-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Thursday, 17 May 2007

வள்ளலார் இன்று வந்தால்

தமிழே அமுதே எனையாளும் உயிரே
அழகே அருளே பொருளே எனுது}னே
பொன்னே மணியே முத்தே என்வாழ்வே
அன்னையே உன்னையே என்றும் தொழுவேன்.

வள்ளலார் இன்று வந்தால்

பாட்டரங்கில் பாங்காய் எனை அழைத்தீரே
வாழ்த்தினேன் பாவலர் பலரும்
அருளுடன் அருட்பா படைத்தேன்
ஒருமையுடன் ஒன்றி இருக்கச் சொன்னேன்
உயிர்களிடத்தில் அன்பு செலுத்தச்சொன்னேன்
உத்தமர் உறவை வேண்டும் என்றேன்
உள்ளொன்று வைத்து பேசுவனிடம்
உறவு வேண்டாம் என்றேன்
கருணை உள்ளம் வேண்டும் என்றேன்.
சோதி வழிபாட்டை வலியுறுத்தினேன்
நோயற்ற வாழ்வு வாழச் சொன்னேன்
சாதிமத பேதத்தைப் போக்கினேன்
மனிதா மனம் மாறிபோனாய், மதத்தில்
மதங்கொண்டு மிருகமாய் மாறினாய்
நல்லறிவை விற்றுப் புல்லுருவி ஆனாய்
அன்பை விட்டாய் துன்பம் கொண்டாய்
உத்தமனை வதைத்தாய் நரியாக போனாய்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினாய்
கருணையை விட்டாய் கழுகாய் பறந்தாய்
பண்பைப் விட்டு பணத்தைச் சேர்த்தாய்
அன்புடன் உறவாடிப் பிறர் மனத்தைக்கொன்றாய்
சங்கம் படைத்தாய் பகைமையை வளர்த்தாய்
சங்கத்துக்குள் சங்கம் அச்சங்கத்துக்குள் சங்கம்
கானகம் சென்றாலும் அகந்தை அழியாய்
மானிடவாழ்வு உய்ய நல்வழி சொன்னேன்
பாதை மாறி நரகம் சென்றாய்
உன்னைத் திருந்த நீயே முயற்சிசெய்.

No comments: