..' என்று கேட்க மேடையிலே இருந்தவர்களுக்குத் தோன்றவில்லை (துணிவில்லை!). ஆனால் ஒருவர் கேட்டார்... உரத்துக் கேட்டார்! கூட்டத்தில் அவர் குரல் எடுபடவில்லை. குரல் கொடுத்த கோமான் வேறு யாரும் இல்லை அடியேன்தான். அக்கம் பக்கம் இருந்தவர்கள் (பின்னால் நின்றிருந்த காவலர் உட்பட- ஒருவேளை சி ஐ டி யோ!) பலரும் ஒரு மாதிரி பார்த்தார்கள். தனிமரத் தோப்பாக ஒருவர் மட்டும் 'சரியாகச் சொன்னீர்கள் சார்' என்று திருவாய் மொழிந்தார். அசட்டுச் சிரிப்புடன் நன்றிப் பார்வை பார்த்தேன். வெளிநாட்டு அறிஞர்கள், உள் நாட்டு அறிவிலிகள்... மன்னிக்கணும்... அறிவு சீவிகள்... அவர்கள், இவர்கள் என எல்லாரும் பேச்சு மழை பொழிந்தார்கள். அவற்றை எல்லாம் சொல்லி உங்களை அறுப்பானேன். இறுதியாகக் கலைஞர் பேசினார். இல்லை... இல்லை படித்தார். யார் யார் அவரை உன்னிப்பாகக் கவனித்தார்களோ இல்லையோ அவரின் பின்னால் அமர்ந்து இருந்த உதவியாளர் திரு.சண்முகநாதன் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தார். தவறாகப் பக்கத்தைப் புரட்டிவிட்ட கலைஞருக்குச் சரியான பக்கத்தை அவர் எடுத்துத் தந்த வேகம் இருக்கிறதே... அடடா (நாளைக்கு நமக்கு வாழ்வு வந்தால், சண்முகநாதன் போன்ற அணுக்கத் தொண்டரைத்தான் வைத்துக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன் என்றால் பார்த்துகொள்ளுங்கள்). யாருமே கண்டுகொள்ளாத இன்னொருவரைப் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். அவர்? நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஆரணங்கு! பெயர் தெரியவில்லை. ஆனால் அமிழ்தினும் இனிய குரல் @ ஆங்கிலக் கலப்பு அறவே இல்லாத் தமிழ் @ தக்க ஏற்ற இறக்கங்களோடு கூடிய, மாற்றுக்குறையா ஒலிப்பு @ தொய்வில்லா நிகழ்ச்சித் தொகுப்பு... அருமை, அருமை! (நல்ல வேளை, சின்னத்திரைக் குயில்களை மேடை ஏற்றிச் சின்னா பின்னமாக்கவில்லை! வாழ்க நிகழ்ச்சி அமைப்பாளர்கள்!).


Image


நேரம் நண்பகல். ''நானொருவன் இருப்பதை மடையா மறந்து விட்டாயா" என்று வயிறு ஓலமிடத் தொடங்கியவேளை. அறிவிப்பாளர் குரல் அமுதாய்ப் பாய்ந்தது - சிறப்பு விருந்தினர்களுக்குக் கொடிசியா வளாகத்தில் விருந்து காத்திருப்பதாக! சிறப்பு விருந்தினர்களாகிய நாங்கள் (என் துணைவியார் உட்பட) இடம் தேடி அங்கே விரைந்தோம். நந்திகளாய் வழி மறைத்தார்கள் காவலர்கள். செம்மொழி மாநாட்டுச் சிறப்பு விருந்தினர் என்ற அடையாள அட்டையைக் காட்ட வேண்டுமாம். காட்டினோம். அதைக் கழுத்தில் மாட்டிக்கொள்ளுங்கள் என்ற அறிவுரை வேறு. ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்களாய் அதனைக் கழுத்தில் மாட்டிகொண்டு உள்ளே சென்றோம். திகைத்து வியந்து நின்றோம்....

அங்கே -

வாட்டஞ் சாட்டமான வள்ளுவப்பெருந்தகை வாகாக நின்று வரவேற்றுக்கொண்டிருந்தார். வியப்புக்குக் காரணம், வள்ளுவர் முழுக்க முழுக்கக் காய்கறிகளால் உருவாக்கப்பட்டிருந்ததுதான். (மூன்று நாட்களுக்குள் வள்ளுவர் சீர்குலையத் தொடங்கியதால் நான்காம் நாள் அவரை அகற்றி விட்டார்கள்). உள்ளே நுழைந்தால், ஏராளமான பேர்கள் - எல்லாருமே சிறப்பு விருந்தினர்கள்தாம், கழுத்தில் 'ஒலிம்பிக்' பதக்கம் தொங்கிக் கொண்டிருந்ததே! பழைய, புதிய நண்பர்கள்... சந்திப்பும் நல விசாரிப்பும்... கச்சேரி களை கட்டி விட்டது. முகமறியா மின்னஞ்சல் தொடர்புகள் இப்போது முக-முகத் தொடர்புகளாக மாறிக்கொண்டிருந்தன. பெரிய விசாலமான உணவகம். வெகு சுத்த பத்தமாக இருந்தது. சுவர் ஓரமாக, இரு பக்கங்களில் மேசைகள், விரிப்புகள் அவற்றின் மேல் வகை வகையான உணவு வகைகள். சைவம் ஒரு பக்கம், அசைவம் எதிர்ப்பக்கம். மேசைகளுக்குப் பின்னால் தொண்டர்கள். சின்னக் கரண்டியில் கொஞ்சமாக எடுத்துப் பரிமாறினார்கள்! ஏகப்பட்ட உணவு வகைகள், ஆதலால், குறைந்த அளவு குறையாகப் படவில்லை. தில்லுமுல்லு, தள்ளுமுள்ளு ஏதும் இல்லை. அனைவரும் பொறுமையாக, வரிசையில் நின்று வாங்கினார்கள். எல்லாருமே பெரிய படிப்பு படித்தவர்கள் அல்லவா. (அது மட்டுமல்ல - 'ஒலிம்பிக்' பதக்கம் மாட்டியவர்கள் மட்டுமே ஆய்வரங்க வளாகத்துள் அனுமதிக்கப்பட்டனர். எனவே புறம்போக்குகளுக்கு அங்கு இடம் இல்லை!).







ImageImage

தட்டு நிறைய உணவு. கொட்டிவிடாமல் சாப்பிடுவது கடினமாகவே இருந்தது. ஆற அமர அமர்ந்து உண்ண, போட்டிருந்த மேசை நாற்காலிகள் போதுமானவையாக இல்லை (இருந்தாலும், தரையில் ஒரு பருக்கை தவறி விழுந்தால் போதும், துப்புரவுப் பணியாளர்கள் ஓடோடி வந்து உடனே சுத்தம் செய்தார்கள். தமிழகத்திலா இப்படி என்ற வியப்பு!) சாப்பிட்டு முடித்து வெளியே வந்தால் தமிழர் வழக்கப்படி வாழைப்பழம், பீடா! ஐந்து நாள்களும் பகலுணவு இப்படியே! சுவை சுவையான வகை வகையான உணவுகள் - கோவை அன்னபூர்ணா உணவகம் தன் புகழை மீண்டும் நிலை நாட்டிக்கொண்டது!



Image

பலருடைய கவனம் எல்லாம் தட்டிலும் பக்கத்தில் இருந்த நண்பர்களோடு அளவளாவதிலும் இருந்தது. சுற்றி இருந்த சுவர்களை எத்தனை பேர் கவனித்தார்களோ தெரியவில்லை! கவனித்திருந்தால் வியப்பு உண்டாகி இருக்கும். அங்கே, சுவற்றில் - விருந்துக்குப் பொருத்தமான தமிழிலக்கிய வரிகள் மின்னிக்கொண்டிருந்தன. ('உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' @ 'செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவர்க்கு'). வந்திருக்கும் அறிஞர் பெருமக்களில் ஒரு சிலருக்குப் பொருள் தெரியாமல் போய்விட்டால்... என்று அஞ்சியோ என்னவோ அவ்வரிகளின் பொருளையும் அருகிலேயே எழுதி இருந்தார்கள். இவ்வளவு விலாவாரியாக உணவகத்தை விவரிக்கக் காரணம், மாநாட்டு அமைப்பாளர்களின் அருமையான் முன்னேற்பாடுகளை, உழைப்புகளை, இளந்தொண்டர்களின் பணிகளைப் புலப்படுத்தவும் மட்டும் அல்லாமல், ஆய்வரங்க அலசல்களைவிட இந்த உணவரங்க அலசல்களே சுவை மிக்கனவாக இருந்தன என்பதை உணர்த்தவும்தான்!

Image


உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு அல்லவா! உறங்க இடம் தேடி ஆய்வரங்கத்துள் (அங்கேதானே கூட்டமே இருக்காது!) நுழைத்தால்... அங்கும் இங்குமாக அறிஞர் பெருமக்கள் அலைந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் தோரணையும் பாவனையும் என்னையும் தொ(ப)ற்றிக்கொள்ள, அப்படியும் இப்படியும் சென்று பார்த்தேன். குளிரூட்டப்பட்ட சிறு சிறு அறைகள் அடுத்தடுத்து இருந்தன. ஒவ்வொரு அரங்கத்துக்கும் ஒவ்வொரு புலவர் பெயர்! (நல்ல வேளையாக இந்தக் காலத்துச்சால்ரா, சில்லுண்டிக் கவிஞர்களின் பெயர்களைச் சூட்டவில்லை!). நக்கீரனார் அரங்கம், நப்பூதனார் அரங்கம்... அரங்கம் அரங்கமாக ஓடி ஓடிப் போய்ப் பார்த்தேன். இன்னொரு பக்கம் சுஜாதா, துபாய் உமர்த்தம்பி, முரசொலி மாறன், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி... என நினைவில் வைத்துப் போற்ற வேண்டியவர்கள் பெயர்களிலும் அரங்குகள்.... பூரிப்பால் என்னுயரம் ஒரு முழம் கூடிப்போயிற்று! பழங்காலப் புலவர் பெயர்களை அழகாக எழுதியதோடு அதற்கும் கீழே நம் செந்தமிழ் நாட்டு இக்காலக் கண்ணுள் வினைஞர்கள் கைபுனைந்தியற்றிய ஓவியங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாயின. (அந்த ஓவியங்களைத் தொகுத்து நூல் வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். விலையும் அதிகம் இல்லை 1200 உரூபாகள் மட்டுமே! கண்காட்சியில் 900 உரூபாக்களுக்குக் கொடுத்தார்கள். தாரளமாக வாங்கலாம். மிகை ஊதியம் அந்தக் கலைஞர்களுக்கே போய்ச் சேருமாம்! கேட்டதும் உடனே வாங்கிட்டேன்ல!). மனமெலாம் மகிழ்ச்சிப் பூக்கள் மலர, அந்த மகிழ்ச்சி இன்னும் பெருகிற்று. ஆங்காங்கே பழைய, புதிய நண்பர்களைச் சந்திக்க நேர்ந்ததுதான் காரணம். ஆம், அமெரிக்கத் தம்பி ஆல்பர்ட், சிங்கப்பூர்த் தோழர் பழனி, சிங்கை கிருஷ்ணன், உத்தமம் மணியம், கனடா நாட்டு செல்வா(செல்வகுமார்), சென்னையிலிருந்து (அட) நம்ம போஸ் ஐயா, அண்ணாகண்ணன், அமீரகத்திலிருந்து நாக.இளங்கோவன்... கூடவே கவிதாயினிகள் மதுமிதா(!), திலகபாமா... மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். மின்னஞ்சல் வழியாகத்தானே இவ்வளவு காலமும் பேசினோம். இப்போது நேருக்கு நேர், கண்ணுக்குக் கண் பார்த்துப் பேச முடிகிறதே. அங்கே நின்றோம், இங்கே நின்றோம்... பளிச் பளிச்சென மின்னல்கள் வெட்டின. இதயத்தில் இடம் பெற்றவர்களை ஒளிப்படக் கருவிக்குள் சிறைப் பிடித்தோம்... நேரம் ஓடியதே தெரியவில்லை. பிற்பகல் பொழுதும் முடிந்தது. தங்கி இருந்த இடம் சேர்ந்தோம்.
நன்றி அதிகாலை

இந்திய முத்துக்கள் வழங்கும் நிகழ்ச்சி

les jeudis du patio
soirées musicales
tous les jeudis de l’été
de 19h à 21h au rize
en lien avec l’exposition Musiques !
entrée libre
Dans le cadre de l’exposition Musiques ! visible jusqu’au 2 octobre
2010, le Rize ouvre les portes de son patio à tous les chanteurs et les
musiciens rencontrés lors de la préparation de l’exposition, avec la
collaboration du Centre des musiques traditionnelles Rhône-Alpes.
Venez découvrir ces rythmes venus d’ailleurs dans une ambiance
conviviale et chaleureuse !
01/07 Zyva mixe le Rize… et les collections du CMTRA
08/07 Soirée à Madagascar avec Ando Ratovelomanana
15/07 Soirée en Afrique de l’ouest avec Mbokke Yi
22/07 Soirée au nord du Brésil avec Forró de Rebeca
29/07 Soirée au Chili avec Pueblo Latino
05/08 Zyva mixe le Rize … et les collections du CMTRA
12/08 Soirée en Inde avec l’association Les perles de l’Inde
19/08 Soirée kleZmer avec le groupe Dibouk
26/08 S oirée en Arménie avec Lévon Chatikyan,
Sergey Beglaryan et Léna Abkarian
02/09 Zyva mixe le Rize… et les collections du CMTRA
Boisson et petite restauration assurée par Café cousu tous les jeudis du
mois de juillet.
entrée libre
Tous les jeudis de l’été à 19h au Rize
23-25 rue Valentin-Haüy
69100 Villeurbanne
renseignements : 04 37 57 17 17
HORAIRES D’ETE
Du 6 juillet au 28 août
Fermeture exceptionnelle le mardi 13 juillet
Le mardi, mercredi, vendredi de 14h à 19h
Le jeudi de 17h à 21h
Le samedi de 10h à 14h
Horaires des archives municipales
Le mardi, mercredi, vendredi de 14h à 18h
Le jeudi de 17h à 21h
Fermées les samedis
© CMTRA

Sunday 22 August 2010

ஸ்ட்ராஸ்பூரில் இலக்கிய வட்டம் அழைப்பிதழ்



எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் அவர்கள் ஊரில் இலக்கியவட்டம் 2010 செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அதில் உரைகளம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பாரிசில் இருந்து பேச்சாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் செல்ல உள்ளனர்.இலக்கியத்தேடலின் 6 ஆம் கூட்டம் நாள் (18.09.2010)
சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடைபெறுகிறது;
தலைப்பு :
'குறுந்தெகையில் கவிதைக் கூறுகள்'
உரை தருபவர் :
திருமதி பெருமாள் பூங்குழலி
இடம் :
M. Nagarathina Krishna
10 Rue Herschel
67200 STRASBOURG
Tél : 03 88 278 77 71 / 06 19 48 34 02.


கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் ஆர்வலர்கள்- ஸ்ட்ராஸபூர்க் சென்றுவரும் பயண ஏற்பாடுகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும்.
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
தொடர்புகளுக்கு:
01 39 86 29 81
06 03 58 23 38

இவர்களோடு தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்து கொள்க!

Sunday 15 August 2010

பிரான்சு தலைநகர் பாரிசில் 64 வது சுதந்திர தின விழா





ஞாயிறு 15 ஆம் தேதி பாரிசில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. இந்திய வம்சாவழிகள் மற்றும் இந்திய சங்கங்களும் கலந்து கொண்டன. காலை 10 மணிக்கு இந்தியத்தூதுவர் திருமிகு இரஞ்சித் மேத்தாய் அவர்கள் இந்தியக்கொடியை ஏற்றி இந்திய ஜனாதிபதி இந்தியாவில் பொதுமக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கத்தை கூறினார். பின்னர் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்தையும் தெரிவித்தார். காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

ஸ்ட்ராஸ்பூரில் இலக்கிய வட்டம்

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் அவர்கள் ஊரில் இலக்கியவட்டம் 2010 செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அதில் உரைகளம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பாரிசில் இருந்து பேச்சாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் செல்ல உள்ளனர்.
அனைவரும் வருக!
தொடர்புகளுக்கு:
03 88 28 77 72
01 39 86 29 81
06 03 58 23 38
இந்நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்கு சிறப்பு விருந்தினராக சிறந்த எழுத்தாளர் இந்திரன் அவர்கள் வருகை புரியஉள்ளார்.

இலக்கியத் தேடல் 6 ஆம். கூட்டம்

அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு அன்பு வணக்கம்.
அடுத்த இலக்கியத்தேடலின் 6 ஆம் கூட்டம் நாள் (18.09.2010)
சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடைபெறுகிறது;
தலைப்பு :
'குறுந்தெகையில் கவிதைக் கூறுகள்'
உரை தருபவர் :
திருமதி பெருமாள் பூங்குழலி
இடம் :
M. Nagarathina Krishna
10 Rue Herschel
67200 STRASBOURG
Tél : 03 88 278 77 71 / 06 19 48 34 02.


கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் ஆர்வலர்கள்- ஸ்ட்ராஸபூர்க் சென்றுவரும் பயண ஏற்பாடுகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும்.
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
தொடர்புகளுக்கு:
01 39 86 29 81
06 03 58 23 38

இவர்களோடு தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்து கொள்க!

Monday 5 July 2010

செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்

தொலைபேசி:25396792

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு கிளை
24/223,என்.எஸ்.சி.போசு சாலை
(உயர்நீதிமன்றம் எதிரில்)
சென்னை-600001

செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்


நாள்:6-7-2010 செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி
இடம்: எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம
தலைமை; மறைமலை இலக்குவனார்
ஆய்வுரை: பாவலர் சீனி நயினா முகம்மது
(ஆசிரியர்,’உங்கள் குரல்’- இலக்கியத் திங்களிதழ்,மலேசியா.)

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
(பிரான்சுக் கம்பன் கழகம்,பாரிசு.)


தமிழ்நலன் விழைவோர் அனைவரும் வருக!

முனைவர் ஔவை நடராசன் புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி பொறியாளர் கெ.பக்தவத்சலம்
தலைவர் இணைச்செயலாளர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
பி.இரவிக்குமார் டேவிட் ஆர்.ரிச்சர்டு எசக்கியேல்
தலைவர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
பி.இரவிக்குமார் டேவிட் ஆர்.ரிச்சர்டு எசக்கியேல்
தலைவர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
பி.இரவிக்குமார் டேவிட் ஆர்.ரிச்சர்டு எசக்கியேல்
தலைவர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
பி.இரவிக்குமார் டேவிட் ஆர்.ரிச்சர்டு எசக்கியேல்
தலைவர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
என்.சி.வீலியம்சு தலைவர்

ஆர்.பெர்னார்டு ராஜ்குமார் பொதுச்செயலாளர்
சென்னை ஒய்.எம்.சி.ஏ.

Saturday 26 June 2010

செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

2010 ஐ“ன் மாதம் 23ஆம் தேதி நடக்கவிருக்கும் செம்மொழி தமிழ் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்களும் அவருடைய துணைவியாரும் சென்று உள்ளார்கள். அவர்களுக்கு இதழின் சார்பாகவும் நம் சங்கத்தின் சார்பாகவும் நல்வாழ்த்துகள்.



அவர்கள் இருவரும் பங்கேற்குவுள்ள நிகழ்ச்சி நிரல்கள்;
அன்புடையீர் !

வணக்கம்!
கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டின் போது
இணையத் தமிழ் மாநாடும் நடைபெறுகிறது.
அதில் அடியேன் பங்கேற்கும் நிகழ்ச்சி :
முரசொலி மாறன் அரங்கு வலைப்பதிவர் நிகழ்வுகள் 24-06-2010

செவிக்குணவு வழங்குவோர்
காலம் பேச்சுத் தலைப்பு
அரங்கத் தலைவர்

தலைமை:பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு 2:00-2:15 துவக்கமும் அறிமுகமும்
முனைவர் மு.இளங்கோவன்,புதுவை. 2:16-2:45 தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும்
திரு.எஸ்.பி.வி.ஆர்.சுப்பையா,கோவை. 2:45-3:15 இனியது இனியது இணையம்
திரு.அண்ணா கண்ணன்,ஆசிரியர்,வல்லமை,சென்னை. 3:15-3:45 வலைப்பூக்கள்:செய்யத் தக்கவை - தகாதவை
கவிஞர்.திரு.ஏக‌லைவ‌ன்,சேல‌ம்.3:45-4:00 வலைப்பூக்களில் மாற்றுத்திறனாளிகளின் கவிதைகள்
திரு.ம ஸ்ரீ ராமதாஸ்,சென்னை. 4:00-5:00 கட்டற்ற மென்பொருளும் தமிழ்க் கணிமையும்

அதன்பின் மறு நாள்

வலைப்பதிவர்களுக்கான நிகழ்வில் 25/06/2010ம் நாள்
பிற்பகல் 3:15 மணியிலிருந்து 3:45 மணிவரை முரசொலிமாறன்
அரங்கத்தில் கவிஞர்.திலகபாமா,சிவகாசி அவர்கள்
தலைமையில் நடைபெறும் அரங்கில் "இணைய‌ இத‌ழ்க‌ள்-ஒரு
பருந்துப் பார்வை"என்ற தலைப்பில் உரைநிகழ்த்த‌
வருமாறு திருமதி லூசியா லெபோ அவர்களை
அன்போடு அழைக்கிறோம்.

இவண்,
தி.சு.மணியம்,
செயல் இயக்குனர்,
உத்தமம்
தமிழிணையமாநாடு 2010.
இவை இரண்டையும் தங்கள் கவனத்துக்கு
மகிழ்ச்சியுடன் கொண்டுவருகிறேன் .
வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்த அன்பர்கள் அனைவருக்கும் எங்கள்
இருவரின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அனைவருக்கும் நல் வாழ்த்துகள்
நனி நன்றியன்
பெஞ்சமின் லெபோ

இத்துடன் கவிதாயினி வே.பூங்குழலி பெருமாள் அவர்களுக்கு எழுதிய வாழ்த்துப்பா
பழகும் தமிழர்க் கினியவராய்
பசுமைத் தமிழ்க்குச் சாரதியாய்
கழகம் வளரத் துணைநிற்பார்
கமழக் கமழப் பேசிடுவார்
மழைபோல் பொழியும் பேச்சாளர்!
மாண்பிற் சிறந்த பண்பாளர்!
பழுதில் தமிழில் அடுக்கடுக்காய்
பதத்தைப் பதமாய்ப் பொழிந்திடுவார்!

உலகத் தமிழ்ச்செம் மாநாட்டில்
உரையாற் றுதற்குப் பைந்தமிழ்க்கே
இளகும் கலைஞர் அழைப்பதனை
இனிதே ஏற்றுத் துணையுடனே
பலகற் றுயர்ந்த பெஞ்சமினார்!
பரவக் கண்டு பூரித்தோம்!
நிலைபெற் றுலகப் புகழ்இவர்க்கே
நேர இறையைத் தொழுகின்றோம்!

என்றும் அன்புடன்,
ஆறுமுகம்பெருமாள் பூங்குழலிபெருமாள்

Monday 21 June 2010

கவிதைச்சித்தர் கபிலனாருக்கு பாராட்டுவிழா






அனைத்து இந்திய தமிழ்ச்சங்கங்களின் சார்பாக கவிதைச்சித்தர் கபிலனாருக்கு 30.05.2010 அன்று பாரீசில் மாபெரும் பாராட்டு விழா சிறப்புற நடைபெற்றது.

நூல் அறிமுகம்

கவிதாயினி வே.பூங்குழலி பெருமாளின் கவிதைக் கனிகள் நூல் 22.05.2010 அன்று மாலை பாரீசு நகரில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வெளிடப்பட்;டது. இந்நூலைப் பற்றி பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதியதை அளித்துள்ளோம்.





சேன் நதிக்கரை ஓரம் வான் நிலவு வலம் வரும் நேரம்!
புதுவைக் குயிலொன்று பொன்னான பாட்டிசைக்கின்றது
கேட்டவர் மனத்தை நல்லாம் அசைக்கின்றது!
இந்தக் குயில் எந்தக் குயில்?
அருமை நண்பர் ஆறுமுகம் பெருமாளின்
பெருமைக்குரிய துணைவியார்!
கலைமாமணி இயலிசைப் புலவர்
இரா வெங்கடேசனாரின் தவப் புதல்வியார்!
இளங்கலை, முதுகலை, இளமுனைவர், ஆசிரியர் பயிற்சியெனப்
பலவகை பட்டங்களை வாரிக் குவித்தவர்! வாங்கிக் களித்தவர்!
காரைக்குடி அழகப்பாப் பலகலைக் கழகத்தின்
தொலைதூரக்கல்வி இயக்கத்தின்
பகுதி நேரப் பேராசிரியர்.
துள்ளி விளையாடும் பள்ளிப் பருவம் முதல்
பல்வேறு போட்டிகளில் பலவகைப் பரிசுகளை
அள்ளிச் சென்றவர் @ ஜெயித்துக் காட்டுவோம்
வெற்றி நிச்சயம் நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பயிற்றுநர்.
புதுவை சுiபாவ தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பை நிகழ்த்தியவர்.
பட்டி மன்றங்களோடு ஒட்டி உறவாடுபவர்.
கவியரங்கங்களில் அவை ஈர்ப்பவர்.
இனிய குரலெடுத்து இன்னிசையால் செவிக்கு விருந்தளிப்பவர்.
கருத்தரங்கா? விவாத மேடையா? பொருத்தமான நூல் திறனாய்வா?
நிழ்ச்சித் தொகுப்பா? நீண்ட தனிப் பேச்சா?
இத்தனைக்கும் ஈடு கொடுக்கும் வித்தகர் இவர் என்றால் வியப்பாக இல்லையா!
உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை!
அத்தகையவர்தாம் நம்
பூங்குழலி பெருமாள்!
புவி போற்றும் பூங்குழலி பெருமாள் இன்று தருகிறார்
'கவிதைக் கனிகளை"!
பூங்குழலி பெருமாள் கவிதைகள்
பலாப் பழக் கவிதைகள் அல்ல
வெட்டிப் பிளந்து கோது களைந்து
கொம்புத் தேன் அளைந்து உண்பதற்கு!
பூங்குழலி பெருமாள் கவிதைகள்
மாங்கனியாய் இனிப்பவை!
தேங்குழலாய்ச் சுவைப்பவை!
வெற்றுக் கவிதைகளா அவை?
இல்லை, இல்லை!
சுற்றுப்புறச்சூழல் முதல்
சுனாமி வரை பலவேறு கருத்துகளை
அள்ளித் தெளிக்கும் துள்ளிக் குதிக்கும்
குற்றாலத் தேனருவிச் சாரல்கள்.
கவிதைக் களிப்பு தரும் மதுக்குட ஊறல்கள்!
இம்மா உலகம் நமக்குத் தொடங்குவதே
அம்மாவின் வயிற்றிலேதான். அந்த
அம்மாவை முதலாக வைத்தே
தம் நூலைத் தொடங்குகிறார்.
நேரில் நின்றால்தான் அம்மா நம் நெஞ்சில் நிறைவாள்
வேரிடம் சென்றால் நம் நினைவில் அவள் மறைவாள்!
கவிதைக் கனிகள் தரும் கவிஞர்
எங்கெல்லாம் அம்மாவைக் காணுகிறார் பாருங்கள்!
'ஊனில் உயிராய் உறைபவள் அம்மா!
மணியுள் ஒலியாய் ஒலிப்பவள் அம்மா!
2
விளக்கில் சுடராய் ஒளிர்பவள் அம்மா!"
கண்ணிலிருந்து மறைந்தாலும் கருத்தில்
எண்ணத்தில் நீக்கமற நிறைபவள் அம்மாதான்!
கவிதாயினியின் பொருள் பொதிந்த சொற்கள்
புவிமீது நிலைக்கும் தாமே!
வயலாமை, கடலாமை, புழுக்காமை... எனப்
பலஆமைகளை நாமறிவோம் ஆனால்,
நமக்குள்ளே புகுந்து நம்மில் வளர்ந்து
நமக்குள்ளே வாழ்ந்துவரும் ஆமைகளை நாமறிவோமா?
அகக் கண்ணால் பாhத்தே வீட்டில் நம்மில்
புகக் கூடாத ஆமைகளைப்
பாட்டில் பட்டியல் இடுகிறார் பாருங்கள் :
கல்லாமை, முயலாமை, பொறாமை, நன்மை செய்யாமை,
அடக்கம் இல்லாமை...
இப்படிப் பட்ட ஆமைகளை
நம்மில் இல்லாமையே
நமக்குரிய நல்லாண்மை என்று
கவிதாயினி உணர்த்தும் போது மெய் சிலிர்க்கிறோம.;
புதியதோர் உலகம் செய்வோம் பக் 5, 13 :
'புதியதோர் உலகம் படைத்திடல் வேண்டும்!
அன்பால், நட்பால், பண்பால், பக்தியால்
'புதியதோர் உலகம் படைத்திடல் வேண்டும்!"
எனக் கவிதை பாடும் கவிதாயிpனி,
'புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்று
பாடிய பாவேந்தனின் கொள்ளுப் பேத்தியாகவே
காட்சி தருகிறார்!
சுற்றுப் புறச் சூழலில அவருக்குள்ள அக்கறையைப்
பலபக்கங்களில் (17, 19, 23) காண்கிறோம். குறிப்பாக,
'சுற்றுப் புறச்சூழல் என்றும்
வற்றிப் போகக் கூடாது" என்ற வரிகளில்
அவர் அக்கறையும் கவலையும் நன்கு புலப்படும்.
'கல்லுக்குள் கவிதை" (பக் 45)
நல்ல பயிர் விளையும் விதை!
சத்தான கருத்தொன்றை
'சிலையில் இருக்கும் தத்துவம அறிந்தால்
நிலையில் உயரும் பாரத நாடே"என
முத்தாக அள்ளித் தருகிறார்.
படித்துப் பாருங்கள் பிடித்துப் போகும்.
இவர் தரும் புதுக் கவிதைகள்
படிக்க படிக்க இனிப்பவை!
இனிமை பயப்பவை!
தீக்குச்சிகளுக்கும் புதுமைப் பெண்களுக்கும்
பாக்குச்சிகளால் பாலம் போடுகிறார், பாருங்கள் :
'உரசியவுடனே
பொங்கி எழுகின்ற
புதுமைப் பெண்கள்" என்று
அடடா, அடடா வெகு அருமை!
வெண்மேகம் (பக் 37), வானவீதி (பக் 81), தென்னங் கீற்று பக் 85) என்று இவர் வரையும்
புதுக்கவிதைக் கோலங்கள் தமிழ் வான வீதியின் தோரணங்கள!;
3
நடசத்திரக் கூட்டங்கள் (பக் 90)
'வரதடசிணைக் கொடுமையால
வரன் தள்ளிப் போன
மண்ணுலகப் பெண்களின்
கண்ணீர் முத்துகளோ!" எனக் கண்ணீர் வடிக்கும் இவர் கவிதை வரிகளில்
சேக்சுபையரின் ழுலியட்டைக் காணலாம் :
.'..when he shall die
take him and cut him out in little stars
And he will make the face of heaven so fine
That all the world will be in love with night!" - Romeo & Juliette Act III Sc II

தொலைக் காட்சி (பக் 92)
பற்றிய இவர் பார்வை :
'வீடடு;ப பெண்களின்
ஓட்டினைப் பெற்று
ஆட்சி நடத்தும் அரசியல்வாதி".
நாட்டு நடப்பினை நல்ல அங்கதத்துடன் எடுத்துக்
காட்டிவிடும் இவர் நயமே, நயம்!
மின் விசிறி (பக் 93) வழியே சமய ஒற்றமையைக் காட்ட
முடியும் என யார்தான் ஊகிக்க முடியும்..
இவர் காட்டுகிறார், படித்துப் பாருங்கள் (பக் 93).
உப்பளவும் உதவாத உருப்படா இளைஞர்கள் எனச் சாக்கிரட்டீசால ; 'புகழப்பட்ட"
இளைஞர்கள் இவர் பார்வையில்
'சாதிகளை மிதித்துவிட்டுச்
சமத்தவத்தைப் பரப்ப வந்த
சோதிச் சுடர்களாய்" ஒளிறுகிறார்கள் பாருங்கள் பக் 95 -இல.;
மரபுப் பாடல்களிலும் உரம் போட்ட செடிகளாய்
இவர் கவிதைக் கனிகள் :
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப் பாக்களில்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை இவர் அறிமுகப் படுத்தும் அழகே அழகு!
(பக் 101 முதல் 110 வரை).
'தாமருந்தி மகிழ்ந்த வொரு
தவமுனியின் காவியத்தை
நாமருந்திக் களித்திடவே
நயமாகத் தந்தகவி" எனக் கம்பனை நமக்குத்
தீட்டிக் காட்டும் இவர் திறமே திறம்! (பக் 65).
அறிஞர் அண்ணா, காமராசர், எம்சியார்... எனப் பலருக்கும்
பாட்டு வழங்கும் வள்ளல் ஆகிறார் கவிதாயினி பூங்குழலி.
தமிழ்ப் பற்று நலமெல்லாம் பெற்றுத் தழைத்தோங்கும் கவியரசி பூங்குழலி பெருமாள்
முத்தாய்ப்பாய்,
'வல்லரசு நாடாய் மாறப் போகும் இந்தியா அழகு" எனத் தம் நூலை நிறைவு செய்கையில்
பாரதத் தாயொடு நாமும் கவிதாயினியை மனதார வாழத்துகிறோம.;
கவிதாயினியின் கரம் பிடித்துக் கவிதைக்கு உரம் வடித்து அவரீன்ற முதல் குழந்தைக்கு
அழகான ச(அ)ட்டை வடிவமைத்து உதவிய கணவர் பெருமாள் ஆறுமுகம் பெரும்
பாராட்டுக்கு உரியவர் என்பதில் ஐயமே இல்லை!-பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

Tuesday 8 June 2010

பிரான்சு முத்தமிழ்ச்சங்கம் நடத்திய இலக்கியவிழா பாராட்டுரை

lucky shajahan May 20 10:19AM +0300 ^

நிகழ்ச்சி பற்றிய வர்ணனை மிக அற்புதமாக இருந்தது..இணைக்கப்பட்ட புகைப்படங்களும்
அருமை.. பாரீஸ் நகரில் எங்கள் அன்புக்குரிய நண்பர் பெருமதிப்பிற்குரிய
பெஞ்சமின் லெபோ இது போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அற்புதமாக நடத்தி தமிழுக்குத்
தொண்டாற்றி வருவதை மனதார
பாராட்டுகிறோம்..

தாயகத்தில் நடைபெறும் தமிழ் மாநாட்டுக்கு திரு.பெஞ்சமின் லெபோ அரசு சார்பில்
அழைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த செய்தி அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது, இங்கு
எங்கள் அன்புக்குரிய ஐயா முனைவர் மாசிலாமணி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
உங்கள் இருவருக்கும் எழுத்துக்கூடமும் - ரியாத் தமிழ்ச்சங்கமும் தங்கள் உளம்
மகிழ்ந்த பாராட்டுகளையும் - வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. வாழ்க
தமிழ்..
2010/5/20 Benjamin LE BEAU

> பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா

> 12 -ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.


நலம்சால் நண்பருக்கு
சென்னைப் பேராசிரியர் முனைவர் மறைமலை அவர்கள் நம் இலக்கிய விழா வருணனையைப்
படித்துவிட்டு உடனடியாக எழுதிய பாராட்டு மடலை அனுப்புகிறேன்.

இவர் பேரா; சி. இலக்குவனாரின் தவப் புதல்வர்.
சென்னையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்..
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் visiting professor.

To: tamil-ulagam@googlegroups.com


படிக்கப் படிக்கப் பேரின்பம்!மகிழ்வூட்டும் இலக்கியச் செய்தி!இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழ்த்துறைகளிலும் வித்தகம் வாய்ந்த கலைஞர்கள் பாரிசுப் பெருநகரில் நிறைந்துள்ளதை அறியுந்தோறும் நெஞ்சம் மகிழ்வால் நிறைகிறது.
நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்த அத்துணை வித்தகர்களுக்கும் தாய்த்தமிழகத்தின் சார்பில் உளமுவந்த பாராட்டுகள்!
மனமார்ந்த வாழ்த்துகள்!
வெல்க நும் தமிழ்ப்பணி! ஓங்குக தமிழினம்!
அன்புடன்,
மறைமலை

இலக்கிய விழா செய்திகள் வெளியான பத்திரிகைகள் :

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamils%20Abroad&artid=245671&SectionID=178&MainSectionID=178&SEO=&Title=பாரிசு%20%20நகரில்%20தமிழ்%20இலக்கிய%20விழா

http://www.vallamai.com/?p=68

http://sangamamlive.in/index.php?/content/view/7689/31/


http://tamilkurinji.com/ilakkyam_detail.php?id=10722

http://tamilkurinji.com/ilakkia%20vizhaa%20in%20Paris/

http://www.mouttamijeasso.blogspot.com/

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=4349&Country_name=Europe&cat=new

Thursday 20 May 2010

பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா 12 -ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

இலக்கிய விழா :
முத்தமிழ் மன்றமும் தமிழ் வாணி இணையத்தளத் தாளிகையும் சேர்ந்து ஆண்டு தோறும் தமிழ் இலக்கிய விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் நடந்தது. சிரமங்கள் இருந்தாலும் சிகரம் தொடும் அளவுக்குச் சிறப்பாகவே நடத்தி முடித்தார், அவ்விரண்டின் நிறுவனரும் தலைவருமான அடியார்க்கன்பன் திரு கோவிந்தசாமி செயராமன். விழா நடந்த இடம் :Maison de l'Inde, 7 (R) Boulevard Jourdon, 75014 PARIS . நாள் : 02/05/2010 சனிக்கிழமை மதியம் 3 மணி அளவில் விழா தொடங்கியது. திரு & திருமதி வீரபத்திரன் இணையர் மங்கல விளக்குக்கு ஒளியூட்டினர். 'அகர முதல...' எனத் தொடங்கும் திருக்குறளைத் தம் கணீரென்ற குரலில் கடவுள் வாழ்த்தாகப் பாடிய ஆசிரியர் பி. சின்னப்பா, M.A, B.Ed தொடர்ந்து, ''வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே ..." என்ற பாவேந்தன் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாகப் பாடினார். (புதுச்சேரி மாநிலத்தில் இந்தப் பாடலைத்தான் தமிழ்த் தாய் வாழ்த்தாகப் பாடுவது மரபு).

வரவேற்பு நடனம் :
செல்விகள் கோதண்டம் சாரா, ழுலியா இருவரும் பரத நாட்டியம் அழகாக ஆடி அனைவரையும் வரவேற்றனர். திரான்சி நகர மன்ற உறுப்பினரான திரு அலன் ஆனந்தன் தலைமை ஏற்க, பேராசிரியர் ப. தசரதன் (தலைவர், பாரிஸ் தமிழ்ச் சங்கம்) முன்னிலையில் விழா மெல்லத் தொடங்கியது. அடியார்க்கன்பன் திரு கோவிந்தசாமி செயராமன் அனைவரையும் வரவேற்றார். செல்வி கரீன் இலட்சுமி செயராமன் பிரஞ்சு மொழியில் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பெற்றவர் இருவர். அவர்களுள் ஒருவர் கவிஞர் ழிழோழ் புரோஸ்பர், (இவர் மொரீசியஸ் தீவின் தேசியக் கீதம் இயற்றிய கவிஞர் ; அந்நாட்டின் கலை பண்பாட்டுத் தூதுவராகப் பணியாற்றி வருகிறார் ) மற்றவர், திருமிகு ரஜோல். இவர் மடகாஸ்கார் நாட்டுத் தூதுவராலய அதிகாரி. இவர்கள் இருவரும் மேடை ஏற்றப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டனர். அடுத்து, இந்திய சினி விழாத் தலைவரான திரு தமிழியக்கன் தேவகுமாரன் மேடை ஏறினார். எம் ஜி ஆர் பேரவை தலைவர் திரு முருகு பத்மநாபன், திருவள்ளுவர் கலைக்கூடம் தலைவர் திரு அண்ணாமலை பாஸ்கர், வொரேயால் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் திரு பாண்டுரங்கன் இலங்கைவேந்தன் வாழ்த்துரைகள் வழங்கினர். பின்னர், விழாத் தலைவர் திரு அலன் ஆனந்தன் தம் தலைமை உரையை ஆற்றினார். திரு தமிழியக்கன் தேவகுமாரன் சிறப்பு விருந்தினர்களைப் பற்றிப் பிரஞ்சு மொழியில் எடுத்துரைத்தார். பின், சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை, பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்கள் பிரஞ்சு மொழியில் ஏற்புரை நிகழ்த்தி நன்றி கூறினார்கள்.

கவியுரைகள் :
அடுத்த நிகழ்ச்சியாகக் கவியுரை நடைபெற்றது. முதுபெருங் கவிஞர் கவிதைச் சித்தர் கண. கபிலனார் 'இலக்கியமும் வாழ்வும்' என்ற தலைப்பில் அழகிய கவிதையை வடித்தார். இலக்கியமும் வாழ்வும் தனித்தனி அல்ல ; இரண்டும் ஒன்றே என்ற கருத்து அவர் கவிதையில் ஒலித்தது. ' வெளி நாட்டில் தமிழ்ப் பெண்கள் ' என்ற தலைப்பில் கவிதாயினி பூங்குழலி பெருமாள், M.A,M. Phil கவிதை ஒன்றைச் சிறப்பான முறையில் எழ்திப் படித்தார். நகையும் சுவையுமாக அவர் கவிதை அமைந்தது.

நாட்டிய விருந்துகள் :
இடை இடையே மோ நகரப் பூக்கள் கழக் கண்மணிகள் செல்விகள் திக் சந்தியா, ராஜி செல்வதாரணி, சக்ரேசு பெரோத்தா, சக்ரேசு ப்ரீத்தா முதலியோரும் போந்துவாசு கலா பவனம் மாணவியர் செல்விகள் தீபிகா மித்திரன், பிரியங்கா மித்திரன், கணேஷ் ஆர்த்தி, அர்த்தனா, ஆர்த்தி முதலியோரும் நாட்டிய விருந்துகளை வழங்கி அவையை மகிழ்வூட்டினார்கள். செல்வன் இராமு பாலாஜி வள்ளுவனாகவும் பாரதியாகவும் வேடம் புனைந்து வந்து திருக்குறள்களையும் பாரதி பாடல்களையும் மழை எனப் பொழிந்தபோது அவையினர் கை தட்டி ஆரவாரித்து ரசித்தனர். செல்வனுக்கு மிகப் பொருத்தமாக ஒப்பனை செய்து வள்ளுவனாக, பாரதியாக நம் முன் காட்டிய கண்ணுள் வினைஞர் திரு அண்ணாதுரைக்குப் பொனாடை போர்த்திப் பாராட்டினார் திரு கோவிந்தசாமி செயராமன். பிறகு, வந்திருந்தோர் வயிறு நிறையும் வண்ணம் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இலக்கியச் சிறப்புரைகள் :
பின், சிவனருட் செல்வர் சுகுமாரன் முன்னிலையில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் இலக்கியச் சிறப்புரைகள் நடைபெற்றன. தம் தலைமை உரையில் 'தற்காலப் பார்வையில் திருக்குறள்' என்ற தலைப்பில் அவர் பேசினார். அவர் பேச்சில் நகைச் சுவை விசிறி வீசியது ; புதுப் புதுக் கருத்துகள் மின்னலடித்தன . இக்கால இளைஞர்கள் எப்படித் திருக்குறளை அலசுகிறார்கள், இக்கால அறிவியல் கருத்துகள், மருத்துவக் கருத்துகள் ... எப்படி அக்காலத் திருக்குறளில் பொதிந்துள்ளன... என்பனவற்றை அவர் சிறப்புற விளக்கினார். இக்காலக் கணினியின் படைப்பான web cam concept, 'கண்ணும் கொளச் சேரி நெஞ்சே...' என்ற குறளில் பொதிந்து இருப்பதை அவர் விளக்கியபோது அவையினர் வியப்பில் ஆழ்ந்தனர்.

பலவேறு இலக்கியங்கள் :
'ஊழ் வினை உருத்து வந்தூட்டுமா?' என்ற தலைப்பில் அடுத்து உரை ஆற்றியவர் திரு ஆல்பர்ட் அறிவழகன்,. ஆன்மிகம் கலந்து பேசிய அவர் ஊழ் வினை கண்டிப்பாக உருத்து வந்து ஊட்டும் என்பதை வலியுறுத்தி எப்படி என்பதை விளக்கினார். 'கம்பனுக்கு மிஞ்சிய கொம்பன் எவனும் இல்லை' என்ற தன் கருத்தைக் கேட்டார்ப் பிணிக்குந் தகைமையில் நிலை நாட்டிப் பேசியவர் பேராசிரியர் தலின்ஞான் முருகையா. 'பாரதி எப்படித் தமிழ்க் கவிதைக்குச் சாரதி 'ஆனான் என்பதை அழகாக விளக்கினார் புலவர் இரா. பொன்னரசு. இறுதியாக உரை ஆற்ற வந்த திருமதி லூசியா லெபோ, 'பாரதிதாசனைப் பார் , அவன் தமிழுக்கே அதி தாசன் பார் ' என்று கற்பனை வளத்தோடு சுட்டிக் காட்ட இலக்கியச் சிறப்புரைகள் நிறைவு பெற்றன. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம், பாரதி, பாரதிதாசன் பாடல்கள் எனப் பல இலக்கியங்கள் அலசப்பட்டு அருமையான பல கருத்துகள் புலபடுத்தப்பட்டதை மக்கள் பேரார்வத்துடன் ரசித்து வரவேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும்

நாட்டியமாடிய நடன மணிகளுக்கும் செல்வன் பாலாஜிக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கினார் திரு சந்திரன்.

முடிவுரை :
இடைவேளையின் போது புதுச்சேரிக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தார் பேராசிரியர் பெஞ்சமின். சுய அறிமுகத்துக்குப் பின் பேசிய திரு கோவிந்தசாமி செயராமன், புதுச்சேரிக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஒன்று தொடங்கலாம் என்ற கருத்தை முன் வைத்த போது பலத்த கை தட்டல். வழக்கம் போல், தன் நகைச் சுவை கலந்த பேச்சால் அவையைக் கவர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் லெபோ நிகழ்சிகளைச் சுவையாகத் தொகுத்து வழங்கினார். முத்தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த திரு பாலா ரவி இறுதியில் நன்றி கூற இலக்கிய விழா இனிதே நிறைவு அடைந்தது.

பாரிசுளிருந்து நேரடி வருணனை : புதுவை எழில்

சுவிசில் திருவள்ளுவர் மாநாடு









14,15,16 ஆம் தேதிகளில் நடந்த சுவிசில் திருவள்ளுவர் மாநாட்டிற்கு பிரான்சிலிருந்து நமது பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தம்பதியினரும், மற்றும் தமிழன்பர்கள் பலரும் சென்றிருந்தனர். விழா ஏற்பாட்டினை சுவிசு நண்பர் வாகீசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். விழா மிகச் சிறப்பாக நடந்ததாக நம் பேராசிரியர் அவர்கள் கூறினார்கள். அவர் அங்கு எடுத்த புகைப் படங்களை இங்கே தந்துள்ளோம்.

Sunday 16 May 2010

எழுத்தாளர் அனுராதா ரமணன் மரணம்

சென்னை : மே 16,2010 பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 62. இறுதிச் சடங்கு நாளை மாலை நடக்கிறது. பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், 1977ம் ஆண்டிலிருந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நூற்றுக்கணக்கான நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய, 'சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள்' உள்ளிட்ட பல நாவல்கள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன. இவரது, 'மழைக்கால மல்லிகைகள், சந்திப்பு தொடரும்' நாவல்கள் பிரபலமானவை

Saturday 15 May 2010

இலக்கியத் தேடல் 5 ஆம். கூட்டம்


அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு
அன்பு வணக்கம்.
அடுத்த இலக்கியத்தேடலின் 5 ஆம் கூட்டம்
சூன் திங்கள் 6 ஆம் நாள் (06.06.2010)
ஞாயிறு மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது;
இடம் :
அண்ணாமலைப் பல்கலைகழகம்
70 rue Phillipe de Girard
Paris 75018
தலைப்பு :
'சிறுவர் இலக்கியம்'
உரை தருபவர் :
திருமதி லூசியா லெபோ.

அதற்கு அடுத்த இலக்கியத்தேடல் கூட்டம்
செப்டேம்பெர்த் திங்கள் 18 ஆம் நாளில்
திரு நாகரத்தினம் கிருஷ்ணா இல்லத்தில் நடைபெறும்.
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
தொடர்புகளுக்கு :
01 39 86 29 81
06 03 58 23 38

2010 ஆம் ஆண்டு திருவள்ளுவர் கலைக்கூடம் வழங்கிய விருதுகள்

Sunday 25 April 2010

முத்தமிழ்ச் சங்கம் நடத்தும் இலக்கிய விழா




நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்

வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு,

கனவு மெய்ப்படவேண்டும், நந்தகுமாரா நந்த குமாரா ஆகியவற்றிர்க்குப்பிறகு மூன்றாவதாக அண்மையில் வெளிவந்துள்ள எனது சிறுகதை தொகுப்பு சன்னலொட்டி அமரும் குருவிகள், புதுமைப்பித்தன் பதிப்பகம் கடந்தமாதம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான பாவண்ணண் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையை தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

அன்புடன்
நா.கிருஷ்ணா
------------------------------------------------------------------------


நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்
-பாவண்ணன்

கடந்த பத்தாண்டுகளாக இலக்கிய இதழ்களில் அடிக்கடி காண நேர்கிற பெயர்களில் ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணா. தொடக்கத்தில், பிரெஞ்சிலக்கிய ஆளுமைகளைப்பற்றிய இவருடைய அறிமுகக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. பிறகு, சில படைப்புகளை நேரிடையாகவே பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். எதார்த்தவகைக் கதைகளையும் அறிவியல் புனைகதைகளையும் இணைய தளங்களிலும் இலக்கியச் சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதினார். இதற்கிடையில் நீலக்கடல், மாத்தாஹரி என்னும் நாவல்களை எழுதி முடித்தார். தன் எழுத்தாக்கங்கள் வழியாகவே தன் ஆளுமையை வெளிப்படுத்தி தமிழ்ச்சூழலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். இவருடைய இடைவிடாத உழைப்பும் அக்கறையும் பெரிதும் மதிப்புக்குரியவை.

வாழ்வின் சிக்கல்தன்மையை முன்வைத்து உரையாடும் இவருடைய சிறுகதைகள் எக்கணத்திலும் அதை எளிமைப்படுத்திப் பார்க்காமல் சிக்கலின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் இயங்குகின்றன. இதுவே இத்தொகுதியின் சிறப்பம்சம் என்று சொல்லலாம். ஒருசில கதைகளில் அந்த மையத்தை அவர் எளிதாக வந்தடைகிறார். சிலவற்றில் முட்களும் புதர்களும் மண்டிக்கிடக்கிற வழியை விலக்கமுடியாமல் தடுமாறி, சற்றே சுற்றியலைந்து களைப்போடு வந்தடைகிறார். இருவிதமான கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. எத்தருணத்திலும், கலையம்சம் குன்றாமல் ஒரு படைப்பை முன்வைக்கவேண்டும் என்பதில் இவருக்குள்ள ஈடுபாடு பாராட்டத்தக்க ஒன்று. இந்த ஈடுபாடும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்கு அவரை அழைத்துச் செல்லும். இவருடைய சிறுகதைகள் புதுச்சேரி, பாரிஸ், இலங்கை என பல களங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. இவருடைய பின்னணித் தேர்வு ஒரு கதையிலும் பிசகவில்லை என்பதை சிறப்பம்சமாகச் சொல்லவேண்டும்.

"சன்னலொட்டி அமரும் குருவிகள்" இத்தொகுதியில் உள்ள முக்கியமான கதைகளில் ஒன்று. மழைத்தூறலுக்குப் பயந்த குருவிகள் இவை. சொந்தக் கூட்டை இழந்தவை. குளிரும் காற்றும் தாக்க நடுங்குபவை. தொடர்ந்து வானத்தில் பறக்கவோ, மரக்கிளையில் அமரவோ சக்தியில்லாதவை. உட்கார்ந்து ஆசுவாசமடைய அவற்றுக்கு ஈரமில்லாத ஒரு இடம் உடனடியாக தேவைப்படுகிறது. எங்கெங்கோ அலைந்தலைந்து இறுதியாக ஒரு வீட்டை அடைகின்றன. ஆனால் அவற்றுக்கு வீடு தேவையில்லை. சற்றே கொஞ்சமாக இடமிருக்கிற சன்னலோரம் மட்டுமே போதும். வீடு தனக்குரிய இடமல்ல என்பது குருவிகளுக்குத் தெரியாததல்ல. ஆபத்துக்கு வேறு வழியில்லை என்பதால் வந்துவிட்டன. அந்த ஆபத்துக்கட்டத்தில்கூட தன் எல்லையை மீறி உள்ளே செல்லவில்லை. நடுக்கத்துடன் ஓரமாக ஒதுங்கி நிற்கின்றன. ஆனால் குருவிகளைப்பற்றிய கதை அல்ல இது. கூடில்லாத குருவிகளைப்போல வாழ பொருத்தமான ஒரு இடமோ, நிலமோ இல்லாத மனிதர்களின் கதை. ஒருவன் இலங்கையைச் சேர்ந்தவன். இன்னொருவன் புதுச்சேரிக்காரன். இருவருமே சொந்த இடத்தில் தம்மைப் பொருத்திக்கொள்ள இயலாதவர்கள். தங்குமிடம் தேடி குருவியைப்போல அலைகிறவர்கள். போலிக் கடவுச்சீட்டுகள்மூலம் நாடுவிட்டு நாடு வந்தது பிழையானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்களுடைய பயணம் ஒதுங்குவதற்கு ஒரு இடம்தேடி. உயிரைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு வேலையையும் தேடி. இலங்கைக்காரனாக அடையாளம் சுமந்து புதுச்சேரிக்காரனும் இந்தியனாக அடையாளம் சுமந்து இலங்கைக்காரனும் பயணப்பட்டு அகப்பட்டுக்கொள்வது ஒருவித துயர்முரண். அந்தத் துயர்முரண் தண்டனைக்குக் காத்திருக்கும் தருணத்திலும் அவர்களை புன்னகை புரியவைக்கிறது. நட்புடன் உணரவைக்கிறது. இன்னும் இப்படி நிறைய எழுதிக்கொண்டே போகலாம். மொத்தத்தில், குருவியின் படிமம் கதைக்கு அழகையும் வலிமையையும் சேர்க்கிறது. எளிமையும் பயமும் கொண்ட பறவை அது. பற்றிக்கொள்ள ஒரு பிடிமானம் தேடி வந்தவர்களை அடையாளப்படுத்த இதைத்தவிர பொருத்தமான படிமம் வேறென்ன இருக்கமுடியும்?

"நாராய் நாராய் செங்கால் நாராய்" என்பது இன்னொரு அழகான சிறுகதை.
தீராத வாழ்வின் துயரத்தை உணர்த்தும் சத்திமுத்தப்புலவரின் கவிதையைப்போலவே நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதையும் வாழ்வின் துயரத்தை முன்வைக்கிற ஒன்று. வானில் பறக்கும் நாரையின் பயணம் ஒரு செய்தியைச் சுமந்துகொண்டு பறக்கிறது. எங்கோ தொலைதூரத்தில் துயரத்தில் தோய்ந்திருக்கும் மனைவியிடம் தான் உயிர் பிழைத்திருப்பதையே செய்தியாகச் சொல்லியனுப்பிய புலவரின் அன்றைய துயரக்கதைதான் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போர்நிறைந்த இலங்கைச்சூழலில் உயிருடன் இருப்பதே இன்றைய தேதியில் ஒரு பெரிய செய்தி. அதைச் சுமந்தபடி கடலுக்கு மேலே வானத்தில் அங்குமிங்கும் பறந்துகொண்டிருக்கின்றன நாரைகள். செய்தி சுமந்த நாரைகள் வானத்தில் பறந்துகொண்டிருக்க, புவியின்மீது ஒவ்வொரு கணத்திலும் உயிருக்குப் போராடும் மனிதர்களின் நடமாட்டத்தைக் காண்கிறோம். பதுங்குகுழி வாழ்க்கை, துப்பாக்கிமுனைக் கேள்விகள், எதிர்பாராத மரணங்கள் என எல்லாமே கட்டுக்கோப்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. பீதிநிறைந்த படகுப்பயணத்தை வாசிக்கும்போது நம் மனமும் பீதியில் துவளுவதை உணரமுடிகிறது.

மனத்தின் கோலத்தை நுட்பமான சித்தரிப்புகளுடன் உணர்த்தும் சிறுகதை "புலியும் பூனையும்". புலியும் பூனையும் வேறுவேறு ஆளல்ல. புலியாக இருக்கும் ஒருவரே ஒரு சமயத்தில் பூனையாகப் பதுங்கிப் பம்முகிறார். காலம் முழுக்க சீற்றம் நிறைந்த புலியாகவும் உறுமும் புலியாகவும் நகம்கொண்ட பாதத்தால் அறைகிற புலியாகவும் முரட்டுப் பிடிவாதமும் முறைக்கும் விழிகளும் கொண்ட புலியாகவும்மட்டுமே பார்த்த ஒருவரை சூழ்நிலையின் நெருக்கடிகள் பின்வாங்கிப் பதுங்கவைக்கின்றன. ரௌத்திரத்துக்கு நேர்எதிராக நடுக்கத்தை புலியின் முகத்தில் முதன்முதலாகக் காணநேர்கிற ஒருவர் எப்படி உணரக்கூடும்? உறுமலான அதட்டல்களால் கிட்டத்தட்ட ஒரு அடிமைபோல தன்னை நடத்துகிற கணவன் நடுங்கித் தடுமாறுவதை மிகஅருகில் உட்கார்ந்து அணுஅணுவாகப் பார்க்க நேர்கிற மனைவி எப்படி உணர்வாள். அதைத்தான் படிப்படியாக சித்தரித்தபடி செல்கிறது கதை. முதலில் ஒரு நம்பமுடியாமை. அச்சம். மரபின் பழக்கம் அவளை அப்படி அழுத்துகிறது. பிறகு மனஆழத்தில் சட்டென திரண்டெழுகிறது ஒருவித எதிர்ப்புணர்வு. தன் களிப்பு வெளிப்பட்டுவிடாதபடி அச்சமெனும் போர்வையைப் போர்த்தியபடி உள்ளூர கணவனுடைய நடுக்கத்தைக் கொண்டாட்டத்தோடு பார்க்கிறாள் அவள். ஆவேசத்துக்கும் நீண்ட உரையாடலுக்கும் இடம்கொடுக்கக்கூடிய தருணங்களில் எல்லாம் அவை வெளிப்பட்டுவிடாதபடி கவனமாக எழுதப்பட்டுள்ளது சிறுகதை. எந்த இடத்திலும் கலைத்தன்மைக்குப் பாதகம் நேராதபடி பார்த்துக்கொள்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

நான் படித்த அளவில் இக்கதைகள் எனக்கு வழங்கிய அனுபவத்தையே இங்கு முன்னுரையாக எழுதியிருக்கிறேன். இத்தொகுதியை முதன்முதலாக வாசிக்க நேர்கிற இன்னொரு வாசகர் இதே திசையில் செல்லவேண்டும் என்பது எவ்விதமான கட்டாயமும் இல்லை. அவருடைய சுதந்திரப் பயணத்துக்கு இக்குறிப்புகள் ஒருபோதும் தடையாக இருக்காது. ஆனால், தன் வாசிப்பின் முடிவில் இதேபோல இன்னொரு முன்னுரையை அவர் எழுதிப் பார்க்க இது தூண்டுகோலாக இருக்கும்.

நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

அன்புடன்
பாவண்ணன்

5ஆம்ஆண்டு விழா

வொரெயால் தமிழ்க் கலாச்சாரமன்றம் பிரான்சு சார்பாக 10.04.2010 அன்று பிற்பகல் 3 மணியளவில் வொரொயாலில் விழா நடைபெறவுள்ளது. சங்கத்தின் தலைவர் திருமிகு இலங்கைவேந்தன் பாண்டுரங்கன் அவர்களால் விழா ஏற்பாடு நடைபெறுகிறது. தொடர்புகளுக்கு பேசி எண் 06 10 43 22 16 – 06 61 34 32 89 – 01 30 32 96 43
E.mail association_tamoule@yahoo.fr

6ஆம்ஆண்டு கலைவிழா

திருவள்ளுவர் கலைக்கூடம் பிரான்சு சார்பாக 03.04.2010 அன்று பிற்பகல் 3 மணியளவில் மோமாங்கி என்ற ஊரில் விழா நடைபெறவுள்ளது. சங்கத்தின் தலைவர் திருமிகு அண்ணாமலை பாஸ்கரன் அவர்களால் விழா ஏற்பாடு நடைபெறுகிறது. தொடர்புகளுக்கு பேசி எண் 06 28 26 20 45 , email : annamalebhasker@yahoo.fr

Sunday 11 April 2010

இலக்கியத் தேடல் 4 ஆம். கூட்டம் + முனைவர் திருமுருகனார் நினைவு நாள்







அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே!
வணக்கம்.
இலக்கியத் தேடல் 4 ஆம். கூட்டம் +
முனைவர் இரா திருமுருகனார் முதலாண்டு நினைவு நாள்
மார்ச்சுத் திங்கள் சனிக்கிழமை 06 ஆம் நாள் மாலை 04.30 மணிக்கு நடைபெறும்.
இடம்
Maison de la culture et langue du monde
95 Boulevard d'Oise
95490 Vauréal
RER "A" terminus Cergy Le Haut
Prendre le bus "34 S" Arrêt Le Hôtel de ville (Mairie de Vauréal)
(http://www.stivo.com/voyager/recherche_horaire.php#resulthoraires)
தொடர்புகளுக்கு :
01 39 86 29 81
06 03 58 23 38

தலைப்பு .
நாடக இலக்கியம் 2 ஆம் பாகம்
உரை தருபவர்
திரு பொன்னரசு அவர்கள்

அன்புடன்
பெஞ்சமின் லெபோ

தனித்தமிழ் இயக்கம்

சிலப்பதிகார விழா

நாள்: 2040 சிலை7,(22.12.2009) செவ்வாய் மாலை 6.00 மணி

இடம்: சுப்பையா திருமண நிலையம்

தலைமை: திரு.க.தமிழமல்லன்

தலைவர், தனித்தமிழ்இயக்கம்



தமிழ்த்தாய் வாழ்த்து:

பா. பனிமலர்,அழகி

வரவேற்பு : திரு.க.இளமுருகன்

சிலப்பதிகாரம் ஓதுதல்



செயலறிக்கை:

ஆசிரியை த.தமிழ்க்கொடி

பாட்டரங்கம்

பாவலர்கள்

தமிழ்மாமணி ந.ஆதிகேசவன்

ஆறு.அரங்கண்ணல்

இரா.அருணாசலம் மு.பாலசுப்பிரமணியன்

விசயலட்சுமி

அசோகா சுப்பிரமணியன்

யுகபாரதி, ப.திருநாவுக்கரசு

சச்சிதானந்தம், கலியபெருமாள்



திருவள்ளுவர் படத்திறப்பு

முன்னாள் அமைச்சர் திரு.நா.மணிமாறன்

தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் படத்திறப்பு

திரு.தங்க.சுதர்சனம்

சிங்காரவேலர் படத்திறப்பு

முன்னாள்ஆணையர் தியாகராசன்

பாவலர் தமிழ்ஒளிபடத்திறப்பு

கலைமாமணி கல்லாடன்



சிறப்புரை

முன்னைத் துணைவேந்தர் மாண்பமை பேராசிரியர் க.ப.அறவாணர்

வாழ்த்துரை: மாண்பமை

முன்னாள் முதல்வர்

திரு.ந.அரங்கசாமி

மாண்பமை

உழவர்கரைநகராட்சித்தலைவர் திரு.செ.செயபால்



பட்டிமன்றம்

சிலப்பதிகாரத்தில்

மனங்கவர்ந்தவர்கள்

ஆடவரா? பெண்டிரா?



நடுவர் : பேராசிரியர் இராச.குழந்தைவேலனார்

ஆடவரே

பாவலர் தி.கோவிந்தராசு

பாவலர்அ.உசேன்



பெண்டிரே

முனைவர் நாகசெங்கமலம்

பேரா.விசாலாட்சி

நன்றி:த.தமிழ்ச்செல்வி

தொகுப்புரை:

பேரா.த.தமிழிசைவாணி



அனைவரும்வருக.

தனித்தமிழ்இயக்கம் தட்டாஞ்சாவடி.

புதுச்சேரி -9 தொ.9791629979

Wednesday 31 March 2010

இலக்கியத்தேடல் 3 ஆம் கூட்டம்





இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டம் - தலைப்பு பற்றிய தகவல்கள்
09.01.2010 அன்று
வொரெயால் நகரில் நடைபெறும்
இலக்கியத் தேடல் 3 ஆம் கூட்டத்தில்
திரு பொன்னரசு என்ற கனகராசா அவர்கள் ஆற்றும்
உரையின் சுருக்கம்

நாடக இலக்கியம்

முன்னுரை :

* உலக மொழிகள் தமிழ் மொழியைத் தொன்மை கொள்ளல்
* தமிழ் மொழியை 'முத்தமிழ்” என அழைக்கக் காரணம்
* சங்க இலக்கியத்தில் நாடகம் பற்றிய செய்திகள்
* சிலப்பதிகாரத்தில் 'அரங்கேற்றுக் காதை”யும் தொல்காப்பியத்தில் 'மெயப்பாடடியலும்” கூறும் கருத்துகள் - இயல், இசை இவைகளைத் தவிர நாடகத்தில் செம்மையுற்றொமா? அற்றோமா?


நாடகத் தோற்றம் :

* நாடகம் என்பது என்ன?
* அது எப்படித் தோன்றி இருக்கக் கூடும்
* நாடகத்தை முப்பரிமாணமாகக்கொள்வது சரியா? தவறா?
* நாடகம் மூவரால் இணைக்கப்பட்டது - A.A.A என்றால் என்பது என்ன?

நாடக வளர்ச்சி :

* சிலப்பதிகாரம் காட்டும் நாடக வளர்ச்சி நிலைகள்
* 'ஐந்தாம் வேதம்” எனக்கொள்ளப்படும் 'நாட்டிய சாஸ்திரம்” - அதன் பயன் அறிதல்.
* கி.பி 19 ஆம் நூற்றாண்டில்நாடகத்தின் நிலை அறிதல்.
* கூத்தாடிகள், கலைஞர்கள் - போற்றுதல்
* பார்சி நாடகத்தின் வருகையால் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் செய்த மாற்றம்.
* பார்சி நாடகத்தால் தமிழ் நாடகம் பெற்ற மாற்றங்கள்.

நாடகக் குழக்கள் :

* பார்சி நாடகக் கம்பெனிகளின் பங்கு
* தற்போது 'சபா” நாடககங்களின் பொக்கத் தன்மை
* இவர்கள் நடத்தும் (சபா நாடகக்காரர்கள்) நாடகம், நாடகம்
* நாடகம் - திரைப்படங்கள் : வேற்றுமைகள்.

நவீன நாடகங்கள் :

* நவீன நாடககங்கள் தோன்றக் காரணம் என்ன?
* 'காந்தி கிராமம்” நடத்திய முதல் நாடகப் பயிற்சிப் பட்டறை
* 'இப்டா” - NSD - பொன்றவைகளின் நாடகத்தின் பங்களிப்பு
* புதவைப் பல்கலைகக்கழகம், மதுரைப் பல்கலைக் கழகங்களின் தொண்டுகள்
* நாடக ஆசிரியர்கள் : சே. இராமானுஜம், கிரீஷ் கர்னாட், அல்காசி, அலிப் தன்வீர் போன்றோரின் பணிகள்

நாடக அரங்கம் :

* பலவிதமான நாடக அரங்குகள்
* எதையும் அரங்கமாகப் பயன்படுத்தும் முறை
* செவ்வக அரங்கின் இன்றைய பயன்பாட்டு நிலை
* மேடையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்துதல்
* உயிரற்ற பொருட்களை உயிருள்ளவைகளாகப் பயன் படுத்துதல்

முடிவுரை :

* நாடகத்தின் இன்றைய நிலை என்ன?
* நவீன நாடகத்தின் எதிரிகள் யாh?
* நாடகம் என்பது என்ன? அது எப்படி இருக்க வேண்டும்?
* மரபு வழிக் கலைகளின் வழியில் இன்றைய நவீன நாடகத்திற்கான அடித்தளமாக அமைதல்.
* மரபு வழிக் கலைகளைப் போற்றிப் பாதுகாத்தல்.

இலக்கியத்தேடல் 2 ஆம் கூட்டம்



இலக்கியத் தேடல் - இரண்டாம் கூட்டம்
இலக்கியத் தேடலின் 2 -ஆம் கூட்டம்
தெசாம்பர்த் திங்கள் 6 -ஆம் நாள்
ஞாயிற்றுக் கிழமை
காலை 10.00 மணி அளவில் நடைபெறும்.

இதனைத் தம் இல்லத்தில்
நடத்தித் தர
புதுவையின் புகழ்மிகு எழுத்தாளர்
திருமிகு நாக. இரத்தின கிருட்டிணா
அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
அவர்கள் முகவரி :


M. Naga. Ratina Krishna
10 Rue Herschel
67200 STRASBOURG
Tél : 03 88 278 77 71 / 06 19 48 34 02.

கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும்
ஆர்வலர்கள்
- ஸ்ட்ராஸபூர்க் சென்று வரும்
பயண ஏற்பாடுகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும்.
- திருமிகு நாக. இரத்தின கிருட்டிணா அவர்களோடு
தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்துகொள்க!

சிறப்புரைத் தலைப்பு : பின்நவீனத்துவம்
சிறப்புரையாளர் : திருமிகு நாக. இரத்தின கிருட்டிணா அவர்கள்.
அவருக்கு நம் அனைவரின் அன்பு கலந்த நன்றிகள்.

அன்பன்
பெஞ்சமின் லெபோ
இலக்கியத் தேடல் அமைப்பாளர்


அன்புசால் இலக்கிய ஆர்வலர்களே!
அன்பு வணக்கம்.
நம் இலக்கியத் தேடல் 2 ஆம் கூட்டம்
வரும் தெசாம்பர்த் திங்கள்
6 -ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை
காலை 10.00 மணிக்கு
ஸட்ராஸ்பூர்க் நகரில் நடைபெறுகிறது.
அங்குள்ள அன்பர்கள்
விழா இனிதே நடைபெற சிறு மன்றம்
ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு நம் நன்றிகள்.

அதன் முகவரி :
Centre Socio-Culturel
Cronenbourg
56, Rue Rieth
67200- Strasbourg

நண்பர் நாகரத்தின கிருட்டிணா
பேசவிருக்கிற உரையின் தலைப்பு :

'பின்நவீனத்துவம்'
உரையின் சுருக்கம்:

இலக்கியத்தின் காலவெளிகள் - நவீனத்துவம் -
பின் நவீனத்துவமென்றால் என்ன?
பின் நவீனத்துவத்துவமும் இலக்கியமும்
- தமிழில் பின் நவீனத்துவம்.

இலக்கியத்தில் காலவெளிகள்:
காலங்கள் தோறும் இலக்கியம்
எவ்வாறு அடையாளம் பெற்றது
அதன் சிறப்புத் தன்மைகள் - சுருக்கமாக.

நவீனத்துவம் என்றால் என்ன?
அது தரும் புரிதல் - அதன் தோற்றம்
- படைப்பிலக்கியத்தில் அதன் பங்கு -முடிவு.?

பின் நவீனத்துவம் என்றால் என்ன?
- பின் நவீனத்துவக் கர்த்தாக்கள்-
மேற்குலக இலக்கியங்களில் பின் நவீனத்துவம் -

தமிழில் பின் நவீனத்துவம் :
-சுந்தரராமசாமி -ப்ரேம்-ரமேஷ் - ஜெயமோகன் - எஸ்-ராமகிருஷ்ணன்.

காலம் கிடைப்பின்
இன்னொருவரும் உரையாற்றக் கூடும்.
தலைப்பு அங்கே அறிவிக்கப்படும்.

நல்லதொரு தேடல் அனுபவம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
அன்பன்
பெஞ்சமின் லெபோ

பின் நவீனத்துவம் ஒரு பார்வை
(6-12-2009 அன்று ஸ்ட்ராஸ்ப+ர் இலக்கியதேடல் அமர்வில் நிகழ்த்திய உரை)
நாகரத்தினம் கிருஷ்ணா

ஒரு மொழியில் இலக்கணம் என்பது அம்மொழி ஓரளவு வளர்ச்சியை எட்டிய பிறகே, அம்மொழியின் பயன்பாட்டின் அடிப்படையில் (வாய்மொழி இலக்கியம் - எழுத்து - எழுத்திலக்கியம்) இலக்கணம் வரைவு உருவாகிறது. தொல்காப்பியத்தில் முன்னோர்கள் சொல்பவனவாகவும், பழைய நூல்களை உதாரணத்திற்கு எடுத்தும் எழுதப்பட்டிருப்பதைவைத்து தொல்காப்பியத்திற்கு தமிழ் முந்தையது எனத் தீர்மானிக்கிறோம்.

இன்றைய பிரெஞ்சுமொழி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து வழக்கிலிருந்ததென்று கொள்ளவேண்டும். அதுவரை இங்கே இலக்கியமென்றால் லத்தீன் மொழியின் ஆதிக்கத்தின் கீழ்வந்தது. ஒன்பதாம் நூற்றாண்டுவரை வெகுசன மொழியாகவிருந்த இன்றைய பிரெஞ்சுமொழியின் ப+ர்வீக மொழிக்கு அப்போது ரொமான் மொழி என்று பெயர். தமிழ்போல அல்லாமல் பிரெஞ்சுமொழி ஒரு வட்டாரமொழியிலிருந்து(Dialectes -Patois) பிறந்தமொழி. எனினும், இந்த நூற்றாண்டில் ஆங்கிலத்தைபோலவே பிரெஞ்சும் உலகில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளில் பேசப்படுகிற மொழியாக மாறி இருக்கிறது.

பின் நவீனத்துவம் எங்கிருந்து பிறந்தது ஏன் பிறந்தது எதற்காக பிறந்ததுபோன்ற கேள்விகள் அவசியமற்றது. 'தக்கன உயிர்பிழைக்கும்' என்ற டார்வின் கோட்பாடு உயிரியலுக்கு மட்டும் உரித்தானதல்ல, மொழி, கலை, இலக்கியம் பண்பாடென்ற உயிர் சார்ந்த இயங்கியலுக்கும் பொருந்தும். இன்றிருக்கும் நமது தமிழும் பல படிநிலைகடந்தே இந்நிலையை எட்டியிருக்கிறது, நாளை அல்லது எதிர்காலத்தில் வேறு மாற்றங்களை பெறலாம். காலத்திற்கொப்ப ஒரு மொழி இலக்கிய மொழியாக, அறிவியல் மொழியாக, சிந்தனை மொழியாக, அரசியல் மொழியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியம். தமிழ் கடந்துவந்த பாதையைப் பார்க்கிறபோது இங்கும் அது சாத்தியமே என்று புலனாகிறது. .

1. பழங்கால இலக்கியம்

அ. சங்க இலக்கியம்(கி.மு 500-கி.பி.200வரை -அகம் புறம் பாட்டுகள்) ஆ நீதி இலக்கியம்(கி.பி.100-கி.பி.500வரை- திருக்குறள்), இ. பழைய காப்பியங்கள்- சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம்... )

2. இடைக்கால இலக்கியம்:

அ. பக்தி இலக்கியம் (கி.பி.600முதல் -கி.பி.900வரை), ஆ. காப்பிய இலக்கியம்(கி.பி.900-1200வரை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, கம்பர், ஒட்டக்கூத்தர், ஒவையார். உலா..பரணி உரை நூல்கள் , புராண நூல்கள்..

3. தற்கால இலக்கியம்

பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல், கட்டுரை, இருபதாம் நூற்றாண்டு சிறுகதை, நாவல், கட்டுரை புதுக்கவிதை, பெருங்கதையாடல்கள்.

மேற்கத்திய இலக்கியத்திற்கும் இவ்வாறான வளர்ச்சிப் படி நிலைகள் உள்ளன:
1.தொன்மைக்காலம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தையது ஹோமர், அரிஸ்டாட்டில், பிளேட்டோ
2. இடைக்காலம் -
3. மறுமலர்ச்சியுகம்
4. பரோக்
5. ரொமாண்டிஸம் எனும் கற்பனாவாதம்
6. நவீனத்துவம்
7. பின் நவீனத்துவம்


நவீனத்துவம் என்றால் என்ன?

இன்றையச் சூழலோடு இணங்கிப்போவதை நவீனமென்கிறோம். சங்ககால இலக்கியங்களுக்குப் பின் வந்தவர்கள் சொந்த முயற்சிகளில் ஈடுபடாதிருந்தால் இடைக்கால இலக்கியங்கள் இல்லை, இடைக்கால இலக்கியத்தை புரிந்து தாங்களும் புதிய முயற்சிகளில் இறங்கியதாலேயே தமிழில் உரைநடை இலக்கியங்கள் வளர்ந்தன, இன்றுள்ள நவீன இலக்கியங்கள் வளர்ந்தன. மரபுகளிலிருந்து விடுபடுதல் அல்லது விலகிச் செல்லுதல் என்பதை நவீனத்துவம் என்று சொல்கிறோம். பொதுவாக எல்லோருமே ஒரு கணத்தில் மரபிலிருந்து விலகி நிற்கிறோம் என்பது உண்மை. நவீனம் என்ற சொல்லை மேற்கத்திய மொழிகளில் Modern அல்லது Moderne என்ற உரிச்சொல்லால் குறிப்பிடுகிறோம்., இச்சொல்லின் வேர் இலத்தீன் மொழியிலிருக்கிறது. இலத்தீன் மொழியில் Modo என்ற சொல்லுக்கு சற்று முன்னர் -Just now- என்று பொருள். ஆக நேற்று என்ற சொல்லோடு ஒப்பிடுகிறபொழுது இன்று நவீனமாகிறது, 'இக்கணம்' என்ற சொல் ஒப்பீட்டளவில் 'சற்று முன்போடு' நவீனமாகிறது.

நவீனம் என்கிற சொல்லாடலில் இரண்டு புரிதல்கள் இருக்கின்றன: ஒன்று வாழ்க்கையை ஆய்வுச் செய்தல் மற்றொன்று வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லுதல். நவீனம் என்பது ஒரு மன நிலையை, பெருமூச்சை, மன்சாட்சியின் குத்தலைப் பகுத்துப் பார்த்தல். அன்றாட வாழ்வியல் காட்சிகளை மிகையின்றி அதன் வண்ணங்களை, பளிச்சிடும் உவமைகளை, அற்புதமான தொடர் உருவகங்களை படைப்பில் கொண்டுவருதல் .

- டார்வின் கோட்பாட்டினை கருத்திற்கொண்டு படைப்பாளிகள் இயங்கினார்கள். அதாவது ஒரு தனிமனிதனைத் தீர்மானிப்பது அவனது சுற்றமும், சூழலும், பரம்பரை குணமும் என்ற அடிப்படையில்.

- படைப்பின் மீதான சிந்தனையை உருவாக்குவது, படைப்புவேறு வாழ்க்கை வேறல்ல. வாழ்க்கையை பரிசீலிப்பது.

- வாழ்வின் கணத்திற்கும், வாழ்க்கையின் ஒரு பகுதியிலும் அக்கறை கொள்வது.

- உண்மைக்கு விசுவாசமாக நடந்துகொள்வது

- கதைநாயகன் குறைகளற்றவன் என்ற மாயையை தகர்ப்பது படைப்பு என்பது சரித்திரமல்ல எனவே தோல்விபெற்ற மனிதர்களும், கதைமாந்தர்களும் இடம் பெறலாம்.


நவீனத்துவத்துவம் என்ற பெயரில் பல முயற்சிகள் நடந்தன.

1. அழுத்தமான பதிவு என்கிற Impressionisme (1880)

வாழ்வின் தவறிப்போகும், அல்லது நொடிகளுக்கான காட்சிகளுக்கு முக்கியம் தருவது- கலைஞன் அல்லது படைப்பாளியின் கட்டற்ற புனைவாற்றல் கோட்பாட்டுக்கு எதிரானது. உயிர்த்துடிப்பான பிரகாசம் என்பதே இவர்களின் குரல். படைப்புத் துறையில் எமிலி ஜோலா, ஆர்னோ ஹோஸ் ஆகியோர் முக்கியமானவர்கள்.

2. உணர்ச்சிபெருக்கு அல்லது Expressionisme (1900)

அடிப்படை உணர்வுகளான மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம் போன்றவை உணர்ச்சிபெருக்கின் வெளிப்பாடுகளே. சிக்மண்ட் பிராய்டு, தாஸ்த்தாயெவ்ஸ்கி போன்றவர்கள் உதாரணம்.

அகவய மனசிக்கல்கள், கனவுகள் போன்றவற்றைக் கருப்பொருளாக எடுத்துக்கொண்டார்கள்.

3. க்ய+பிஸம் - Cubisme (1914)

ஓவியங்களில் கனச்சதுரங்களைக் கையாண்டதில் இது ஆரம்பித்தது - உண்மை என்பது பார்வையாளனின் கண்களில் இருப்பதா அல்லது திரைச்சீலையில் என்ன தோன்றுகிறதோ அதுவா என்ற கேள்வியை க்ய+பிஸ்டுகள் முன்வைத்தார்கள். பிக்காசோ க்ய+பியவாதிகளில் முக்கியமானவர். அவரது Les Demoiselles d'Avignon ஓர் அற்புதமான ஓவியம். எனது ஓவியத்தை கண்களால் பார்க்கக்கூடாது தலையால் பார்க்கவேண்டுமென்றவர். ஒரு சொல் பல பொருள் அதாவது -அல்லது பல பொருள்களுக்கு இடந்தரும் Ambiguity க்ய+பிஸ்டுகளால் வற்புறுத்தப்பட்டது.

4.Dadaisme (1916)

மரபார்ந்த அமைப்புகள் மீதான அவநம்பிக்கை, வழக்கிலிருந்த கலை நுணுக்கத்தின் மீதேற்பட்ட எரிச்சலென்று காரணங்களை தாதாயிஸ்டுகள் அடுக்கினார்கள். குறையற்ற படைப்பு என்பது இவர்கள் கோட்பாடு - வாழ்க்கையில் நேரும் அபத்தங்கள், இருத்தலின் நிச்சயமற்ற தனமை, எரிச்சலூட்டும் போலித்தனங்களும் ஏற்படுத்திய விரக்திக்கு தாதாயிஸ்டுகள் சொந்தக்காரர்கள் என்பது வெளிப்படை.

5. மிகை எதார்த்தம் - Surrealisme (1919)

யுனெசந டீசநவழn கூற்றுப்படி எதார்த்தத்தை பற்றிய நமது பழைய கோட்பாட்டை மறு பரிசீலனை செய்வது. ஒரு சிறைவாசி பார்வையாளனை சிறைவாசியாகக் கருதுவதுபோல, முரணான பார்வையில் சொல்லப்படுவது. தானியங்கி எழுத்து, கனவுகளை எழுத்தில் வடித்தல், மயங்கிய நிலையில் குழப்பமான வர்ணனைகள் - ஆகியவை மிகை எதார்த்தத்தின் பண்புகள்.

6. இருத்தலியல் கோட்பாடு - Existentialisme (1930)

மனிதனுக்கு நரகம் வேறெங்குமில்லை, இச் சமூகமே அல்லது பிறரே நரகம்( 1). பிறரால் மனிதன் தீர்மானிக்கப்படுபனல்ல, அவனால் அவன் வடிவமைக்கப்படவேண்டும். 'பிறர்' நரகத்திலிலிருந்து மனிதன் விடுதலை பெற்றாக வேண்டுமென்கிறது அவருடைய இருப்பியம். அதன்படி இருப்பென்பது (Existence) அதனுடைய தன்மை அல்லது பேருண்மைக்கு((essence)

முந்தையநிலை.ஆனால் பொதுபுத்தியில் அப்புரிதல் பல்வேறு கட்டுமானங்களின் அடிப்படையில் எழுந்து பன்முகப்பட்ட பார்வையொன்றினை உருவாக்கியிருந்தது.

'சுதந்திரம் நமக்குச் சபிக்கப்பட்டிருக்கிறது' என்றவர் சார்த்ரு. கடவுள் உலகை படைக்க நினைத்தபோது உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும், எத்தன்மையினராக மனிதர் இருக்கவேண்டுமென்பதையும் திட்டம் செய்திருந்தாரென இன்றளவும் நம்பப்படுகிறது. கடவுளுடைய அத்திட்டங்கள் பேருண்மைகள் அல்லது தன்மைகள் (நுளளநnஉநள). அவையே உலகம் அல்லது மானுடத்தின் தற்போதைய நிலைக்கு அதாவது தன்மைக்குக் காரணமானவையென்றும் சொல்லப்பட்டன. க இறைநெறிப்படி "பேருண்மை இருப்புக்கு முந்தியது (essence precedes existence.)இருப்பியல்வாதியான சார்த்ருவுக்கு இதில் உடன்பாடில்லை. அவர் கடவுள் மறுப்பு கொள்கையாளர், எனவே மனித இருப்புக்கு முந்தியது 'பேருண்மை' என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருக்கு இருப்பு முதலாவது, பேருண்மை பின்னர் வருவது. என்னவாக இருக்கப்போகிறோமென மனிதன் தீர்மானிக்கிற எதுவும், இருப்புக்குப் பிந்தியது எனச் சார்த்துரு சாதிக்கிறார். சார்த்ருவின் கூற்றுப்படி,"இருப்பு பேருண்மைக்கு முந்தியது"(existence precedes essence). பிறக்கும் போது மனிதன் சுதந்திரன், அவன் தளைகளால் கட்டுண்டவனல்லன், அவனுக்கான பேருண்மைகளை அவனே தீர்மானிக்கிறான், எனவே 'இருப்பு' முதலில், பின்னர் அவனால் தேடிக்கொள்ளபடுவதுதான் 'பேருண்மை' என்கிறார். சார்த்ருவுக்கு சுதந்திரம் என்பதே -ஒன்றுமில்லாத நிலை, இன்மை, நிர்மலமான எதிர்மை (pure negativity. நனவுநிலைய+டாக 'இன்மை'(nothingness) அறியப்படுகிறதென்றும், 'நானன்றி'(per se) என்கிற பண்பு, எவற்றையும் நிராகரிக்கும் குணம்கொண்டதென்பதால் அதனுடன் ஒப்பிடுகிறபொழுது, நனவு நிலை வெளிப்படையானது, மருதலிக்கும் பண்பற்றது. விதி என்பது அறவே இல்லை, என்பது அவரது வாதம்.

இலக்கியத்தில் பின் நவீனத்துவம்:

நவீனத்துவத்தின் அடுத்தகட்டம், நீட்சி, நவீனத்துவத்தின் மறு பிறப்பு, தொடர்ச்சி என்று பின் நவீனத்துவத்தை நவீனத்தின் பேராலேயே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

தெரிதா: நமுடைய சிந்தனை என்பது மொழியால் உருவாவது. எதையும் மொழி ரூபமாகவே சிந்திக்கிறோம். பேசுகிறேன், நீங்கள் தலைவிதியே எனக் கேட்கிறீர்கள், வீட்டில் இதைச் செய்ய சொல்லியிருந்தோமே செய்திருப்பார்களா என்பவை மொழி சார்ந்த எண்ணத்தைக் கட்டமைப்பவை. ஆனால் இம்மொழியை நூறுவீதம் நாம் சார்ந்திருக்க முடியுமா?

ஏங்க அதைக் கவனீச்சீங்களா? அல்லது முடித்தீர்களா என்ற கேள்விக்கும் பதிலுக்கு இதுதான் பொருளென்று திட்டவட்டமாக இல்லை. இப்படி ஒரு வாக்கியத்தில் தொனிக்கும் பல பொருள்களை தேடுவதை கட்டுடைத்தல் என்று தெரிதா அறிவித்தார். .

1. பேசுபவன்-கேட்பவன்@ எழுதுபவன்-வாசிப்பவன் இந்த உறவில் ஒரு மொழியின் வலிமை அதைப் பொருள்படுத்திக்கொள்வதில் தான் இருக்கிறது.

பின் நவீனத்துவம் இரண்டு புரிதல்களை சாத்தியப்படுத்துகிறது. ஒரு சாத்தியப்பாடு மையம் மற்றொன்று விளிம்பு. பின் நவீனத்துவம் என்கிறபோது ழாக் தெரிதா இக்கோட்பாட்டின் தலைமகன். அவர் கட்டுடைத்தல் என்ற கொள்கையை வகுத்தவர்

ஒரு புரிதல் மற்றொரு புரிதலை விளிப்பு நிலைக்குத் தள்ளுகிறது. நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம், செக்கும் சிவலிங்கமும், ஒன்றுதான், மரத்தை மறைத்தது மாமத யானை எல்லாமே பின் நவீனத்துவமே? வரிக்குதிரையின் மேல் வரிகளின் நிறம் என்ன? கறுப்பா, வெள்ளையா எது சரி?

தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்ற குறளுக்கு இரண்டு பொருள் உரைக்கின்றனர்.

தினமும் கணவனின் பாதங்களைத் தொழுது எழும் பெண் கற்புள்ளவள் அவள் கடவுளைக்கூட தொழவேண்டியவளில்லை, அவள் பெய்யென்றால் மழை பெய்யும் என்று பொருள் கொள்வது முதல் வகை. கடவுளைத் தொழாது கணவனைத் தொழும் பெண் பெய்யென பெய்யும் மழைக்கு அதாவது வேண்டிபெறும் மழைக்கு ஈடாவள் என்று பொருள் கொள்வது இரண்டாம் வகை. கணவனுக்குப் பணிவிடை செய்வதை வற்புறுத்தும் நோக்கிலே எழுதப்பட்ட ஆனாதிக்க கவிதையெனவும் இதை பொருள்கொள்ளலாம்.

2. படைப்பாளி -பாத்திரங்கள்

வால்மீகி இராமயணத்தில் தொடக்கத்தில் கதை சொல்லியாக வருவார் பின்னர் அவரே ஒரு பாத்திரமாக வருவதையும் பார்ப்போம். அதாவது லவ-குசர்களுக்கு ஆசிரியராக வில்வித்தை கற்பிக்கும் ஆசிரியராக வருவார். Roland Barthes par Roland Barthes: nous sommes a la fois les auteurs et les characters. :

இதன்மூல உண்மை புனைவாகவும் புனைவு உண்மையாகவும் இருக்கிறது என்று சொல்லாம்

3. ஒரு தீவிர எழுத்து என்பது முதலில் தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டும். தன்னை ச்சுற்றியுள்ள சமூகச்சூழலை நிர்ணயிக்கும் கலாச்சாரம் நிறுவும் ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கவேண்டும் என்றவர் பார்த்.

4. எழுத்து இருவிதத் தன்மைகள் கொண்டது வாசிப்பு என்பது ஒன்று எழுதுவது என்பது ஒன்று

நவீனத்துவம் (சில நேரங்களில் சில மனிதர்கள்) ஓ 2. பின் நவீனத்துவம் (மாத்தா ஹரி)

1 மரபார்ந்த உருவத்தில் அமைந்திருக்கிறது.
கதை ஆரம்பித்து வளர்ந்து முடிகிறது
வரிசைக்கிரமமான அத்தியாயங்கள் கொண்டது
ஒரு கதை ஒரு முடிவுகொண்டது
------------------------

1. எதிர் உருவத்தில் அமைந்திருக்கிறது. அதாவது வரிசைக்கிரமமாக இல்லாமல்
துண்டாடப்பட்ட அத்தியாய வரிசைகளால் ஆனது ஒரு கதை அல்ல

_________________________

2. பெண் விடுதலை மையம்
----
2. மூன்று பெண்களுக்கு நேர்ந்த சோகமான முடிவையன்றி மையமென்று எதுவுமில்லை.
_____________________________
3. கதை சொல்லலில் ஒற்றைக் குரல்

3. தன்மையிலும், படர்க்கையிலும் பல கதையாடல்கள் இருக்கின்றன

__________________________
4. நாவல் மரபார்ந்த நாவல் வடிவம்

4. கதை கூறலின் முன்பின்னாக நிகழ்வுகள் வருகின்றன
------------------------
5. கதையின் காலம் ஒற்றைத் தன்மை கொண்டது.
5. கதை நிகழ்காலத்திற்கும்- இறந்தகாலத்திலுமாக கதை தாவுகிறது.

-----------------
6. ஆசிரியனின் இருத்தல் தெரிகிறது
6. கதைசொல்லி, விவரணையாளன், கதாபாத்திரமென்ற எவரையும் பிரதானப்படுத்தாதமல் சொல்லப்படுகிறது

தொடக்கத்தில் கூறியதுபோன்று இன்றைக்கு சகல அறிவுத் துறைகளையும் இன்றைக்கு பின் நவீனத்துவத்தின் குறியீடுகள் கைப்பற்றி இருக்கின்றன. விரும்பியோ விரும்பாமலோ மனித வாழ்க்கை முரண்களால் கட்டமைப்பட்டது. அம்முரண்களை சமதளத்தில் நிறுத்தி நியாயம் கற்பிக்கும் ஓர் அசாதரண வல்லமை பின் நவீனத்துக்கு உண்டு. மரபிலிருந்து பிறப்பெடுத்ததுதான் நேற்றைய நவீனமும் இன்றைய பின்நவீனத்துவமும். ஆக இவை இரண்டும் மரபின் மாற்று வடிவங்கள், வேட்டி கட்டிய தமிழன், குழாய் சட்டையை ஏற்றுக்கொண்டதுபோல. எது அணிந்தாலென்ன உடுத்துபவன் தமிழ் அறத்தினை அகத்தில் போற்றுபவனாக இருக்கவேண்டும். இதனால் என்ன நன்மைகள்? என்ன பயன் பாடு எல்லா முயற்சிகளும் வெற்றி பெற்றனவா என்ற கேள்விகளுக்கு என்னிடத்தில் பதிலில்லை. தூந்திரபிரதேசத்தில் இருப்பவன் கத்தரிக்காய் வெண்டைக்காய்களால் என்ன பயன் என்பதுபோலத்தான் இதுபோன்ற கேள்விகளும். இன்றைக்கு நமது வாழ்க்கையை இலகுவாக்கியிருக்கிற அத்தனை பொருட்களும் முயற்சிகளின் விளைவுகள்தான் வானொலியே போதுமென்றிருந்தால் இன்றைக்குத் தொலைகாட்சியில்லை....இலக்கியத்திலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ள்படவேண்டும். மனிதர் விலங்கு இருவருக்கும் உணர்ச்சி செயல்பாடுகளில் ஒற்றுமை இருப்பினும் நாம் உணர்ச்சியைக்கடந்து உணர்வை எட்ட முடியும். விலங்குகளுக்கு சிந்திக்கும் திறனோ தம் நிலைபற்றிய உணர்வோ இல்லை. அவை ஒருபோதும் தங்களை மேம்படுத்திக்கொள்ள நினைப்பதில்லை. ஆனால் மனிதர்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள். சிந்தனை ஆற்றல் என்பது வேறு சிந்தனை தெளிவு என்பது வேறு ஐயமே அறிவுக்கு வழி என்றார் ரெனே தெக்கார்த். ஐயத்தின் நீங்கின் தெளிந்தாராக இருப்பதும் அவசியம். எப்பொருள் யார்யார்வாய் காண்பினும் மெய்ப்பொருள் காண முயற்சிக்கவேண்டும் - மனதின் இயக்கத்த்தினாலேயே அறிவை பெறமுடியும் அந்த நம்பிக்கையிலேயே பின் நவீனத்துவம்போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலக்கிய தேடல் நண்பர்களுக்கு தமிழில் தமிழில் புதிய சிந்தனைப்பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ள சுந்தர ராமசாமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம் ரமேஷ், பிரபஞ்சன், பாவண்ணன், நாஞ்சில் நாடன் போன்றவர்களின் புனைவுகளையும்@, கவிஞர்களில் கலாப்பிரியா, விக்கிரமாதித்தன், ஞானக்கூத்தன், பிரமிள், மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா போன்றவர்களையும் முன் வைக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------
உதவிய நூல்கள்:
1. Postmodernism: A Very Short Introduction> Christopher Butler -Oxford University Press.
2. பின் நவீனத்துவம் என்றால் என்ன -எம்ஜி. ரமேஷ் புதுப்புனல் பதிப்பகம், சென்னை