-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Friday, 18 May 2007

ஓளவை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது ப10க்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

ஓளவை பிராட்டியார் அவர்கள் விநாயகனைத் துதித்துப்பாடிய இந்த பாடலில் மனித சமுதாயம் நோயின்றி வாழவும் நீண்ட ஆயளைப் பெறவும் பல மருத்துவ கருத்துக்களையும் கூறியுள்ளார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

வாக்குண்டாம் :- உடல்வாகு உண்டாகும்
நல்ல மனமுண்டாம் :- நல்ல தெளிவான பண்புகளை உடைய மனம் உண்டாகும்
மாமலராள் :- பெருமைக்குரிய தாமரைப்ப10, து}துவேளைப்ப10, ஆவாரம்ப10
நோக்குண்டாம் :- கண்பார்வை துல்லியமாக அமையும்
மேனி நுடங்காது :- உடல் தளர்வடையாது
ப10க்கொண்டு :- மேலே கூறிய மலர்களைக் கொண்டு
துப்பார் திருமேனி :- எவரும் ஏரெடுத்துப் பார்க்காத குப்பையில் முளைத்திருக்கும்
குப்பைமேனி
தும்பி :- தும்பைச் செடி
கையான் :- கையான் தகரை எனும் கரிசாலங்கண்ணி
பாதம் :- சிறு செறுப்படைச் செடி
தப்பாமல் :- தவறாமல்
சார்வார் தமக்கு :- இந்த மூலிகைகளின் குறிப்பறிந்து குணம், அளவு அறிந்து கையாள்வோருக்கு நல்ல மனமும் ஆரோக்கியமும் நரை, திரை, மூப்பு இல்லாத வாழ்வும் உண்டாகும்

ஆதாரம் : ஞானதீபம்

No comments: