-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Tuesday 21 October 2008

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் முடங்கும் அபாயம்!

தஞ்சாவூர், அக். 20: உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் முழுநேர இயக்குநர் பணியிடம் கடந்த 17 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
மேலும், நூலகத்தில் சில முக்கியப் பணியிடங்களும் காலியாகவுள்ளன. இதனால், இந்த நூலகத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடுமோ என்ற அச்சம் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நூலக நிர்வாகக் குழுவின் உறுப்பினர் -செயலரான மாவட்ட ஆட்சியர்தான் இப்போதும் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார். இவரது பிற பணிகள் காரணமாக நூலக விஷயத்தில் அவரால் முழுக் கவனத்தைச் செலுத்த முடிவதில்லை.
சரஸ்வதி மகால் நூலகம் கடந்த 1918-ல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான 5 உறுப்பினர் நிர்வாகக் குழு நூலகத்தை நடத்தி வந்தது.
நூலகத்தின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதியைப் பெறுவதை எளிமையாக்குவதற்காக நூலகத்தை சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அப்போதைய மத்திய கல்வி ஆலோசகர் கபிலவாத்ஸ்யாயன் பரிந்துரைத்தார். அதன்பேரில் 1983-ம் ஆண்டு சரஸ்வதி மகால் நூலகம் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நூலகத்தை நிர்வகிக்க மாநிலக் கல்வித் துறை அமைச்சரின் தலைமையின் கீழ் மத்திய கலாசாரத் துறைச் செயலர், மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலர், கோல்கத்தா தேசிய நூலக இயக்குநர் உள்ளிட்டோர் அடங்கிய 14 பேர் கொண்ட ஆளுமைக் குழு உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர் செயலர் நூலக இயக்குநராவார்.
1991-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த நூலகத்தின் முழு நேர இயக்குநர் பணியிடம் நிரப்பப்படவே இல்லை. கடந்த 2006-ல் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முழு நேர இயக்குநர் பதவிக்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
நூலகத்தில் சுவடிகளைப் படித்து எழுதி அச்சுக்கு கொடுக்க வேண்டிய சம்ஸ்கிருதம், தமிழ், மராட்டி, தெலுங்குப் பண்டிதர் பணியிடங்கள் பல ஆண்டுகளாகவே காலியாக உள்ளன.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயராய்வு மையமாக அங்கீகரிக்கப்பட்டு முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில், இங்கு அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய மொழியியல் வல்லுநர்கள் யாரும் இல்லை.
இந்த நூலகத்தின் நிரந்தரப் பணியாளர்களின் பணியிடங்கள் 46 உள்ளன. அவற்றில் ஏறத்தாழ பாதிப் பேர் ஓய்வு பெற்று விட்டதால், பணியிடங்கள் காலியாகவே உள்ளன. குறிப்பாக தமிழ், தெலுங்கு, மராட்டி போன்ற மொழியியல் துறைகளில் யாருமே இல்லாமல் அத்துறைகள் முடங்கிப் போய் உள்ளன.
இதுபோல வெளியீட்டு மேலாளர், காப்பாளர், போன்ற முக்கியப் பணியிடங்களுக்கும் நூல் வெளியீட்டுப் பிரிவு நூல் கட்டுமானப் பிரிவு போன்ற துறைகளிலும் பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததால் நூலகப் பணிகள் அனைத்துமே முடங்கி போய் உள்ளன.
"அரிய சுவடிகள், மதிப்புமிக்க நூல்களைக் கொண்ட இந்த நூலகத்தைப் பாதுகாத்து, பொது மக்கள் பயன்பெறும் வகையில் மொழியியல் வல்லுநர்களை முழுநேர இயக்குநராக உடனே நியமிக்க வேண்டும்.
நூலகத்தை சென்னையில் இயங்கும் கீழ்த் திசை சுவடிகள் நிறுவனத்தின் கிளை நிறுவனமோ அல்லது மத்திய பண்பாட்டுத் துறையின் கீழோ எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படுகிறது.
2007-08-ம் ஆண்டுக்குரிய நிர்வாகக் குழுக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும், தற்போது நிர்வாக அலுவலராக உள்ள ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரியை நீக்கிவிட்டு விதிமுறைப்படி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் பொறுப்பு வகிக்கும் ஆட்சியர் எம்.எஸ். சண்முகத்திடம் கேட்டபோது, " விரைவில் நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டி, முழுநேர இயக்குநர் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
மின்னணுப் பதிவால் ஆபத்து!
நூலகத்திலுள்ள சுவடிகளை மின்னணுப் பதிவு (டிஜிடலைசேஷன்) செய்வதற்காக மத்திய அரசு நிறுவனமான சி-டாக் உடனான ஒப்பந்தம் கையெழுத்திடப்படாமல் நின்று விட்டது.
தற்போது திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு, பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வல்லுநர்கள் எந்தத் தனியார் நிறுவனத்தின் தொடர்பும் இல்லாமல் நூலகப் பணியாளர்களே இந்தப் பணியை எளிதில் செய்து விடலாம் என்கின்றனர். தனியாரிடம் அந்தப் பொறுப்பை அளிப்பதில் இருக்கும் ஆபத்தையும் அவர்கள் விளக்கினார்கள்.
இவ்வாறு தமிழகம் கடந்து வெளி மாநில தனியார் நிறுவனம் மூலம் இப்பணி செய்யும் போது விலை மதிக்க முடியாத பல அறிய சுவடிகள் வெளிநாடுகளுக்கு சென்றடைய வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த நூலகம் உரிய காப்புரிமையை இழக்க நேரிடும்.
""எம்ஜிஆர் முதல்வராக இருந்த கால கட்டத்தில் ஆந்திர அரசிடம் கிருஷ்ணா நீர் கேட்டபோது, இந்த நூலகத்தில் உள்ள தெலுங்குச் சுவடிகளை கொடுங்கள் என்று ஆந்திர அரசு கேட்டது. அப்போது அவர் அதற்கு மறுத்துவிட்டார். தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மறைமுகமாக தெலுங்குச் சுவடிகளை கைப்பற்றும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும் துணை போவதாகத் தெரிகிறது. இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று'' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
நன்றி: தினமணி

பிரான்சுக் கம்பன் கழகத்தின் 7 ஆம் ஆண்டுக் கம்பன் விழா

பிரான்சுக் கம்பன் கழகத்தின் 7 ஆம் ஆண்டுக் கம்பன் விழா

உலா வரும் நிலாவுக்கு விழா என்றால், அது நீந்தி வரும் நீல வானுக்கும் விழா என்றுதானே பொருள்! கம்பனுக்கு விழா என்றால் கன்னித் தமிழுக்கும் விழாதானே! என்றுமுள இன் தமிழ் இயம்பிக் கடந்த ஆறு ஆண்டுகளாக இசைகொண்டு வந்த பிரான்சுக் கம்பன் கழகத்தார் இந்த 7 ஆம் ஆண்டும் கம்பனுக்கு விழா எடுத்தனர். திருவள்ளுவர் ஆண்டு 2039, கன்னித் திங்கள் 11, 12 (கிறித்துவ ஆண்டு 2008, செப்தம்பர்த் திங்கள் 27, 28) நாள்களில் ஒளிநகராம் பரிநகரின் புறநகராம் லா கூர்னேவ் நகரின் சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் விழா இனிதே நடைபெற்றது. நேரில் வந்திருந்து தமிழ் விருந்துண்டு களிக்கும் வாய்ப்பு இல்லாதாதோரும் அறிந்துகொள்ளும்படி இதோ விழா வருணனைகள் :

காரி (சனி)க் கிழமை 27ஃ09ஃ08 அன்று மதியம். லர் கூர்நெவ் சித்தி விநாயகர் ஆலயத்தில் மணி அடித்துப் பூசை முடித்துத் தீபாரதனை காட்டுகிறார் அகோரமூர்த்திக் குருக்கள். பிரான்சுக் கம்பன் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான கவிஞர் கி; பாரதிதாசன் புதுச்சேரி, தமிழகத்திலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களுக்கு (பிரான்சுக் கம்பன் கழகம் என அச்சிடப்பட்டுள்ள) தேங்காய்ப் பூத்துவாலை போர்த்தி மரியாதை செய்கிறார். (இவர்கள் அறிமுகம் அவ்வப்போது கிடைக்கும்).

அடுத்துள்ள விழா மண்டபம் நோக்கி அனைவரும் வரிசையாகச் செல்கின்றனர். அங்குள்ள மங்கல விளக்குகளுக்கு ஒளியூட்டும் பேறு கம்பக் காவலர்களும் பிரான்சுக் கம்பன் கழக உறுப்பினர்களுமான திருமதி கோமதி, திரு சிவஅரி இணையருக்குக் கிடைத்தது. அனைவரும் உள்ளே நுழைந்ததும், கம்பக் காவலரும் பிரான்சுக் கம்பன் கழகத்தின் பொருளாளருமான பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, கணீரென்ற உரத்த குரலெடுத்துக் கம்பன் வாழ்க! கம்பன் புகழ் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க என முழங்க, வாழ்க, வாழ்க என அனைவரும் பின்பாட்டு பாடினர். திருமதி சிவகௌரி கணாநந்தன் கம்பனின் இறைவணக்கம், பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்து பாட விழா இனிதே தொடங்கியது. செல்வி கனகராசா அபிராமி அழகான அடவுகளோடும் அடுக்கடுகான முத்திரைகளோடும் அருமையான பாவங்களோடும் வழங்கிய.பரதநாட்டியம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

விழாவைத் தொகுத்து வழங்கிய பேரா. பெஞ்சமின் லெபோ, கம்பக் காவலர் வழக்கறிஞர் தி. முருகேசனார் (புதுவைக் கம்பன் கழகச் செயலர்) அவர்களை வசிஷ்ட முனிவராக வருணித்து விழாத்தலைமை ஏற்க வருமாறு அழைத்த போது அவையில் சிரிப்பலை! புதுச்சேரி, தமிழகம் முதலிய இடங்களிலிருந்து வந்திருந்த நல்லோரையும் விழாவுக்கு வருகை தந்த பல்லோரையும் வருக வருக என வரவேற்றார் பிரான்சுக் கம்பன் கழகத்தின் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன். புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு வைத்தியலிங்கம் அவர்கள் அன்புடன் அனுப்பி இருந்த வாழ்த்துச் செய்தியைப் படித்துக்காட்டி, பிரான்சுக் கம்பன் கழகத்தின் பணிகளைப் பாராட்டித் தன் தலைமை உரையைச் சுருக்கமாக நிகழ்த்தினார் வழக்கறிஞர் தி. முருகேசனார். அவரைத் தொடர்ந்து நல்லாசிரியர் கி. கலியாணசுந்தரனார் (புதுவைக் கம்பன் கழகத்தின் இணைச் செயலர்), வாழ்த்துரை வழங்கிப் பாராட்டினார்.

சிறப்புரை வழங்குவதற்காகத் திருச்சியிலிருந்து வந்திருந்த நாவுக்கரசர் முனைவர் சோ. சத்திய சீலனார் பிரான்சுக் கம்பன் கழகத்துக்கும் பரிநகருக்கும் புதியவர் அல்லர். இதற்கு முன்னர்ச் சில முறைகள் இங்கே வந்து அரிய பெரிய கருத்துகளை அள்ளித் தந்தவர். சிறப்புரைக்குரிய தலைப்பு : 'மானுடம் வென்றதம்மா". உரை ஒரு மணி நேரம் நீடித்தது. அவை, அப்படி இப்படி அசையாது, செவி வாயாக நெஞ்சு களனாக அவர் உரையை உள்வாங்கியது. மூன்றுடன் கூடிய அறுபதினாயிரம் மனைவியர்களை உடைய தசரதனுக்கு மகனாக வந்து வாய்த்த இராமனோ, 'இந்தப் பிறவியில் இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்" என்று சூளுரைத்ததோடு அப்படியே வாழ்ந்தும் காட்டுகிறான். தனி மனித வாழ்வு எப்படிப் புனிதமாகக் கூடும் என்பதை அறத்தின் நாயகனாகிய இராமன் வாழ்வு காட்டுகிறது. அகந்தை, ஆணவம், ஆங்காரம், காமம்... போன்ற அரக்கக் குணங்கள் சீவாத்துமாவைக் கவர்ந்து செல்லுகின்றன. அந்த அரக்கக் குணங்களைக் கொன்று, வென்று சீவாத்துமாவைச் சிறை மீட்டுத் தன்னுடன் இணைத்துக்கொள்கிறது பரமாத்மா! இராமாவதாரத்தின் நோக்கம், வெறுமனே இராவணனை அழிப்பதும் அரக்கர்களைக் கொல்வதும் மட்டுமல்;ல, , மாறாக மானுடம் வென்றதம்மா என்று அறத்தை நிலை நாட்டி மானிட தர்மத்தைத் தூக்கி நிறுத்தி நிலைநாட்டுவதுதான் என அவர் முடித்த போது அவை, கைதட்டவும் மறந்து உரை தந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

மாலை ஐந்து மணி அளவில், 'தமிழ்வாணி" என்ற தாளிகையின் நிறுவனரும் ஆசிரியரும் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான கவிஞர் கோவிந்தசாமி செயராமன், 'கம்பன் விழாவிற்கு இராமனின் வருகை" என்ற தலைப்பில் கவிமலர் அளித்தார். தொடர்ந்து, திருவாரூரிலிருந்து வருகை தந்திருந்த நகைச்சுவைத் தென்றல் திருமிகு இரெ. சண்முகவடிவேல் அவர்களின் ஆய்வுரை தொடங்கியது. ஐயா அவர்களும் சிலமுறை இங்கே வந்து கம்பன் விழாவில் உரைகள் ஆற்றி அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். இந்த முறை இவர்க்கு வாய்த்த தலைப்பு 'கற்பில் பொதுமை". கனமான இத்தலைப்பை இவர் எப்படிக் கையாளப் போகிறாரோ என்ற தவிப்பு அவையினருக்கு! இவருக்கோ இல்லை எந்த விதமான பதைப்பு! வந்து இவர் மைக்கைப் பிடித்த ஐந்தாவது நிமிடம் அவையினர் வயித்தைப் பிடித்துக்கொண்டனர்! குப், குப்பென இவர் நகைச் சுவை பாணங்கள் விட அவையினர்; குலுங்கிக் குலுங்கிச் சிரித்து மகிழ நகைச் சுவை வெள்ளம் கரை புரண்டோடியது. நகையும் சுவையுமாக உரை நடந்தாலும் தலைப்பை விட்டுவிடவில்லை. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல, ஆணுக்கும் அதே அளவுக்குத் தேவையானதுதான் என்பதை அழகாக வலியுறுத்தினார். புதுமைப் பித்தனின் 'அகலிகை" என்ற சிறு கதை இக்கருத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது என்பதையும் விளக்கினார். சாப விமோசனம் பெற்ற அகலிகையை அழைத்துக் கொண்டு போய்க் கவுதம முனிவரிடம் சேர்த்து,'நெஞ்சிலால் பிழைப்பிலாளை நீ ஏற்றுக்கொள்ளுதி" என இராமன் வேண்டுகிறான். முனிவரும் ஏற்றுக்கொள்கிறார். பல்லாண்டுகளுக்குப் பின், சீதையைத் தீக்குளிக்க வைத்தான் இராமன் எனக் கேள்விப்பட்ட அகலிகை வாழ்வை வெறுத்து மறுபடி கல்லாகிவிடுகிறாள். கற்பில் பொதுமை வேண்டும் என்ற கருத்தைப் புதுமைப் பித்தன் தன் கோணத்தில் கூறி இருப்பதைச் சொல்லித் தன் உரையை முடிவு செய்தார் நகைச்சுவைத் தென்றல.;


தாய்க் கழகமான புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் செயலர் திருமிகு தி முருகேசனார், பிரான்சுக் கம்பன் கழகக் காவலர்கள் 14 பேர்களுக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். தொடர்ந்து பட்டிமன்றம் தொடர்வதற்கு முன், கவிதாயினி சிமோன் இராசேசுவரி, 'கம்பன் விழாவிற்குச் சடையப்ப வள்ளல் வருகை" என்ற தலைப்பில் தான் எழுதிய அகவற்பாவைப் படித்தார். கவிதாயினி சரோசா தேவராசு, 'கம்பன் விழாவிற்கு அனுமன் வருகை" என்ற தலைப்பில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப்பா எழுதி வழங்கினார். இவர்கள் இருவரும் இப்படி மரபுக் கவிதை எழுதிப் படிக்கக் காரணம் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன். மாதந்தோறும் தன் இல்லத்தில் யாப்பிலக்கண வகுப்பு இலவயமாகவே எடுத்து வருகிறார். பாடங்கேட்க வருபவர்க்கு அறுசுவை உணவும் கிடைக்கும் என்பது இன்னொரு சிறப்பு.

பின்னர், நாவுக்கரசர் முனைவர் சோ. சத்தியசீலனார் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. தலைப்பு : 'இராமனின் மிகப் பெரிய வெற்றியை நிலை நிறுத்தியது உற்ற உறவா? பெற்ற நட்பா?" உறவே என்ற அணிக்குத் தலைமை இலக்கியச் சுடர் திருமிகு த. இராமலிங்கம். இவர் தமிழகத்தின் புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர், சென்னை உயர்நீதி மன்றத்தின் பெரும் வழக்குரைஞர். இவர் அணிக்கு அணி செய்தவர்கள் பெண்மணிகள் இருவர் : சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான திருமதி லூசியா லெபோ, சிறந்த நாவலாசிரியரும் பேச்சாளருமான திருமதி அருணா செல்வம். எதிரணியில், தலைமை ஏற்றவர் நகைச்சுவைத் தென்றல் திருமிகு இரெ. சண்முகவடிவேல். இவர்க்குப் பக்க பலமாக இருவர் அமர்ந்தனர். தமிழை முறையாகப் பயின்று எம்.ஓ.எல் பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற திருமிகு செய. பாலகிருட்டினன் அவர்களுள் ஒருவர். மற்றவர், கம்பனில் மிகுந்த ஈடுபாடு உடைய பேச்சாளர் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால். உற்ற உறவே பெரிதென அவர்களும் நட்பே வெற்றிக்கு உரியது என இவர்களும் பட்டி மன்றத்தில் தம் கருத்தகளைக் கொட்டி முடித்தனர். இருவர் பக்க வாதங்களை, விவாதங்களை அழகாக அலசிய நடுவர் அழகான தீர்ப்பை வழங்கினார்.
'குகனொடும் ஐவர் ஆனொம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த
அகன்அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்" என இராமன் வீடணனிடம் கூறுவதை எடுத்துக் கூறிப் பெற்ற நட்பையும் உற்ற உறவாக ஆக்கிக் கொண்டவன் இராமன் என்று தீர்ப்பு கூறியதோடு நில்லாமல் மேற்கொண்டு அருமையான கருத்து ஒன்றையும் எடுத்துரைத்தார். எல்லாரையும் தன் உறவாகக் கொண்டுவிட்ட இராமன், அனுமனை மட்டும் தன் உறவாகவோ நட்பாகவோ கருதவில்லை! இறுதியில் மணிமுடி சூடிய இராமன் ஒவ்வொருவருக்கும் பரிசுகள் வழங்குகிறான். அப்போது, அனுமனை மகிழ்வுடன் இனிதாகப் பார்த்து, 'நீ அன்று செய்த பெரிய உதவிக்கு யான் செய்யும் கைம்மாறான செயல் வேறொன்றில்லை. எனவே, 'போர் உதவிய திண்தோளாய் பொருந்துறப் புல்லுக என்றான்".
பெரியவர்கள்தாம் சிறியவர்களைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும.; இது மரபு. தன்னை விட அனுமன் பெரியவன் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறான் இராமன். அதனால்தான், 'அனுமா, என்னை மார்புறத் தழுவிக்கொள்" என அழைப்பு விடுக்கிறான் இராமன். இதற்கு அனுமன் பதில் என்ன? உடனே நாணம் கொண்டு தலை வணங்கி , வாய் பொத்தி, விளங்கும் படையின் முன்புறத்தில் ஒதுங்கிக் கிடந்தானாம் வன்மையுள்ள அந்த அனுமன்! இதற்கு விளக்கம் கூற வந்த முனைவர் சத்தியசீலனார், இராமன் வேறு அனுமன் வேறு அல்லர். இருவரும் ஒருவரே! ஒரே பரமாத்துமாவே! அப்படி இருக்க அனுமன் எப்படி இராமனைத் தழுவ முடியும்! இதைக் கூட அறியாதவனாக இராமன் இருக்கிறானே என்று அனுமன் நகைத்து வாய்புதைத்து நிற்கிறானாம். ஆக அங்கே பரமாத்வாவும் சீவாத்துமாவும் ஒன்றாகி நிற்கின்ற அத்வைத நிலையை விளக்கித் தம் நடுவர் உரையை நிறைவு செய்தார் நாவுக்கரசர். நல்ல நிகழ்வுகளைக் கண்ட நிறைவிலும் அரிய உரைகளைச் செவிமடுத்த மகிழ்விலும் மக்கள் கலைந்தனர், மறு நாள் பொழுது விரைவில் புலராதா என்ற ஆவலுடன்.

கம்பன் விழாவின் 2 ஆம் நாள் நிகழ்வுகளைக் காண வருவதைப் போல் காலைக் கதிரவன் மேகங்கள் புடைசூழப் பவனி வந்தான். கம்பன் கழக உறுப்பினர்களான திருமதி, திரு அசோகன் இணையர் மங்கல விளக்குகளுக்கு ஒளி ஊட்ட, கம்பன் வாழ்த்தோடு விழா தொடங்கியது. கடவுள் வாழத்து, தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டையும் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் பாடினார். ஆசிரியை திருமதி குமுதினி வேலாயுதம் அலைபாயுதே கண்ணா என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் பேரா. பெஞ்சமின் லெபோ, 'சடையப்ப வள்ளலின் மறு பிறப்பாய்ச் சலியாது வாரி வழங்கும் வள்ளலே, சப்தகிரி குழுமத்தின் தலைமை அண்ணலே புதுவை புகழ் திருமிகு பொ. சிவக்கொழுந்து ஐயா அவர்களே வருக வருக வருகவே!" என வரவேற்றுத் தலைமைதாங்க வருமாறு அவரை அழைத்தார். (சும்மாவா, பின்னே முன் தினம் கம்பன் விழாவுக்கு 250 யூரோ நன்கொடை வழங்கிய வள்ளல் அல்லவா அவர்!). பிறகு, துள்ளல் ஓசை மிகுந்த கவிதை நடையில் பேராசிரியர் அனைவரையும் வரவேற்றார். பின் திருமிகு சிவக்கொழுந்து கம்பன் கழகத்தைப் பாராட்டிப் பேசத் தலைமை உரை நிறைவுற்றது. காய்ச் சீர்கள் நான்கு அமைத்துப் பின் மாச்சீரும் இறுதியில் தேமாவும் வரும்படி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப் பாவில் வாழ்த்துக் கவிதை வழங்கினார் நல்லாசிரியர் விருது பெற்ற திருமிகு தேவராசு. கவிஞர் கி பாரதிதாசனின் யாப்பு வகுப்பில் பாடங்கேட்டு வருபவர் இவர். அவரைத் தொடர்ந்து திருமிகு தங்க சிவராசன் தொடக்க உரை நிகழ்த்தினார். இவர் புதுச்சசேரிக் கல்வித்துறையில் மேனிலைப் பள்ளிகளில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றவர், புதுச்சேரிக்குப் புகழ் சேர்த்து வரும் எழுத்தாளர்களில் முன் நிற்பவர். கம்பனை ஆங்கிலப் புலவர்கள் பலரோடு ஒப்பிட்டுக் கம்பனின் சிறப்புகளைச் சுருக்கமாக ஆனால் நறுக்காக எடுத்துரைத்தார் இவர்.

அடுத்த அமர்வில் கவிதாயினி திருமதி பூங்குழலி பெருமாள், 'கம்பன் விழாவிற்குக் குகன் வருகை" என்ற தலைப்பில் அருமையான கவிதை ஒன்றைப் படித்ததோடு சில இடங்களில் தன் இனிய குரலில் பாடியும் காட்ட, அவையினர் பெரிதும் ரசித்துக் கைதட்டிப் பாராட்டினர். ஈழத்துக் கவிதாயினி திருமதி லினோதினி சண்முகநாதன், 'கம்பன் விழாவிற்கக் கும்பகருணன் வருகை" என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். இவர் கவிதையில் ஈழத் தமிழர்களின் சோகம் இழையோடியது, கேட்டோர் கண்களில் மழையோடியது! இதன் பின் தேனுரை அளிக்க, இலக்கியச் சுடர் தரும் காலை இளங் கதிராய், மாலையிலே வலம் வரும் தமிழ் நிலவாய், கம்ப கண்ணதாசப் பெருமைகளை எல்லாம் மேடையிலே பேசுகின்ற மெல்லிய பூங்காற்றாய் நீதியை நிலைநாட்டும் சென்னை உயர்நீதி மன்றத்தின் உச்சி விளக்காய் விளங்கும் மெச்சு புகழ் இலக்கியச் சுடர் திருமிகு த. இராமலிங்கம் வந்தார். 'காதல் - கம்பன் பார்வையும் கண்ணதாசன் பார்வையும்" என்ற தலைப்பில் மிக அருமையான, சுவையான விருந்து தந்தார்! காதலிக்க வாய்ப்பில்லாத கம்பன் கற்பனையில் தான் கண்ட காதலைப் பாடினான், கண்ணதாசனோ தான் பெற்ற அனுபவங்களையே தன் காதல் பாடல்களில் பொதிந்து வைத்துவிட்டான் என்பதை அழகுற விளக்கினார். மேலும் கம்பனின் கருத்துகளை மிக இலாவகமாகக் கையாண்ட கண்ணதாசன் அவற்றைத் தன் பாடல்களிலும் பொதிந்து வைத்த பாங்கினை எடுத்துக் காட்டினார். மதிய உணவு நேரம் தாண்டிய போதும் மக்கள் இவர் உரையின் ருசியிலேயே கட்டுண்டு இருந்தனர்.

மதிய உணவுக்குப் பின், இராமகிருட்டினாலயம் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பெண்களும் சிறுவர் சிறுமிகளும் இராமநாமாவளி பாடினர், பின் இரகுபதி இராகவ ராஜாராம், வேறு சில இராம பக்திப் பாடல்களைப் பாடினர். பிறகு, ஈழத்தமிழ்க் கவிதாயினி எழில் துசியந்தி'கம்பன் விழாவிற்குச் சூர்ப்பணகை வருகை' என்ற தலைப்பில் கவிதை படித்தார். 'கம்பன் விழாவிற்குத் தசரதன் வருகை" என்ற கவிதையைப் படித்தவர் பாரிசு பார்த்தசாரதி.


தொடர்ந்து, சுழலும் சொற்போர் தொடங்கியது. நாவுக்கரசர் முனைவர் சோ. சத்தியசீலனார் தலைமை தாங்கினார். கம்பனில் சிறந்த திருப்பு முனை கூனியின் கோபமே என்ற அடித்துப் பேசி வாதிட்டார் பேராசிரியர் சக்திப்புயல். இல்லை ,இல்லை, மாரீசனின் சூழ்ச்சிதான் என்று வழக்கரைஞருக்கே உரிய வாதத் திறமையோடு தன் கருத்தை நிலைநாட்டினார் இலக்கியச் சுடர் த. இராமலிங்கம். சூர்ப்பணகையின் காமம்தான் கம்பனில் சிறந்த திருப்பு முனையாக அமைய முடியும் என்பதைத் தனக்கே உரிய நகைச்சுவையோடு எடுத்துரைத்தார் நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல். இறுதியாகப் பேசவந்த பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, கோபம், சூழ்ச்சி, காமம் முதலியன எதிர்மறை திருப்புமுனைகளை விளைவித்தன, வீடணனின் அறம்மட்டுமே ஆக்கபூர்வமான திருப்புமுனையைத் தந்து காவியத்தை முடிக்க உதவியது என்று ஆணித்தரமாக வாதிட்டார். நால்வரின் வாதங்களையும் நல்லபடி அலசி ஆராய்ந்த நடுவர், வீடணனின் அறம் அவனுக்கு மட்டும் பயன்பட்டது, கூனியின் கோபம் கதையைத் திசை திருப்புவதோடு நின்று விடுகிறது, மாரீசனின் சூழ்ச்சியைச் சிறப்புத் திருப்பு முனையாகக் கருத இடமே இல்லை என்று மூன்றையும் புறந்தள்ளினார். மிஞ்சி இருப்பது, சூர்ப்பணகையின் காமம். இவளின் காமம்தான் கதையின் முக்கிய திருப்புமுனையாகவும் அரக்கர் குலமே அழியும் அளவுக்கு அழிவை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருப்பதால் இவளின் காமமே கம்பனில் சிறந்த திருப்பு முனையாக அமைகிறது எனத் தீர்ப்பு சொன்ன போது அவை கைதட்டி ஆரவாரித்து அந்தத் தீhப்புக்குத் தன் இசைவை அளித்தது.

அடுத்ததாகச் செல்வி அனு பாலகிருட்டிணன் நடனப் பாடல் பாடத் திருமதி சில்பா செந்தில் பாலகிருட்டிணன் அருமையான பரத நாடடிய விருந்து அளித்தார். பின்பு, புதுச்சேரி அன்பர் திருமிகு குணவதி மைந்தன் என்னும் இரவி இயக்கித் தயாரித்த 'கவிச்சக்கரவர்த்தி கம்பர்" குறும்படம் திரையிடப்பட்டது. மிகச் சிறப்பான கதை அமைப்பும் இனிய இசையும் அருமையான இயக்கமும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. விழாவிற்கு வந்திருந்த இயக்குநர் இரவியை மக்கள் சூழுந்துகொண்டு பாராட்டு மழை பொழிந்தனர். சலுகை விலையில் (10 யூரோக்கள் மட்டுமே) தரப்பட்ட அக்குறும்படத் தகடுகளை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்க எல்லாத் தகடுகளும் விரைவில் விற்றுத் தீர்ந்தன! இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பட்டயம், விருது வழங்கு விழாவில் குறும்படத் தயாரிப்பாளர், இயக்குநர் திருமிகு குணவதி மைந்தன் என்னும் இரவிக்கு கம்பன் திருப்பணி விருது வழங்கப்பட்டது. பிரான்சுக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் பட்டயங்கள், விருதுகளை இந்த ஆண்டு அறுவர் பெற்றனர். அவர்கள் சார்பில் ஏற்புரையைக் கவிதையிலேயே வழங்கினார் புலவர் கலியபெருமாள் (இவர் புதுவைக் கவிஞர் வாணிதாசனாரின் மருமகன்).

இறுதி நிகழ்ச்சியாக வழக்காடு மன்றம் நடைபெற்றது. நடுவராக நாவுக்கரசர் முனைவர் சோ. சத்தியசீலனார் அமர, இலக்கியச் செல்வர் த. இராமலிங்கம் சமூகத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். 'பாரதியின் சிந்தனைகளை நடைமுறைப் படுத்தாத சமூகம் குற்றம் உடையது" என அவர் குற்றப் பத்திரிகை படிக்க நகைச்சுவைத் தென்றல் அவற்றை எல்லாம் நகையோடும் சுவையோடும் மறுத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர், இக்காலச் சமூகம் பாரதியின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்த முயன்று வருவதைப் பல கோணங்களில் எடுத்துக்காட்டி வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும் அதில் கலந்துகொண்டவர்களுக்குத் துண்டு போர்த்தப்பட்டுப் பரிசுப் பொருள்களாக நூல்கள் வழங்கப்பட்டன. விழா நிறைவுக்கு முன்னதாகக் கம்பக் காவலரும் பிரான்சுக் கம்பன் கழக உறுப்பினருமான செவாலியே யூபர்ட் சிமோன் அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி கூறினார்.

அவை கலையும் முன், முனைவர் சோ. சத்தியசீலனார் தங்களை வரவழைத்து விருந்தோம்பிய கவிஞர் கி. பாரதிதாசனார்க்கும் அவர் துணைவியார் திருமதி குணா பாரதிதாசனுக்கும் நன்றி சொன்னார். இந்தியக் கம்பன் கழகங்கள் எதுவும் செய்யாத சில நல்ல பணிகளை - கம்ப இராமாயணம் முற்றோதுதல், யாப்பிலக்கண வகுப்பு, கம்பன் விழாவில் பாரதி போன்ற பிற கவிஞர் படைப்புகளைப் பற்றிய அலசல் - பிரான்சுக் கம்பன் கழகம் செய்து வருவதைச் சுட்டிக்காட்டிக் கவிஞர் பாரதிதாசனுக்கும் அவருக்கு உதவியாக இருந்து செயற்படும் கழக உறுப்பினர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இ;றுதியாக, வள்ளுவனை நம் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவர் உரையினை நிறைவு செய்ய, விழா நிகழ்ச்சிகளைத் தொய்வு இல்லாமல் நடத்திச் சென்று சுவையாகத் தொகுத்து அடுக்கு மொழிகளில் மிடுக்காக அளித்த பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, வள்ளுவனைத் தள்ளி வைத்து வாழ்க்கை நடத்த இயலாது! 'உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்" என அந்த வள்ளுவன் சொன்னது போல அடுத்த ஆண்டும் உவப்பத் தலைகூடுவோம்' என்று முத்தாய்ப்பாய்க் கூறி விழாவினை நிறைவு செய்தார்.

- வருணனை : புதுவை எழில் (பிரான்சு)
- படங்களை வழங்கிய அன்பர்களுக்கு நன்றிகள்
- 31 படங்களையம் காண ,ங்கே கொடுக்கவும் :
http://picasaweb.google.fr/benjaminlebeau/Kamban2008PhotosForMagazines#

Saturday 20 September 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன்

கண்ணதாசன் ரசித்த கம்பன்
(பிரான்சுக் கண்ணதாசன் கழகம,; பரி நகரின் (Paris) புற நகராம் மோ என்னும் பெரு நகரில் 22.06.08 ஞாயிறு அன்று கவியரசர் கண்ணதாசன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. அவ்விழாவில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ ஆற்றிய சிறப்புரை.)

வானிலே வலம் வரும் ஆதவனுக்கு அறிமுகம் தேவை இல்லை! இரவிலே உலா வரும் நிலாவுக்கும் அறிமுகம் தேவை இல்லை! தமிழ்க் கவிதை வானிலே ஆதவனாய்த்
தமிழ்த் திரை உலகின் மாதவனாய்த்; திகழ்ந்த கவியரசர் கண்ணதாசனுக்கும் அப்படியே!
ஏனெனில், கண்ணதாசன் - காவியத் தாயின் இளைய மகன், காதற் பெண்களின் பெருந்தலைவன்! அவன் நிரந்தரமானவன், அழிவதில்லை! எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை! கால் போட்ட மதுவிலும் கால் நீக்கிய மாதுவிலும் வழுக்கி வீழ்ந்தவன்!
மனத்தை மயக்கும் கவிதைகளைச் செதுக்கி வாழ்ந்தவன்!

அந்தக் கண்ணதாசன் திரைப்படத் துறையில் கால் பதித்த காலத்தில்; திரைப் பாடல்களில்
பக்திச் சுவையைப் புகுத்தி இருந்தார், பாபநாசம் சிவன். முத்து முத்தான கருத்துகளைச்
சினிமாப் பாடல்களில் பொருத்தி இருந்தார் பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம்..
இந்தச் சூழலில் வெள்ளித் திரை வானிலே ஒளிவீச வந்த இக்கவிஞன், தான் படித்துச் சுவைத்திருந்த பைந்தமிழ் இலக்கியங்களை, வைரமாய் ஒளி வீசும் இலக்கிய வரிகளை,
கருத்துக் கருவூலங்களைத் தன் பாடலில் இழுத்து வந்து இழைத்து வைத்தான்.
பாமர மக்களையும் அவற்றைச் சுவைக்க வைத்தான.;பரந்த கடல் மேல் பரவும் மேகம் அதன் நீரை தனக்குள் இழுத்துக்கொள்கிறது. பிறகு நீராக உள் வாங்கியதை மழையாகப் பொழிகிறது. அதைப் போலத்தான் கண்ணதாசன் என்னும் மேகம் தமிழாகிய கடலில் தான் உட்கொண்டவற்றைத் தன் பாடல் வரிகளில் எளிய மொழியில் மழையாகப்
பொழிந்து தள்ளுகிறது. எடுத்துக்காட்டாக, இப்பாடலைப் பாருங்களேன் , பாடிப் பாருங்களேன்
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே வழியம்பு ஒழுக மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மிவிம்மி இரு கைத்தல மேல் வைத்தழு மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே!" பாட முடிகிறதா, பாடினாலும் பொருள் புரிகிறதா...புரிந்தாலும் உள்ளத்துக்குள் புகுகுகின்றதா! படித்திருக்கும் உங்களுக்குப் புரிந்தாலும் ஏட்டையே தொட்டிராத ஏழைகளுக்கு இதில் ஓரெழுத்தாவது புரியுமா! பட்டினத்தார் பாடல்களுள் ஒன்று இது! அவர் பாடல்களும் கடல்தான்! அந்தக் கடல் மேல் பரந்து திரிந்து மனத்தைப் பறிகொடுத்த கண்ணதாசன் என்னும் மேகம், இந்தப் பாடலைத் தனக்குள் ஈர்த்துக்கொள்கிறது. மூலக்கருத்து சிதையாமல் பாலொடு தேன் கலந்தது போல்
பொருத்தமான சொற்களால் மழையாகப் பொழிவதைக் கேளுங்கள் :
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ!
கல்லாத நல்லவர்களின் கவனத்தையும் ஈர்க்கின்ற வரிகள்! படியாத பாமரர்க்கும் புரிகின்ற மொழிகள்! இதுதான் கண்ணதாசன்!இலக்கிய வரிகளை, கருத்துகளைத் தன் திரைப்படப் பாடல்களில் கலக்கிக் கொடுத்த கண்ணதாசனுக்குக் கம்பன் மேல் தணியாத காதல்!
கம்பன் மேல் கரைகடந்த காதல் கொள்ளாத கவிஞன் எவனுண்டு!

கம்பனைப் பாட வரும் கண்ணதாசன், 'பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளி
வைத்த கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாகவில்லை என்றே நீ பாடு' என்று பாடுகிறான்!
இந்தக் கண்ணதாசன், கம்பதாசனாகி ரசித்த கம்பன் வரிகள் சிலவற்றைக் காண்போமா -
தரந்தாழாமல் பரந்திருக்கும் தமிழோ பெருங்கடல்! அதில் நிரந்தரமாய்ப் பள்ளிகொண்டிருக்கும் கம்பன் காவியமோ தனிக்கடல்! இந்தக் கம்பக் கடலில் மூழ்காதவர்களே இல்லை! - இதில்
சொம்பள்ளிக் குளித்தாலும் சுகமாக நீந்திக் களித்தாலும் கிட்டுகின்ற இன்பத்துக்கு எட்டுகின்ற வானமே எல்லை! வ.வே.சு ஐயராகட்டும் டி.கே.சி முதலியாராகட்டும் வை.மு.கோ ஐயங்காராகட்டும் அறிஞர் அண்ணா துரையாகட்டும் கம்பனடிப்பொடியாகட்டும் மு.மு.இசுமாயிலாகட்டும்...ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதில் ூழ்கியவர்கள்தாம்! தமக்குரிய விதத்தில் கம்பன் அமுதை உண்டு ரசித்தவர்கள்தாம்!
இந்த வரிசையிலே முந்திக்கொண்டு வந்து சேருகிறார் கவியரசர் கண்ணதாசன்.
பூவுக்குப் பூ தாவும் இந்தத் தேனீ, கம்பன் பாவுக்குப் பா தாவித் தாவிச் சுவைக்கிறது.
கம்பன் தமிழில் செம்புலப் பெயல் நீராய் உருகி கம்பன் அமுதை அள்ளிப் பருகி
உள்வாங்கிய தமிழ்த் தாதுவை எல்லாம் கள்வாங்கிய திரைப்படப் பாடலாக
மாற்றித் தருகிறது, கம்பனைப் பெயரிட்டு அழைத்தே போற்றி வருகிறது! ஏனெனில்
கம்பன் என்ற பெயரே கொம்புத் தேனாக இனிக்கிறது இவருக்கு!
'செந்தாழம் பூவில்' என்னும் பாட்டில்
"இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வருணனை" என்கிறார் கண்ணதாசன்.
ஆலயமணியில் ஒலித்த பாடலைத்தான் எடுத்துக்கொள்ளுங்களேன் :

'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா!
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா!
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா!
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா! எனக் கேட்டு நமக்குள்
எல்லை இல்லா இனபம் ஊட்டும் கவிஞர்,
என்ன சொல்லித் தொடர்கிறார் கேளுங்கள் :
'கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!"
சீதையெனும் தாயாகவும் சகுந்தலை எனும் சேயாகவும் தன் காதலியைக் காணும் கவிஞருக்கு யாருடைய சீதையைப் பிடித்திருக்கிறது பாருங்கள்!

கம்பனின் சீதைதான் பிடித்திருக்கிறதாம்! ஏன் தெரியுமா?கம்பன் என்றொரு மானிடன்
'சீதை நடையழகும் சீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி அவனைப்
போட்டானாம் மதுக்குடத்தில் அள்ளி"!
கண்ணதாசனின் வரிகள்- மாலைத் தென்றலாய் மனத்தை மயக்கும் மாணிக்க அரிகள்!
அவள் ஒரு மேனகை என்ற பாடலில்,
'என்ன சொல்லி என்ன பாடக்
கம்பன் இல்லை கவிதை பாட' என்றும்
'அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா" என்றும் இன்னும் பல இடங்களிலும்

கம்பன் பெயரை வைத்திழைத்தே செம்பொன்னாய் ஒளிரும் பாடல்களைப் படைத்திருக்கிறார் கண்ணதாசன்!கம்பன் பெயரை அவர் ரசித்தமைக்குச் சான்றுகள் அல்லவா, இவை!

இதோ, கண்ணதாசன் ரசித்த கம்பன் -கம்பீரமாய் வருகிறான் உண்ணத் தெவிட்டாக் கனியமுதாய்த் தமிழமுதைத் தருகிறான்! எங்கிருந்து தொடங்க? கம்பன் கவிதைகள் - கட்டிக் கரும்புகள்! தொட்ட இடமெல்லாம் சுவைப்பவை கடித்த இடமெல்லாம் - இல்லை, இல்லை
படித்த இடமமெல்லாம் இனிப்பவை! எங்கே தொடங்கினாலும் எங்கெங்கே தொட்டாலும்
அங்கெங்கெனாதபடி சுவை பயப்பவை! என் சிறப்புரையில் சொல்லாத -அண்மையில் எழுத்துக்கூடத்தில் வெளி வந்த நன்றி :சத்தியா - நிலா முற்றம். என்ற கட்டுரையில் இடம் பெற்ற
" காத்திருந்தேன் காத்திருந்தேன்" என்னும்
பாடலில் இருந்தே தொடங்கலாமா? திருமதி பி சுசீலா அவர்களின் தேன் குரலில்
தவழ்ந்து வரும் தென்றலாய்க் காற்றினிலே வரும்; இந்தக் கீதத்தில் கடைசி நான்கு வரிகளைக் குறிப்பிடும் இதன் ஆசிரியர்,

" அடுத்து வரும் வரிகளில் (கண்ணதாசன்) இலக்கியச் சிறப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச்
சென்று விடுகிறார்.
"கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண் மூடிக் காத்திருப்பேன்".... என எழுதுகிறார். உண்மைதான்-கண்ணதாசனின் இந்த இலக்கியச் சிறப்பின் உச்சிக்கு வைரமணி வரிகளுக்குக் காரண கருத்தா கம்பனின் மாணிக்க வரிகள்தாம். இதோ, கம்பனின் காவியம் விரிகிறது அதில் கண்ணதாசன் ரசித்த இந்தப் பகுதி தெரிகிறது!வாருங்கள் வாருங்கள், வந்து பாருங்கள் :கம்பன் காலம் -
மூவருலா, விக்கிரம சோழனுலா... என உலா இலக்கியங்கள் உலா வந்த காலம்!
தன்னேரில்லாத் தலைவன் வீதிவாய் உலா வருகிறான்.; பேதை முதல் பேரிளம் பெண்கள்
ஈறாக உள்ள எழுபருவத்துப் பெண்கள் மாரன் கணை தொடுக்க, தலைவனைக் காண்பதற்கு
வந்து குவிவார்களாம். இதனை நேரிசைக் கலிவெண்பாவில் பாடி முடிப்பதே உலாவாகும்
இப்புதுவகை இலக்கியத்தில் மனத்தைப் பறிகொடுத்த கம்பன் தன் காவியத்திலும் இதன் கூறுகளைத் தொடுகிறான்.உலாவியற் படலம் என்றொரு சிற்றுலாவை பலாப்பழச் சுவையோடு படைத்து உலாவ விடுகிறான்!

மிதிலை நகரிலே, தென்றல் கொடி அசைக்கச் சீதை கரம் பிடிக்கச் சீராமன் வீதிகளில் வலம் வருகிறான். மாவீரன் வரும்போது மலர் தூவி வரவேற்பது முறை அல்லவா! அப்படியே
இங்கும் இராமனை வரவேற்கும் மங்கையர்கள் வெறும் மலரிட்டு வரவேற்கவில்லையாம்!
மாநெடுங்கண் நஞ்சு சூழ் விழிகளைப் பூமழையாக அவன் மீது தூவி வரவேற்றார்களாம்.

இராமனைக் கண்டு நிலைகுலையும் பெண்களைப் பற்றிப் பேசும் இப்பகுதி காதல் பெண்களின் பெருந்தலைவன் கண்ணதாசனைக் கவர்ந்ததில் வியப்பில்லைதான்! மான் இனம் போல, மயில் இனம் போல மீன் இனம் போலக் குவிந்த மகளிர்தம் மனநிலைகளை - கண்ணினால்
காதல் என்னும் பொருளையே காணும் உடல், உள்ள நிலைகளைப் பல பாடல்களில் கம்பன் பாடுகிறான்.

இதில் உள்ள ஒரு பாடல் இலக்கியச் சுவையின் உச்சியாய் விளங்கும் ஒரு பாடல் கண்ணதாசனைக் காந்தமாய்க் கவர்ந்திழுக்கிறது. கன்னித் தமிழெடுத்த கம்பன்
தன்னை மறந்து பாடும் அந்தக் காட்சி : அங்கே-சொன்னலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி இன்னலம் தெரியவல்ல ஓவியன் ஒருவன் தீட்டிய ஒவியமாய் ஒருத்தி!
மைக்கருங் கூந்தல் செவ்வாய் வாள்நுதல் கொண்ட அவள் உலா வரும் இராமனின் அழகு நலமெலாம் கண்டுகண்டு நெக்கனள்;, உருகினள்...பக்கத்தே நிற்கும் தோழியிடம் மறுகினள்:
"நெஞ்சிடை வஞ்சன் வந்து புக்கனன் போகாவண்ணம் கண்எனும் புலங்கொள் வாயில்
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள்".

கம்பனின் இக்காவிய வரிகளைக் கண்ணதாசன் தனக்குச் சொந்தமாக்கி;க் களிக்கிறார். தனக்கே உரிய செந்தமிழில் திரைப் பாடலாக்கி அளிக்கிறார்:
"கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண் மூடிக் காத்திருப்பேன்"....

கம்பனின் வரிகளை ரசித்தவர் அவற்றில் லயித்தவர் அவற்றையே தமதாக மாற்றி
நமக்குள் தமிழ்த் தேனை ஊற்றி அவர் வரிகளில் நம்மை லயிக்கவும் ரசிக்;கவும் செய்துவிடுகிறார் நம் மனங்களை எல்லாம் கொய்துவிடுகிறார் கவியரசர் பட்டத்தை எய்துவிடுகிறார்.

கம்பன் காட்டும் கன்னி கண்ணுள் நுழைந்த கள்வனைக் கண்ணால்; சிறைசெய்து
நெஞ்சச் சிறையில் அடைத்துவிட்டதோடு நிற்கவில்லை அந்தப் பஞ்சவண்ணக் கிளி!
தன்னையும் அவனையும் பள்ளி அறையில் கொண்டு போய்ச் சேர்க்கும்படித் தோழியை வேண்டுகிறாள். கண்ணதாசனின் கன்னியோ கண்மூடிக் காத்திருப்பேன் எனக் காத்திருக்கிறாள்.
அவனுக்காகவே அவள் பூத்திருக்கிறாள்.
கம்பனின் உலாவியற் படலத்தில் இது போலப் பல பாடல்கள் இலக்கிய உலகின் இன்ப உச்சிக்குக் இட்டுச்செல்லும் இனிய ஆடல்கள்!

பருவப் பெண்கள் இராமனின் அழகு நலன்களை எல்லாம் பகுதிபகுதியாகப் பாhத்துப் பார்த்துப் பருகுகிறார்கள்! திருமேனி அழகைத் தீண்ட முடியாமல் உருகுகிறார்கள்!உதித்த சூரியனாய் உலா வரும் அவன் மேனியில் பதித்த இடத்திலிருந்து பார்வையை மீட்க முடியவில்லையாம்!
வாள்கண் நங்கையர்தம்; கண்கள் ஆடவர்கள் மேல் முதலில் பாயும் இடம் தோள்களாம்! பல இடங்கள்pல கம்பன் சொல்கிறான். பாதையோடு செல்லும் முனிவனின் பின்னால்
இராமன் செல்கிறான் அவன் மேல் சீதைதன் பார்வையைப் பதிக்கிறாள் தன் நெஞ்சைப் பறிகொடுக்கிறாள். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்! கண்ணொடு கண் இணைகிறது.
நெஞ்சொடு நெஞ்சு அணைகிறது. உயிரோடு உயிர் பிணைகிறது! அச்சமயம், சீதையின்
நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை ஆக்;கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன.
இது போன்ற இன்னொரு காட்சியைக் கம்பன் உலாவியற் படலத்தில் காட்டுகிறான் :
உலவி வரும் நிலவு என வீதியில் உலவி வரும் இராமனின் அழகு
நலன்களைக் காணும் சிலபெண்களின் கண்கள் அவன் தோளில் ஆழ்கின்றன.
சிலபெண்களின் கண்கள் அவன் தாளில் வீ;ழ்கின்றன.
"தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே!"
கம்பனைத் தவிர வேறெந்தக் கொம்பனும் வரைய முடியாத காவிய வரிகள்!

மலைத்தோள் கண்டு மகளிரின் மனங்கள் மலைத்துப் போகும்! நிலைகுலைந்த நெஞ்சங்களோ விரகத்தில் வேகும்! இராமனின் தோள் சேரும் பேறு சீதைக்கு மட்டுமே என்றாலும் வாராதோ தங்களுக்கும் அப்பேறு என்ற ஏக்கம்! விளைவு? பதிந்த இடத்தை விட்டு நகர மறுக்கும் விழிகள் - உள்ள(த்)தைப் பகர முடியாத மொழிகள்!
புவனமே புரண்டெழுந்து வந்தாலும் அவர்கள் கவனம் என்னவோ அவனின் தோள் மீதுதான்!

வேறு சில பெண்களுக்கோ வேறு வகை எண்ணம் : கல்லையும் பெண்ணாய்க் கனியவைத்தனவாமே காகுத்தனின் கமலப் பாதங்கள் - இப்போது தங்களையும் அப்படிச் செய்யுமா, தங்கள் வாழ்வும் விமோசனம் பெற்று உய்யுமா? பாவப்பட்ட பெண்கள் அங்கே
ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு தாள் கண்டார் தாளே கண்டார்!

தோளையும் தாளையும் தனித்தனியாய் நோக்குறும் கன்னியர் பற்றிய வரிகள்
கண்ணதாசனின் கருத்தைக் கவர்ந்துவிடுகின்றன! என்ன அற்புத வரி இது :
“தோள் கண்டார் தோளே கண்டார்”! ஆகா, ஆகா என அவர் மனம் தழைகிறது!
இப்படியான அற்புத வரியை எப்படியாவது பயன்படுத்த விழைகிறது!
படித்துச் சுவைத்து லயித்து ரசித்த சொற்களை அப்படியே இழைத்து வைக்க
நல்லதொரு வாய்ப்பும் வருகிறது! திரைப் படம் : இதய கமலம்
“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்”

தாளை வாளாக்கிக் கம்பனின் வார்த்தைகளைத் தன் பாடலில் வார்த்தெடுக்கும் வித்தை கண்ணதாசனுக்குக் கைவந்த கலை இல்லை, இல்லை… கவிதை தந்த கலை!
எண்ணத்தில் எப்போதும் இனிக்கின்ற வண்ணம் பலப்பல வண்ணக் கவிதைகளை
வாரி வழங்கிய வள்ளல் கம்பன்.கைவண்ணம் கால்வண்ணம் என்று அவன் சொன்ன
வண்ணம் கண்டு கேட்டு ரசித்த கண்ணதாசனும் அவ்வண்ணமே பல வண்ணங்களைப் போட்டுப் பாடலாக்கி நாம் மகிழும் வண்ணம் தந்த திறமையை என்னவென்பது!

அந்தப் பாடலைப் பாhக்கும் முன் கம்பன் முந்தித் தந்த பாடலைப் பார்ப்போமா?
விசுவாமித்திரன் வேள்வியைக் குலைக்க விசுவரூபம் எடுத்து வருகிறாள் தாடகை என்னும் சழக்கி இறைக்கடை துடித்த புருவமும் எயிறு என்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயுமாக வருகிறாள் அவ்வரக்கி! இராமனுக்கும் அவளுக்கும் கடும் போர்!

இறுதியில், இராமன் தன் சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம் விடுகிறான்.
அறந்திறம்பிய அரக்கியின் மார்பைத் துளைத்துப் புறம் போகிறது அந்த இராம பாணம் -
கல்லாப் புல்லர்க்கு நல்லார் சொன்ன பொருள் போல! கரிய செம்மலாம் காகுத்தன் கன்னிப் போரில் காட்டிய வீரம் கண்டு மகிழ்ச்சி கொண்டு பெரிய முனிவனும் அரிய படைக்கலன்களை வழங்கினான். பின்னர், முனிவன் முன் செல்ல அண்ணலும் அவன் தம்பியும் பின் சென்றனர் - மிதிலை நோக்கி! வழியில் -மேடெனக் கருங்கல்; ஒன்று கிடந்தது இராமனின் பாதம் அதனைக் கடந்தது கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ அற்புதம் ஒன்று நிகழ்ந்தது.
பெண்ணமுதாய் அது மாறி நின்றது! அன்னையே அனையாட்கு நிகழ்ந்தது என்னை என இராமன் கேட்கிறான்.கவுதம முனிவனின் கைப்பிடித்தவளை அகலிகை எனும் பெயர் படைத்தவளை விழியால் காதல் கதை பேசி நவ்வி போல் விழியாளை வீழ்த்திய இந்திரன் கதையை முனிவன் கூறக்கேட்டான். "நெஞ்சினால் பிழைப்பு இலாள்' என
நீதித் தீர்ப்பு வழங்கிப்போட்டான.;; தாடகை வதத்தில் இராமன் தடக்கையின் உரங்கண்டு
மேடைக் கல் மாதவளாய் மாறியதில் அவன் காலின் திறங்கண்டு;விசுவாமித்திரன் பாடுகின்றான் வியப்பின் எல்லையில் நின்று "மைவண்ணத் தரக்கி போரில்
மழைவண்ணத் தண்ணலே கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்" என்று! இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய
அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன் பாடல் ஒன்றில் முழுக்க முழுக்க
வண்ணங்களாக வாரி இறைத்துவிடுகிறார் தென்னங் கள்ளாக இன்பத்தை நிறைத்துவிடுகிறார்!
பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில் கொடிகட்டிப் பறந்த பாடல் அது.
படம் : பாசம்
இதோ, கவியரசரின் கன்னித் தமிழ் வரிகள் :
ஆண் :
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் :
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல்
தேர் வண்ண மேனி தொட்டு
பூவண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ?
இல்லை, இல்லை கவிதை வண்ணம்?
இதைப் போல, வேறு வண்ணங்களிலும்
பாடல்கள் அமைத்துள்ளார் கவிஞர். ஆனால் அவை கம்பன் அடியொற்றிப் பிறந்தவை அல்ல.
அதனால் அவை இங்கே இடம் பெறவில்லை.காட்டாக,கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தனா என்று பாடிய இராமச்சந்திரக் கவிராயர் பாடலைப்
போல அமைந்ததுதான், பாவமன்னிப்புப் படத்தில் இடம் பெற்று நம் நெஞ்சில் நிலைத்து நின்று விட்ட
பாடல் :
"அத்தான், என்னத்தான் அவன்
என்னைத்தான் எப்படி சொல்வேனடி..".
'பலே பாண்டியா" என்ற படத்தில் வரும்,
'அத்திக்காய் அத்திக்காய்
ஆலங்காய் வெண்ணலவே..' பாடல் எழுதக் கவிஞருக் 'கை' கொடுத்தது தனிப்பாடல்
திரட்டில் வரும் "உள்ளமிளகாயோ ஒரு பேச்சுரைக்காயோ வெள்ளரிக்காயோ..." என்ற
வெண்பா. இவை போன்றவற்றை இக்கட்டுரையில் வேண்டுமென்றே கொண்டுவரவில்லை.
வாய்ப்பு கிடைத்தால் பின்னொருகால் எழுதக்கூடும். இதுவரை பார்த்தவற்றில், அடியேன் குறிப்பிட்ட கம்பனின் பாடல்களைப் பலரும் அறிந்திருக்கக் கூடும். அல்லது கேள்வியாவது
பட்டிருக்கலாம். இனி, கவிஞர் எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்!
வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது.
'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா...' என்ற பாடலதான் அது. அதில் இடம் பெறும் பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான் பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் - ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான். என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது!
எங்கே? எந்த இடத்தில்? யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?...
தேடுங்கள், கண்டடைவீhகள்.
கண்டவர்கள் விண்டிடலாம.; விண்டவர்கள் கண்டிருக்கவேண்டும்.
கண்டு பி(ப)டிக்க இரண்டு நாள்கள் போதுமா?
சென்ற முறை, வியட்நாம் வீடு என்ற படத்தில் வரும் 'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா...' என்ற பாடலைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் வரும் 4 வரிகளையும் சொல்லி அவை கம்பன் பாடலின் அடியொற்றி எழுதப்பட்டவை, கம்பனின் அவ்வரிகளை யாரேனும் சுட்டிக்காட்ட முன் வாருங்கள் என அழைப்பும் விடுத்திருந்தேன். இது வரை எவரும் அதற்கு விடை தரவில்லை. அதனால் பாதகம் இல்லை, தவறும் இல்லை! ஏனெனில், கம்பனை ஆழமாகப் படித்தவர்களும் அறியாத, அறிந்தும் பொருட்படுத்தாத பாடல் இது!. இனி நம் தொடரைத் தொடர்வோம்.
"சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்"

எனப் பாடிய கண்ணதாசன் சங்க இலக்கியங்கள் முதல் சிற்றிலக்கியங்கள் ஈறாகத் தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படித்திருக்கவேண்டும். தம் திரைப்படப் பாடல்களில் இவர் இவற்றை இழைத்திருக்கும் பாங்குகளைப் பலரும் இணையதளத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.

(காண்க : நிலாச்சாரலில் கண்ணதாசன் பற்றிய சக்திதாசன் கட்டுரைகள், திண்ணையில் அப்துல் கையூம் கட்டுரை, - நிலா முற்றத்தில். சத்தியாவின் கட்டுரை...).
எனவே, திரைப் பாடல்களில் தமிழ்த் தென்றலைத் தவழவிட்டவர் கண்ணதாசனே. எள்ளளவும் ஐயம் இதில் கொள்ளலாகாது! அதிலும் கம்பன் மேல் தனிக்காதல் கண்ணதாசனுக்கு உண்டு. கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடு இல்லை அவர். கம்பனில் கருத்தூன்றிப் படித்திருக்கவேண்டும். இல்லை என்றால் மற்றவர் பார்வையில் படாத பாடல் ஒன்றை அவர் பார்த்திருப்பாரா? பார்த்து ரசித்திருப்பாரா? இல்லை அதனைத் தன் பாடலில் தனக்கே உள்ள முறையில் பதிவுதான் செய்திருப்பாரா? அந்தப் பாடலைக் காணுமுன் மறுபடி கண்ணதாசன் வரிகளை வைக்கிறேன் உங்கள் பார்வைக்கு :
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான் பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் - ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.
கம்பனின் காவிய வரிகள் இதோ :
"பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை
மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்தி!"

சூர்ப்பணகை - மூக்கறுபட்டவள் ஆர்ப்பரித்து அழுத வண்ணம் அண்ணன் இராவணனிடம் ஓடோடி வருகிறாள். தன் அவல நிலைக்குக் காரணத்தைத் தருகிறாள். அதே சமயம், சீதையின் அழகை எல்லாம் சொல்லிச் சொல்லிக் காட்டுகிறாள் அவனுக்குக் காமத்தீயை மூட்டுகிறாள். அப்போதே அவன் சீதையை அடைந்துவிட்டதாகக் கற்பனை ஊட்டுகிறாள்.

அவரவரை அவரவர் இடத்தில் வைக்க வேண்டும் என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
அதனைக் கம்பன் இங்கே கையாள்கிறான். 'பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான். தாமரை மலரில் இருந்த திருமகளைத் தன் மார்பிலே வைத்திருக்கிறான்
பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன். தன் தேவியாகிய கலைமகளைப் பிரமன் தன் நாவிலேயே வைத்திருக்கிறான்.மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரை இப்படித் தங்களிடமே தங்களுக்கு உள்ளேயே வைத்து வாழ்கிறார்கள். மும்மூர்த்திகளுக்கும் மேலாய்க் கீர்த்தி பெற்ற அண்ணனே மின்னலை விட நுண்ணிய இடை கொண்ட செம்பொன் சிலையாம் சீதையை அடையும் போது அவளை எங்கே வைத்து வாழ்வாய் நீ!'எனச் சூர்;ப்பணகை கேட்பதாய் இப்பாடல் வருகிறது.ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை சூழு;ச்சிப் படலத்தில் இடம்பெறுகிறது.

கம்பன் இங்கே தனக்கே உரிய குறும்போடு 'எங்கனம் வைத்து வாழ்தி!' என்ற வரியில்
கீழறைப்பொருளை (னசயஅயவiஉ சைழலெ) வைக்கிறான் : மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய தேவிகளைத் தம் உடல்களில் வைத்து வாழ்ந்தார்கள் ! இராவணனோ தனக்கு உரிமை இல்லாத சீதையை எங்கனம் எங்கே வைத்து வாழ்வான்? வாழமாட்டான்! இறுதியில் வீழ்வான் என்ற பொருள் இவ்வரியில் பொதிந்துள்ளது.

கம்பனை மேலோட்டமாக மேய்ந்தவர்கள் கண்களில் மட்டுமல்ல கம்பனில் ஆய்ந்து தோய்ந்தவர்கள் பார்வையிலும் படாத பாடல் இது! ரசிகமணி டி.கே.சியோ,
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளோ பேராசிரியர் அ. ச. ஞானசபந்தமோ கூட
எங்கேயும் எடுத்துக் காட்டாத கவிதை இது! எப்படித்தான் கண்ணதாசன் கண்ணில் இது பட்டதோ! எப்படித்தான் அவர் கருத்தையும் கவர்ந்துவிட்டதோ! அகலமான கம்பனை ஆழமாகவும் படித்திருக்கிறார் கண்ணதாசன் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

கம்பனின் கருத்தை எடுத்துத் திரைக் காட்சிக்கு ஏற்பச் சொற்களை அமைத்து
' ராஜா பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்." என்று
முத்தாய்ப்பாய் முத்திரை பதிக்கிறார் கவியரசர்!

கம்பனின் வைரமணி வரிகள் பல
கவிஞர் கண்ணதாசனின் நெஞ்சைக் கவர்ந்திருக்கின்றன.
இவற்றைப் பற்றிக் கவிஞரே 'நான் ரசித்த வர்ணனைகள்" என்ற
தம் நூலில் குறிப்பிடுகிறார். அவர் ரசித்த அந்தப் பாடல் -
பலரும் ரசித்த பாடல்! கம்பனின் தலைசிறந்த பாடல் வரிசையில் இடம் பெற்ற பாடல்.
எந்த அளவுக்கு இந்தப் பாடல் கவிஞரின் நெஞ்சைக் கவர்ந்தது என்றால்,
அப்பாடல் வரி ஒன்றை அப்படியே தன் பாடலில் பதிந்து வைத்துவிட்டார் கவிஞர்.
அந்த வரியைப் பாhக்குமுன் கம்பனின் கவிதை வரிகளைக் கண்டு
படித்து ரசித்து வருவோம் , கண்ணதாசன் ரசித்ததைப் போல.

என்னையே நோக்கி யான் இந்நெடும்பகை கொண்டது எனத் தன்னையே தருக்கி நின்ற இராவணன்,
'வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங் கையொடு மீண்டு'
'சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பிய' இராவணன் மண்ணின் மீது மாண்டு கிடக்கிறான் - மனைவி மண்டோதரி ஓடோடி வந்து அவனைக் கண்டு புலம்பி அழுகிறாள்.

பெற்ற மகன் இந்திரசித்துவின் தலை அற்ற உடலைக் கண்டழுது ஒப்பாரி வைக்கும் போது
கொற்றவன் இராவணனுக்கும் நாளை இந்தக் கதிதானே என ஒப்பிலாத் தன் கணவனை நினைத்து அப்போதே ஒப்பாரி வைத்து அழுதவள் அவள். அதனைக் கம்பன்
"அஞ்சினேன் அஞ்சினேன் அச்சீதை என்ற அமுதால் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ!" என
அவள் அரற்றுவதாகப் பாடுவான்.

மகன் மரணத்திலேயே மணாளனின் மரணத்தைக் கண்டு உருகிப் பாடிய மண்டோதரி
கணவனின் உடலைப் பாhக்கிறாள் கண்ணீரும் கம்பலையுமாகத் தன் உள்ளத்து
உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்க்கிறாள். வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்தத் திருமேனி எள்ளிருக்க இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
; உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!
இராம பாணம் இராவணன் உடலைச் சல்லடைக் கண்களாய் துளைத்திருக்கிறதாம்!
(இக்காலத்து யுமு 47 துப்பாக்கி போல). ஏன்? ஏன்? ஏன்?
காரணத்தைத் தேடும் மண்டோதரியன் மனம் பெண்மைக்கே உரிய (கநஅiniநெ டழபiஉ)
தோரணையோடு பேசுகிறது : அமுதால் செய்த நஞ்சாம் சீதை மேல் வைத்த
முறையற்ற அறமற்ற காதல் எங்கே இருக்கிறது எனத் தேடிக் கண்டுபிடித்து அதனை வேரோடு கல்லி எறியவே இராவணன் உடலைப் பாணம்
சல்லியாகத் துளைத்துவிட்டிருக்கிறது. துளைக்கப் பட்ட உடல் எப்படிப் பட்ட உடல்?
இளைத்துப் போன உடலா அது? இறைவன் இருக்கும் இமயத்தையே
பெயர்த்தெடுக்க முயன்ற உடல் அல்லவா! அதனாலேயே சாதாரண அவன் மேனி
திருமேனி ஆன உடல் அல்லவா?
(திருமேனி என உடலை அழைப்பது வைணவ மரபு, இராவணன் சிவபக்தன், ஆகவே அவன் உடலைத் திருமேனி என வைணவ மரபுப்படி அழைப்பது தவறாகும். ஆனால் கம்பன் அப்படித்தான் அழைக்கிறான் மண்டோதரி வாயிலாக! கைலாய மலையை அவன் தீண்டிய காரணத்தால் அவன் மேனி திருமேனி ஆனது என்ற கருத்துப்படத்தான் கம்பன் அப்படிக் கூறி இருக்கிறான்).
சிவனைக் குறிப்பிட எத்தனையோ வர்ணனைகள் குறியீடுகள் உண்டு.
அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ' வெள்ளெருக்கஞ் சடைமுடியான்" எனக் கம்பன் குறிப்பிடுகிறானே, ஏன்? யாருமே விரும்பாதவற்றைத் தான் விரும்பி ஏற்பவன் சிவன் - அமுதைப் பிறர்க்கு அளித்துவிட்டு நஞ்சைத் தானருந்திய திருநீலகண்டன் அல்லவா அவன். பட்டையும் பீதாமபரத்தையும் பிறர்க்குத் தந்துவிட்டுத் தான் மட்டும் மான் தோலையும் யானைத் தோலையும் புலித்தோலையும் உடுத்துகின்றவன் தானே அவன். அது போலவே, வண்ண மலர்களை, வாசப் பூக்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு யாரும் சூட விரும்பா எருக்கம் பூவைத் தான் சூடிக்கொண்டவன். இப் பூவில் கண்ணைக் கவரும் வண்ணமோ கருத்தைக் கவரும் கள்ளோ (தேன்) இல்லை! பிறரைக் கவரும் ஆற்றலும் இந்தப் பூச்சூடிய சடைக்கும் இல்லை! அதனால்தான் போலும் இராவணன் அங்கே தன் வீரத்தை வலிமையைக் காட்டி மேரு மலையைத் தோளில் எடுக்க முனைந்தான். இப்போது இவற்றுக்கு நேர் மாறான முரண்தொடையை அமைக்கிறான் கம்பன். கள்ளோடு கூடிய அழகிய வண்ண மலர்களைச் சீதையின் கூந்தலுக்குச் சூட்டுகிறான், "கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்' என்று. மயக்கம் தருவது கள். அந்தக் கள் உள்ள மலர்களைச் சூடிய சீதை மீது மாளாத மயக்கம் கொண்டான் இராவணன். அழகு தருவது கூந்தல். அதனால் அழகெனும் அழகுமோர் அழகு பெற்ற சீதை மேல், கள்ளொடு கூடிய பூச்சூடிய கூந்தலை உடைய சானகி மீது அடங்காக் காதல் கொண்டான் இராவணன். இவ்வளவு கருத்தழகுகளைப் பொதிந்துள்ள இந்தக் கவிதை கண்ணதாசன் மனத்தைப் பெரிதும் கவர்ந்ததில் வியப்பிலலை. அதிலும் ' கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகி' என்ற வரி கண்ணதாசனைப் பெரிதும் ஈர்த்துவிட்டது. பல திரைப் பாடல்களில்;, கம்பன் கருத்தை உள்வாங்கித் தன் வயமாக்கி தன் சொற்களில் வழங்கிய கண்ணதாசன் இந்த வரியை மட்டும் அப்படியே தன் பாடலில் பொதிந்து வைத்துவிடுகிறார், தங்கஅணிகலனில் வைரமணியைப் பதிப்பது போல :
"கானகத்தைத் தேடி இஇன்று போகின்றாள்
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகி".

எந்தப் படத்தில், என்ன இடத்தில் இந்தப் பாடல் வருகிறது, முழுப்பாடல் என்ன... பாடியவர் யார்... போன்ற விவரங்களை அறிந்தோர் கூறினால் பெரிதும் மகிழ்வேன்.
இனி,கம்பன் சொற்களையும் கருத்துகளையும் கலந்து கண்ணதாசன் எழுதிய பாடல்
ஒன்றைக் காண்போமா...

கம்பனில், கவியரசர் திளைத்து ரசித்த பகுதிகள் பலவற்றையும் பார்த்து வரும் வேளையில், விதி பற்றிய பாடல் ஒன்றை அவர் பெரிதும் ரசித்திருப்பதைக் காண முடிகிறது.
பாடல் இடம் பெற்ற படம் : படம் : தியாகம்

பாடல் வரிகள் :
நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றமின்றி
வேற யாரம்மா!
சிறப்பான இந்த வரிகளுக்குப்
பிறப்பெடுத்துக் கொடுத்தவை
கம்பனின் காவிய வரிகளே!

முடிசூட்டல் இராமனுக்கே என முடிமன்னன் தயரதன் முடிவுசெய்கிறான்.
செய்தி கேட்டு வெகுண்டெழுகிறாள், மனமுடைகிறாள்
'தீயவை யாவினும் சிறந்த தீயாளா'கிய கூனி.
கைகேயி அரண்மனையை அடைகிறாள்.
அஞ்சுகம் எனப் பஞ்சணையில் படுத்துறங்கும் அவளை உலுக்கி எழுப்புகிறாள்.
அவளைச் சீண்டுகிறாள் வரம் ஒன்றினால் இராமன் காடேகவும் மற்றதனால்
பரதன் நாடாளவும் மன்னனிடம் கேட்குமாறு தூண்டுகிறாள்.
இருவருக்கும் இடையே வாதம், விவாதம் தூள் பறக்கின்றன!
இறுதியில் - திண்ணிய நெஞ்சினளாகிய கூனி மந்தரை வந்த வேலையை
எண்ணிய காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறாள். தேவி தூய சிந்தையும் திரிகிறது.

முடிசூட்டல் இல்லை இராமனுக்கு எனக் கேட்ட இளவல் இலக்குவன் காலத் தீ எனக் கொதிக்கிறான் "சிங்கக் குட்டிக்கு ஊட்ட இருந்த தீஞ்சுவை ஊனை நாயின்
வெங்கண் குட்டிக்கு ஊட்ட நினைத்தனளே கைகேயி! என்னே அவள் அறிவின் திறம்" என்று சீறி வானுக்கும் பூமிக்குமாய்க் குதிக்கிறான் :சொன்ன சொல்லை மாற்றிவிட்ட
மன்னவனைத் தந்தையாக எண்ண அவன் மனம் ஒப்பவில்லை!
"சூட்டுவேன் இராமனுக்கே முடி நான் யாரெனக் காட்டுவேன். இதற்குத் தடையாக அந்த
மூவருமே வந்தாலும் சரி தேவருமே வந்தாலும் சரி யாவரையும் அழித்தொழிப்பேன். இதனைத் தடுப்பவர்கள் முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள்"

தம்பியின் தனி ஆவேசக் குரல் கேட்டு நம்பியும் ஓடோடி வருகிறான்.
"இதுவரை எவரையும் சொல்லால் சுடாத தம்பியே இது என்ன புதுக் கோலம்,
ஏனிந்தக் கோபம்?" இனிய சொல்லெடுத்து இராமன் கேட்க
"வலக்கார் முகம்என் கையதாக அவ்வானுளோரும்
விலக்காரவர் வந்துவிலக்கினும் என்கை வாளிக்கு
இலக்கா எரிவித்துலகு ஏழினொடு ஏழும் மன்னர்
குலக்காவலு மின்றுனக்கு யான்தரக் கோடியென்றான்"
இலக்குவன்.
(தேவர்களே வந்தாலும் அவர்களை என் அம்புகளுக்கு இரையாக்குவேன்,
ஈரேழு உலகங்களையும் யான் அளித்து உனக்கு முடி நான் சூட்ட
நீ பெற்றுக்கொள்வாயாக! - இதுதான் இதன் பொருள்)


இந்தப் பாடலைக் கம்பன் அமைத்திருக்கும்
ஓசை நயத்தோடு படித்துப்பாருங்கள்.
கூற்றம் எனக் கொதிக்கும் இலக்குவனின் சீற்றமும்
விண்ணுக்கும் மண்ணுக்குமாய்க் குதிக்கும் அவன் தோற்றமும்
கண்முன்னே தெளிவாகத் தெரியும்!
அவன் கோப மன நிலை புரியும்.

அவனை இராமன் அமைதிப் படுத்துகிறான்.
இலக்குவனின் கோபத் தொனிக்கு மாறாக
இராமனின் குரலொலிக்கிறது :

"நதியின் பிழையன்று நறும்புன லின்மையற்றே
பதியின் பிழையன்று பயந்துநமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று மகன்பிழையன்று மைந்த
விதியின் பிழைநீயிதற் கென்கொல் வெகுண்டதென்றான.;"

இந்தப் பாடலையம் இந்தச் சந்தத்தோடு படித்தால்
இராமனின் சாந்தத்துக்கு ஏற்பக் கம்பன் சந்தம் அமைப்பதை உணரலாம்.
(கம்பனின் பாடல்களில் எல்லாம் அந்த அந்தச் சூழ்நிலை, பாத்திரங்களின்
தன்மைக்கு ஏற்பவே சந்தங்கள் அமைந்திருக்கும்.
எனவே கம்பனின் கவிதைகளை ரசிக்க விரும்வோர்
அவற்றை வாய்விட்டு உரிய சந்தத்தோடு படித்தல் வேண்டும்.
அப்போது தான் கம்பனை முழுமையாக உணர முடியம் ரசிக்கவும் முடியும்!).
கவியரசர் இப்படித்தான் கம்பனை ரசித்திருப்பார்.
அதனால் தான் இந்தப் பாடல் வரிகளையும் கருத்துகளையும்
தன் திரைப் பாடலில் பக்குவமாய் எடுத்துக் கையாண்டிருக்கிறார்.

கண்ணதாசன் பாடல்களுக்கு
விரிவுரையோ விளக்க உரையோ
பதவுரையோ பொழிப்புரையோ தேவை இல்லை!
மாறாகக் கம்பன் பாடல்களைப் படிப்பதற்கும்
பொருள் உணர்ந்துகொள்வதற்கும் பயிற்சி தேவை!
அதனால்தான் இக்கட்டுரைகளில்
கம்பன் கவிதைகளுக்குச்
சுருக்கமான விளக்கம் தேவை ஆயிற்று.
இனி,கம்பன் பாடியதாகக்
கண்ணதாசன் உட்படப் பலரும் தவறாக
எண்ணிக்கொண்டிருக்கும் பாடல் வரி ஒன்றைச் சொல்லி
அதனைக் கண்ணதாசன் பயன்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டி
அது போலவே
கம்பன் காட்டாத காட்சி ஒன்றைக்
கம்பன் காட்டி இருப்பதாகக் கருதிக்
கண்ணதாசன் எழுதிய வரிகளைக் கூறி
இந்தக் கட்டுரைக்கு மங்களம் பாடிவிடலாம்.

முடிப்பதற்கு மனம் வரவில்லை! இருந்தாலும் முடிக்கத்தானே வேண்டும்.
முடிப்பதற்கு முன்பாக ஒரே ஒரு பாடலை மட்டும் நீங்கள்
படிப்பதற்குத் தரவா...படிப்பதற்கும் ரசிப்பதற்கும் இனிய பாடல்!
'நடையா! இது நடையா! ஒரு நாடகம் அன்றோ நடக்குது!' என எழுதிய கண்ணதாசனை இந்தப் பாடல் ஈர்த்திருக்கிறது. ஏனெனில் இதிலும் ஒரு நாடகம் நடைபெறுகிறது - வசனம் ஏதும் இல்லாமலே! இதுவும் நடையைப் பற்றியதுதான்.
இரண்டே இரண்டு பாத்திரங்கள் -
இராமனும் சீதையும் தனிமையில்
காடு தரும் இனிமையில்
சுற்றிலும் செடிகொடி சூழ அமைந்த சுனை.
அங்கேதான் கொடி கட்டிப் பறக்கிறது கம்பனின் கற்பனை!
ஒதிமம் (அன்னம்) ஒன்று அப்பக்கம் ஒதுங்கக் காண்கிறான் இராமன்.
கண்டவன் முகத்தில் குறும்பு முறுவல் ஒன்று களிநடம் புரிகிறது.
அன்னத்தை நோக்கியவன் அருகில் வரும்
சீதைதன் நடையை நோக்கினானாம். நோக்கிப் பின்;
சிறியதோர் முறுவல் செய்தானாம்!
கொண்டவனின் கண்களைக் கண்டே அவன்
எண்ணத்தை அறிந்துகொள்ளும் கற்பூர அறிவு சீதைக்கு!
கண்ணாளன் கண்ணாலேயே எழுதிய கவிதை வரிகளுக்குப்
பெண்ணவளும் தன் கண்ணாலேயே பதில் கவிதை தீட்டிவிடுகிறாள்
நம் நெஞ்சில் தமிழ்த் தேனைக் கூட்டிவிடுகிறாள்.
' மாதவள் தானும் ஆண்டுவந்து நீருண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள்."
எனக் கம்பனும் தன் கற்பனை வளத்தைக் காட்டிவிடுகிறான்.
இத்தனைக்கும்
இருவருக்கும் இடையே
இல்லை ஒரு வாய் பேச்சு!
இருந்தது என்னவோ கண்வீச்சு!
மின்னின் இளைத்த இடை
கொண்ட சீதை நடை
அன்னத்தின் நடை போல என இராமன்
சொல்லாமல் சொல்லி விடுகிறான்
தன் குறும்புப் புன்னகையால்.
அவனுக்குச் சமமாகப் பதிலடி தருகிறாள், இல்லை, இல்லை,
பதில் வரி தருகிறாள் சீதை, அதே குறும்பு கொஞ்சமும் குறையாமல்,
அங்கே வந்து நீருண்டுத் திரும்பிச் செல்லும் யானையைப் பார்த்துப்
புதியதோர் முறுவல் பூத்ததின் வாயிலாக!
முன்னோர் இடத்தில் -
மிதிலை நகரில் சனகன் அரண்மனையில்
வில்லை வளைக்க எழுந்து கம்பீரமாய் நடக்கும் இராமனை,
"நாகமும் நாகமும் நாண நடந்தனன்" என்பான் கம்பன்.
(நாகம் ஸ்ரீ மலை, யானை).
ஒருவர் நடையை மற்றவர் கண்டு ரசித்துக்
கண்களால் பேசிக் கருத்தை உணர்;த்தும் இந்த
அழகிய கவிதையைக் கம்பன்,
ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை படலத்தில் இழைக்கிறான்.
தமிழின்பக் கோட்டைக்கு நம்மை அழைக்கிறான்.
இந்தக் கவிதையின் அடிப்படையில்தான்
கண்ணதாசனின் கவிதை வரிகள்
(ஏற்கனவே இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக் காட்டியவை)
'சீதை நடையழகும் சீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி அவனைப்
போட்டானாம் மதுக்குடத்தில் அள்ளி"!
என மலர்ந்தன போலும்.
கம்பனின் இக்கவிதை விதையிலிருந்து முளைத்ததுதான்
இன்னொரு திரைப்பாடலில் வரும் வரி ஒன்று :
பாடல் : மானல்லவோ கண்கள் தந்தது
படம் : நீதிக்குப் பின் பாசம்
வரி : (தேக்கு மரம் உடலைத் தந்நதது)
சின்ன யானை நடையைத் தந்தது.

இப்படி, இப்படி எப்படி வேண்டுமானாலும்
எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம்;தான்.
கண்ணதாசன், தமிழ் இலக்கியங்களில் இருந்தும் ஆங்கில இலக்கியங்களில் இருந்தும் எடுத்தாண்ட வரிகளையும் கருத்துகளையும் பற்றிப் பலர் இணையதளங்களில் அவ்வப்பேர்து பதிந்து வைத்திருக்கிறார்கள. அவற்றைப் பற்றி எழுதப் போனால் இன்னொரு கட்டுரையே உருவாகும். அது, இக்கட்டுரையின் நோக்கம் இல்லை! ஆதலால் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்வையைத் திருப்பாமல் (திருப்ப வேண்டும் என்ற சோதiயையும் வெற்றிகரமாகத் தாண்டி) கட்டுரையைக்கொண்டு செல்ல வேண்டியதாயிற்று.

இறுதியாகச்சொல்ல வேண்டுமென்றால், கம்பன் என்ற காவியக் கவிஞனுக்கும் கண்ணதாசன் என்ற திரைப்படக் கவிஞனுக்கும் இடையே பல விசித்திர ஒற்றுமைகள் உண்டு. வடமொழிக் காவியத்தைத் தழுவித் தித்திக்கும் தேன் தமிழில் எத்திக்கும் புகழ் மணக்க விருந்து படைத்தவன் கம்பன். கண்ணதாசனோ கனகதாரா என்ற வடமொழிப் படைப்பை அழகிய தமிழில் மொழி பெயர்த்தவன். படைப்பு வடமொழியில் என்றாலும் படைத்தவர் தமிழனாகிய ஆதிசங்கரரே. மூலக் கருத்துச் சிதையாமல், கண்ணதாசன் அளிக்கும் பொன் மழையைக் கேளுங்கள் :
' மந்திரம் உரைத்தாற் போதும் - மலரடி தொழுதால் போதும்
மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திரப் பதவி கூடும் - இகத்திலும் பரங்கொண்டோடும்
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்'.
கண்ணதாசனுக்கு முன்னோர் இலக்கியங்களைக் கையாண்டுப் புழங்கவும் தெரியும் மொழிபெயர்ப்பையே இலக்கியமாகப் படைக்கவும் தெரியும் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.

பளிச்சிடும் இன்னோர் ஒற்றுமை : முன்னோர் மொழிகளைப் பொன்னே போல் போற்றி அமுதம் அன்ன அம்மொழிகளைத் தன் வயமாக்கிப் புத்தமுதாய்ப் படைக்குந் திறமை இருவருக்கும் உண்டு. வள்ளுவர் மணிமொழிகளையும் கோதை நாச்சியார் அணிமொழிகளையும் ஆழ்வார்கள் பாசுரங்களையும் படித்து அவற்றில் தான் ரசித்தவற்றைத் தன் படைப்பில் குழைத்துத் தந்தவன் கம்பன். கண்ணதாசனும் அப்படியே! தான் படித்துச் சுவைத்தவற்றைத் தன்வயமாக்கி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலத் திரைப்படப் பாடல்களில் இழைத்துத் தந்தவன் கண்ணதாசன். (இந்த உவமையைத் தருபவனே கம்பன்தான் :
"கார்உண் வார்சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது" என இராம பாணத்தை, வாலி வதைப் படலத்தில் வருணிப்பான் கம்பன்). மகளிர்பால் மட்டற்ற காதல் இருவருக்கும் உண்டு... பா(டிய)ட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும் என்ற கண்ணதாசனைப் போலவே, மது மயக்கம் கம்பனுக்கும் இருந்திருக்க வாயப்பு உண்டு. (பாலகாண்டத்தில் வரும் உண்டாட்டுப் படலத்தைக் காண்க). இப்படிச் சில ஒற்றுமைகள் இருவருக்கும் இடையே...

இவ்வண்ணம் கண்ணதாசன் கம்பன் வண்ணங்களைக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்;த்து உற்றறிந்து உள்வாங்கித் தன் பாடல்களில் பொதிந்தவண்ணங்களைக் கால்வண்ணம் சொல்லி முடித்தேன்! இன்னும் அரை வண்ணம், முக்கால் வண்ணம், முழு வண்ணங்கள் உள்ளன என்று சொல்லி இக்கட்டுரையை நிறைவு செய்யும் முன்...

முந்திய பகுதியில்,
"கானகத்தைத் தேடி இஇன்று போகின்றாள்
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகி".
எந்தப் படத்தில், என்ன இடத்தில் இந்தப் பாடல் வருகிறது, முழுப்பாடல் என்ன... பாடியவர் யார்... போன்ற விவரங்களை அறிந்தோர் கூறினால் பெரிதும் மகிழ்வேன்.

என எழுதி இருந்தேன். இந்த விவரங்;களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி இவற்றை என்னையே தரும்படி ஓர் அன்பர் கேட்டிருந்தார். அடியேன் கேட்டது ஆசிரியர் வகுப்பில் கேட்பது போல அறிவினா இல்லை, ஐயா! இஃது அறியா வினா! இதற்கான விடை எதையும் அடியேன் அறியேன். அதனால்தான் ' அறிந்தோர் கூறினால் பெரிதும் மகிழ்வேன்" என எழுதி இருந்தேன்.

அதே அன்பர் கண்ணதாசனின் இன்னொரு பாடலைக் குறிப்பிடடிருந்தார் :
"'கலாட்டா கல்யாணம்' படத்தில், கண்ணதாசன் பயன்படுத்திய வரிகள்:
"கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதலே அஞ்சும்."
இதனைத்தான் கண்ணதாசன் கம்பனிடமிருந்து கடன்வாங்கி இருந்தார் என்று சொல்லி
"கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்".
என்ற வரியைச் சுட்டிக்காட்டி இருந்தார். இவர் போலவே, பலரும் பல இணைய தளங்களில் இவ்வரியைக் கம்பன் மேல் ஏற்றிக் கூறி இருந்தனர். ஒரு தளத்தில், சிட்ணியிலிருந்து நந்தன் என்பவர்,
"கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்". என்ற அடி கம்பராமாயணத்தில் எந்த இடத்தில் வருகிறது? அப்பாடலின் தொடக்கம் என்ன?... " என்று கேட்டிருந்தார்.
அதற்குப் பதில் தந்த நண்பர் திரு ஜெயபாரதி,
"அந்தப் பாடல் கம்பராமாயணப் பாடல் இல்லை. அது ஒரு தனிப்பாடல். அதனைப் பற்றிய குறிப்பு ஒன்றைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்திருந்தேன். தேடிப் பாhக்கிறேன்" என எழுதி இருந்தார். பிறகு அவர் விடை தந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால் அவர் கூறியது - 'அது ஒரு தனிப் பாடல்' என்பதும் தவறான விடையே!
இக் கேள்விகளுக்கு விடை தேடி வலைப் பதிவுகளில் புகுந்து வலை வீசிய அன்பர் ஒருவர்,
"அய்யகோ!
வௌ;வேறான இருவிடைகள் கிடைத்துள்ளன. அவை:
(1)"இன்று போய் நாளை வா" என்று இராமன் இராவணனை
அனுப்பிவைத்த பின்னர், இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில்
இவ்வாறு கூறப்படுவதாக ஒரு பதிவில் கூறப்பட்டு உள்ளது.
(2) தன்மகன் இந்திரஜித் (மேகநாதன்) வீரமரணம் அடைந்த நிலையில், இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில் இவ்வாறு கூறப்படுவதாக மற்றொரு பதிவில் விளக்கப்பட்டு உள்ளது.
இவையிரண்டில் ஒன்று தவறானது; அல்லது இரண்டுமே தவறாக இருக்கக்கூடுமோ?"
என்ற ஐயப் பாட்டோடு முடித்துக்கொண்டார்.
இவை யாவற்றுக்கும் முடிவு கட்டவே இவ்வளவு நீளமாய் எழுத வேண்டி உள்ளது. முதலில் இப்பாடல் மேலே குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் இல்லை, இ;ல்லை, இல்லவே இல்லை. அவ்வளவு ஏன், இந்தப் பாடல் கம்பன் பாடலே கிடையாது. (திரு ஜெயபாரதி சொன்னது போல). இந்த வரி பலரையும் கவர்ந்து இழுத்த காரணத்தால், இத்தகைய வரியைக் கம்பனைத் தவிர வேறே யாரும் பாடி இருக்க முடியாது என்று முடிவு கட்டி விட்டனர். முழுப் பாடலும் யாருக்கும் தெரியவில்லை. இறுதிக் கட்டமாக இவற்றுக்கு எல்லாம் முடிவு கட்ட இதோ முழுப்பாடல் :
இடம்விட்ட மீனைப் போலும் எரிதணல் மெழுகுபோலும்
படம்எடுத் தாடுகின்ற பாம்பின் வாய்த்தேரை போலும்
தடங்கொண்ட ராமபாணம் செருக்க ளத்துற்ற போது
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்

அருணாசலக் கவிராயர் எழுதிய இராம நாடகக் கீர்த்;தனைகள் என்ற நூலில் இடம் பெறுவது இவ்வரி. (இவர் (1712-1779) சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராச சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்துப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர் (1525-1625) ஆகியோர். அருணாசலக் கவிராயர் இயற்றிய இராம நாடகக் கீர்த்தனைகள் என்னும் ஒப்பரிய இசைப்பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. - நன்றி : விக்கிபீடியா). இராம நாடகக் கீர்த்தனைகள் நூலை மதுரைத் திட்டத்தில் கணியகப் படுத்தி உள்ளனர். இனியேனும் இத்தவற்றைத் தமிழ் அன்பர்கள் தவிர்க்க இத்தகவல் உதவும்.

இது போலவே, கண்ணதாசன் எழுதிய வரி ஒன்றைத் தவறாக (க் கம்ப) இராமாயணத்தோடு முடிச்சு போட்டுவிட்டனர். அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் (மறைந்த) ஜெயலட்சுமி பாடுவதாக வரும் "படாஃபட,; என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்" என்ற பாடல் அது. அதில்,
"கோடு போட்டு நிற்கச் சொன்னான்
சீதை அங்கு நிற்கவில்லையே
சீதை அன்று நின்றிருந்தால்
இராமன் கதை இல்லையே" என்ற வரியின் கருத்து (கம்ப) இராமாயணத்தில் வருவதாக மிகப் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். தவறு, தவறு, மிகப் பெருந்தவறு. நம்பினால் நம்புங்கள், கம்ப இராமாயணத்தில் இப்படி ஒரு காட்சி இல்லவே இல்லை!!! காட்சியே இல்லை என்றால், கம்பன் எப்படி இவ்வரிகளை எழுதி இருக்க முடியும்! இத்தகவல் கண்ணதாசனுக்குத் தெரியுமா என்பது பற்றி எந்தத் தகவலும் என்னிடம் இல்லை!!! கம்பனில் இல்லை என்றால் என்ன வால்மீகி எழுதி இருப்பான் என்பவர்களுக்கு ஒரு சொல். இக் கருத்தை நம்பிப் பந்தயம் ஏதும் வைத்து விடாதீர்கள். வைத்தால் தோற்றுப் போவீர்கள். ஆம், வால்மீகியும் இந்தக் காட்சியை வரையவில்லை. துளசி இராமாயணத்திலும் இது கிடையாது. ஆனாலும் 'இலட்சுமணன் கோடு" என்ற சொற்றொடர் புழங்கி வருகிறதே. (அண்மையில் வந்த டாக்டர் இராமதாஸ் அறிக்கையைக் காண்க!). விக்கிபீடியாவும்
"டுயமளாஅயn சுநமாயஇ in அழனநசn ஐனெயைn pயசடயnஉநஇ சநகநசள வழ ய ளவசiஉவ உழnஎநவெழைn ழச ய சரடநஇ நெஎநச வழ டிந டிசழமநn. ஐவ ழகவநn சநகநசள வழ வாந நவாiஉயட டiஅவைள ழக யn யஉவழைnஇ வசயஎநசளiபெ றாiஉh அயல டநயன வழ ரனெநளசையடிடந உழளெநஙரநnஉநள."என்கிறது.

ஆக, புகழ்பெற்ற எந்த இராமாயணத்திலும் இல்லாத இந்தக் காட்சியும் இச்சொல்லாட்சியும் எப்படி வந்திருக்கக்கூடும்? இணைய தளத்தில்; பல நாள்கள் உலாவிய பின் ஓரிடத்தில் ஐயத்துடன் கூடிய விடை கிடைத்தது :
"லட்சுமண் ரேகா என்னும் லட்சுமணன் கோடு, லட்சுமணனால் பர்ணசாலையைச் சுற்றிப் போடப்பட்டு, பின்னர் சீதை அதைத் தாண்டியது போன்ற விபரங்கள் வால்மீகியிலோ, கம்பனிலோ, துளசிதாசரிலோ இல்லை. வழக்கில் இருக்கும் பல ராமாயணங்களில் ஒன்றான "ஆனந்த ராமாயண"த்தில் இது பற்றிக் குறிப்பிடுவதாய்க் "காமகோடி" என்னும் புத்தகத்தில் படித்தேன்." எழுதியவர் திருமதி கீதா சாம்பசிவம். காண்க :
http://groups.google.com/group/nambikkai/browse_thread/thread/272063e0ed847b7c?fwc=1

இந்தியாவில் உலவி வரும் இராமாயணங்கள், இராமாயணக் கதைகள் பலப்பல. அவற்றில் எதில் இந்தக் கதை உருவானதோ! யாரறிவார்? அறிந்தவர் கூறினால் அனைவரும் அறிந்துகொள்ளலாமே!

இதுவரை, கண்ணதாசன் என்ற தற்காலக் கவிஞன் கம்பனைப் படித்து ரசித்துத் தன் திரைப்பாடல்களில் கையாண்டவற்றையும் கம்பன் எழுதியதாக அவன் நம்பிப் பயன்படுத்திய வரிகளையும் ஒப்பிட்டு ரசித்தோம். கம்பன் என்ற கவிச்சக்கரவர்த்தியையும் கண்ணதாசன் என்னும் கவியரசுவையும் பெற்ற நாம் பெருமிதப்படுவதில் தவறே இல்லை!
நன்றி வணக்கம்!- பெஞ்சமின் லெபோ

Sunday 24 August 2008

வீதியோரத்தில் வ.உ.சி. கொள்ளுப்பேத்தி, பேரன்!


Y£dL Å¥pXôUp UÕûW êußUôY¥ NôûXúVôWj§p Re¡ YôÝm, ÑRk§Wl úTôWôhPj §Vô¡ Y.E. £RmTWm ©sû[«u ùLôsÞl úTj§ R]XhѪ, úTWu NeLWu.

UÕûW, BL. 23: Be¡úXV AWûNúV Bh¥lTûPjR ÑRk§Wl úTôWôhP §Vô¡ LlTúXôh¥V RªZo Y.E.£RmTWm ©sû[«u ùLôsÞl úTj§, úTWu B¡úVôo Y£dL CPªu± NôûXúVôWj§p Yôr¡u\]o.

"úUúXôoLs ùYg£û\«p ÅrkÕ ¡PlTÕÜm

èúXôoLs ùNdL¥«p úSôYÕÜe Lôi¡ûXúVô?'

-G] TôW§Vôo R]Õ "ÑRk§Wl T«o' Gu\ RûXl©Xô] L®ûR«p Y.E.£RmTW]ô¬u §VôLjûR ¨û]kÕ Auú\ Es[m EÚ¡l Tô¥«ÚkRôo.

AlT¥lThP §VôLfÑPo £RmTW]ô¬u êjR ULu BßØLm. CYWÕ ULs LUXômTôs. CYWÕ LQYo AÚl×dúLôhûPûVf úNokR Oô]Y¥úYÛ.

Ck§V Ï¥VWÑjRûXYWôL CÚkR Wôú_k§W ©WNôj, Oô]Y¥úYÛÜdÏ ùRô¯Xô[o SXjÕû\«p T¦ Yônl×dÏ HtTôÓ ùNnRôo.

Oô]Y¥úYÛ-LUXômTô°u êjR ULs R]ùXhѪ (52). ULuLs NeLWu (46), BßØLm (40), úNôUÑkRWm (40).

Rôn C\kR ¨ûX«p RkûRúV CYoLû[ Y[ojÕs[ôo. AÚl×dúLôhûP«p ÏÓmTd úLô«ÛdÏf ùNôkRUô] Åh¥p Y£jÕs[]o. AlúTôÕ, TeLô°LÞdÏs HtThP ùNôjÕl ©Wfû] LôWQUôL LpíW¦ Gu\ FÚdÏ YôPûL Åh¥p Ï¥ùTVokR]o.

Ck¨ûX«p R]ùXhѪ, NeLWu B¡úVôÚdÏ §ÚUQUô¡VÕ. NeLWu UÕûW êußUôY¥ NmTdÏ[m Tϧ«p Ï¥úV± ùT«i¥e ùRô¯p ùNnRôo. AYWÕ NúLôRWWô] BßØLØm EPu Y£jRôo.

LôRp §ÚUQm ùNnR R]XhѪ LQYûWl ©¬kRôo. 2003-p Oô]Y¥úYÛ C\kÕ®hPôo. BßØLm ùT«i¥e úYûX ùNnRúTôÕ HtThP ®Tj§p U]SXm Tô§dLlThPôo. CR]ôp §ÚUQUôL®pûX.

LQYÚm ©¬kÕ, BR¬jR RkûRÙm C\kÕ®hPRôp, UÕûW YkR R]ùXhѪ êuß UôY¥l Tϧ«p YôPûL Åh¥p Re¡ ØßdÏ ®VôTôWm ùNnRôo. B]ôp ùNôjÕl ©Wfû] YZdÏ ùRôPoTôL AÚl×dúLôhûPdÏ A¥dL¥ ùNu\Rôp ®VôTôWjûRf N¬VôLd LY²dL Ø¥V®pûX.

UôRôUôRm YôPûL RWôRRôp ÅhûPd Lô# ùNnÕ®hP]o. R]ùXhѪ«u NúLôRWo NeLWàdÏm ùT«i¥e ùRô¯#p úTô§V YÚYôn CpûX.

AYWôÛm ÅhÓ YôPûLûVd ùLôÓdL Ø¥VôRRôp Uû]®ÙPu RLWôß HtThPÕ. AYWÕ Uû]® ÏZkûRÙPu ©¬kÕ ùNuß®hPôo.

ClúTôÕ R]ùXhѪÙm AYWÕ NúLôRWoLÞm êuß UôY¥ Tv ¨ûXVm AÚúL Es[ "LiQu LÚlTu BgNúSVo úLô«p' Y[ôLj§p Re¡Ùs[]o.

NeLWàm, R]ùXhѪÙm ¡ûPdÏm á# úYûXdÏf ùNuß YÚ¡u\]o. AYWÕ NúLôRWo BßØLØm AqYlúTôÕ ùT«i¥e úYûXdÏf ùNuß YÚ¡\ôo. CYoLû[ VôùWuß AlTϧ«p Esú[ôÚdÏj ùR¬V®pûX.

ùYhPùY°«p úLô«ÛdÏ AÚúL ®tTû]dÏ Ï®dLlThP UQp, ùNeLp CûPúVRôu R]ùXhѪÙm, AYWÕ NúLôRWoLÞm §]Øm CW®p E\eÏ¡u\]o Gu¡\ôoLs AlTϧ UdLs.

UûZdLôXj§p AeÏs[ LûPL°u ØuTϧ«p ReÏYôoL[ôm. UûZ ùTnRôp Auß CWÜ AYoLÞdÏ £YWôj§¬Rôu.

CkRf ãZXôp RtúTôÕ R]ùXhѪÙm, AYWÕ NúLôRWoLÞm U] AÝjRjÕdÏ Es[ô¡«ÚdLXôm G] BReLlTÓ¡\ôo AlTϧûVf úNokR Cû[Oo JÚYo.

NôûXúVôW YôrdûL; Lô©, YûPúV LôûX EQÜ! ùRÚúYôWj§p RsÞYi¥«p ®tLlTÓm úLlûT, LmTeáúZ TLÛQÜ -G] LôXjûRd L¯lTRôL ®Wd§ÙPu ®Y¬d¡\ôo R]ùXhѪ.

Y.E.£. Yô¬ÑLs G] ER® úLhÓ A§Lô¬LÞdÏ Uà Aàl©Ùm GÕÜm SPdL®pûX GuTRôp ùYßjÕl úTôn®hPRôL R]ùXhѪ ®Wd§ÙPu £¬d¡\ôo.

""HRôYÕ Ko CPj§p Ïû\kR F§Vj§XôYÕ Guû] úYûXdÏ úNojÕ®P Ø¥ÙUô?'' G] SmûUl TôojÕ AYo ùLg£VûRd LiÓ Li½oRôu YÚ¡\Õ.

ÑRk§Wl úTôWôhPj §Vô¡LÞdÏ HúRúRô NÛûLLs ùNnRRôLd á± YÚm RªZL AWÑdÏm, Y.E.£. ùTV¬p Lh£Ùm, Uu\Øm SPjÕúYôÚdÏm CkR R]ùXhѪ úTôuú\ôWÕ LxPm ùR¬VôUp úTô]Õ GlT¥úVô?

Y.E.£. £û\«p CÝjR ùNdûLÙm, AYo TVuTÓj§V ùTôÚû[ÙmáP Tj§WlTÓj§ TôÕLôdÏm RªZL AWÑ AkRj §VôLfÑP¬u Yô¬ÑLÞdÏ, YôZ JÚ Y¯Ùm, Y£dL TôÕLôlTô] CPØm A°lTÕ AY£Vm GuTúR Aû]YWÕ G§oTôol×.

""TgNØm úSôÙm ¨u A¥VôodúLô,

Tô¬²p úUuûULs úY±² VôodúLô''

Gu\ TôW§Vô¬u TôPp Y¬LsRôu AkR CPj§#ÚkÕ ×\lThPúTôÕ Lô§p ÃeLôWªhPÕ.

நன்றி திணமணி

Monday 12 May 2008

இலக்கியவிழா1

முத்தமிழ்ச் சங்கம் (பிரான்சு) நடத்திய
இலக்கிய விழாவில்தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு நாள்

பரி; ((PParis என்ற சொல்லின் சரியான பிரஞ்சு ஒலிப்பு) நகரில் விழாக்கள் பொதுவாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தாம் நடைபெறும். ஆனால், மே மாதம் 8 ஆம் நாள் (திருவள்ளுவர் ஆண்டு 2039 மேழம் சித்திரை 28) வியாழன் அன்று இலக்கிய விழாவை நடத்தினார் தமிழன்பர் திருமிகு கோவிந்தசாமி செயராமன் அவர்கள். கரணியம், அன்று பிரான்சில் விடுமுறை நாள.; 1945 -ஆம் ஆண்டு 8 -ஆம் நாள் இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற நாள். அதன் நினைவாக, அந்நாளைப் பொது விடுமுறை நாளாகப் பிரஞ்சு அரசு அறிவித்துள்ளது. எனவே தான், அன்றைய நாளில் இலக்கிய விழா நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் தாத்தா நினைவு நாள் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
விழா நடைபெற்ற இடம் : லா கூர்நெவ் (La Courneuve) என்ற பரிநகரின் புறநகரில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம். அழகாக அலங்கரிக்கப்பட்ட விழா மணடபம். அதில் விழாவை ரசிக்க மக்கள் திரளாக வந்திருந்தனர். விழாவைத் தொகுத்து வழங்கி அமர்வுகளில் தலைமை தாங்கி நடத்தித் தர வந்திருந்தாh பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள். மணி மதியம் 3.30 அளவில், "தணியாத காதல் தமிழ் மீது கொண்டு அணிஅணியாக வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள், இனிய நல் வாழ்த்துகள்... என அவர் கணீர்க் குரல் அவையத்தில் உரத்து ஒலித்தது. தட்சிணாமூர்த்தி இணையர் மங்கல விளக்குகள் ஏற்றினர். 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' என்று தொடங்கும் பாரதிதாசனின் பாடல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாகப் பாடப்பட்டது. (இப்பாடலே புதுச்சேரி மாநிலத்தின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாகும்). உடன், முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான அடியார்க்கன்பன் திருமிகு கோவிந்தசாமி செயராமன் அவர்கள் வந்திருந்தோரை முறைப்படி விளித்து வரவேற்றார். முதல் அமர்வு தொடங்கியது.
முதலில், கவிஞர் கி. பாரதிதாசன் தம் கவிதையைப் படித்தார். தம்மையும் தமிழையும் தமிழ்ப் பகைவரிடமிருந்து தமிழ்த் தாத்தாதான் காத்திடவேண்டும் என்பது அவர் கவிதைகளின் மையக் கருத்து.
அடுத்துத் தமிழியக்கன் தேவகுமரன் தம் வாழ்த்துரையை வழங்கினார். ரெயூனியன் என்ற பிரஞ்சுத் தீவில் பிறந்து வளர்ந்து வந்தவர் அவர். அங்கே தமிழர்கள் தாய் மொழியாம் தமிழைத் தம் இளைய தலைமுறைக்குத் தராமல்; போனதால், இளைய தலைமுறை தமிழறியாமல் போன அவலத்தை உருக்கமாக எடுத்துரைத்தார். பிரான்சில் வாழும் தமிழர்களாவது விழித்தெழுந்து விழிப்புடன் தமிழைப் பேணி இளைய தலைமுறைக்கு அதனை ஊட்ட வேண்டும் தமிழ்த் தாத்தாவைப் போல என்பது அவர் உரை முழுக்க ஊடுருவி இருந்தது.
தள்ளாத வயதிலும் உள்ளம் கொள்ளாத அளவு (தமிழ்க்) காதல் கொண்டு உலாவும் முதுபெருங்கவிஞர் கண. கபிலனார் (முதுமை கரணியமாகத்) தள்ளாடியபடியே வந்து சேர்ந்தார். படமாடும் தமிழ்த் தாத்தா அங்கே என தமிழ்த் தாத்தாவின் படத்தைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர், நடமாடும் தமிழ்த் தாத்தா இங்கே வருக வருக வருக என வரவேற்க அவையில் சிரிப்பொலியும் கரவொலியும் கலகலத்தன. அவருக்கென நடுநாயகமாக நாற்காலி காத்திருந்தது. வந்த களைப்பின் காரணமாகத் தம் கவிதையைப் பிந்தித் தருவதாகக் கூறி அவர் அமர்ந்து விட்டார்.
தொடர்ந்து பேச அழைக்கப்பட்டவர் யோகானந்த அடிகள். தமிழ்த் தாத்தாவின் வாழ்க்கையில் இருந்து சில பகுதிகளைத் தொட்டுப் பேசினார். மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்த அவரின் கருத்து வெள்ளம் மக்களைத் தொட்டது. தமிழ்க் காதலுக்கு வித்திட்டது.
புலவர் வ. கலிய பெருமாள் தம் உரையைக் கட்டுரையாகவே தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். பேசுவது காற்றோடு போய் விடும், எழுத்தில் இருப்பதுதான் நிலைக்கும் என்பது அவர் கருத்து. தமிழ்த் தாத்தாவைப் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டிய புலவர், சிலப்பதிகாரத்தைப் பதிப்பிப்பதில் தாத்தா பட்ட துன்பங்களையும் இறுதியில் அவர் அவற்றைச் சமாளித்த விதங்களையும் தெளிவாக விளக்கினார்.
முதல் அமர்வு முடிந்த பின், கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் 15 ஆம் ஆண்டுத் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்து அடியார்க்கன்பன் திருமிகு கோவிந்தசாமி செயராமன் அவர்கள் பொன்னாடை போர்த்தி ச் சட்டம் கட்டிய வாழ்த்தைப் பரிசளித்தார். எல்லாத் தமிழ் விழாக்களிலும் தம் கைவண்ணததைக் காட்டித் தொண்டு செய்து வரும் ஓவியர் திரு அண்ணாதுரை அவர்களின் 60 -ஆம் ஆண்டு நிறைவைப் பாராட்டும் வகையில் அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பரிசளித்தார். திருமதி அண்ணாதுரை அவர்களுக்குத் திருமதி பூங்குழலி பெருமாள் பொன்னாடை போர்த்தினார்.
உடனடியாக, இரண்டாம் அமர்வு தொடங்கியது.
லியோன் என்ற தொலை தூர நகரிலிருந்து வந்திருந்த கவிஞர் மாமல்லன் தமிழ்த் தாத்தாவின் தொண்டுகளைப் பாராட்டிக் கவிதை படித்தார். தொடர்ந்து கவிதை படிக்க வந்த கவிஞர் திருமதி பூங்குழலி பெருமாள் நல்ல ஓட்டமும் பொருள் ஊட்டமும் கொண்ட தம் கவிதைகளை இனிய குரலில் வாசித்து அவைக்குச் சுவை கூட்டினார்.
புலவர் பொன்னரசு தமிழ்த் தாத்தாவின் தொண்டுகளைப் பற்றிக் கூறி அவர் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம பிள்ளை அவர்களுக்கும் தமிழ்த் தாத்தாவுக்கும் இருந்த குரு, சீடர் உறவினைச் சிறப்பாகப் புலப்படுத்தினார். இதுவரை களைப்பாறிய முதுபெருங்கவிஞர், கவிசதச் சித்தர் திரு கண. கபிலனார் தம் கவிதையை அருவியாகப் பொழிந்தார். இலக்கணம் இலக்கியம் இரண்டுக்கும் உள்ள தொடர்பினைக் கவிதையில் புலப்படுத்திய அவர், கவிதை எழுதும் போது இலக்கணத்தையோ கவிதையையோ நினைக்கக் கூடாது என்ற தத்துவத்தை உரைத்தபோது அவை முழுக்கக் கையொலிதான். தொடர்ந்து,
ஆசிரியர் பி. சின்னப்பா தம் இடிக் குரலில் தமிழ்த் தாத்தா பற்றிய தகவல்களை அடுக்கினார். தம் தலைப்பையும் மறந்து விடாமல் தாத்தா இன்று வந்தால் என்ன என்ன அவலக் காட்சிகளைக் காண்பார் என்பதையும் விளக்கினார். இறுதியாகத் தம்; சிறப்புரையை வழங்கிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, தாத்தாவின் எள்ளு கொள்ளுப் பேரப் பிள்ளைகள் அவரை இன்று எப்படிப் பார்க்கிறார்கள் எனச் சுருக்கமாக ஆனால் சுவையாக விளக்கினார். இவ்விழா பற்றிச் செய்தி வெளியிட்டுள்ள adhikaalai.com, thatstamil.com பற்றிச சொல்லி நன்றி கூறித் தம் உரையை முடித்தார். (அவர் கட்டுரை தனியாக வெளியாகும்).
இறுதியில் பலகுரல் மன்னன் திரு மோரோ நடராசன் வாரியார், நம்பியார், சனகராசு, பாலையா, ரசினி... போன்றவர்களின் குரல்களில் பேசிக் காட்டியது சுவையாக இருந்தது. இந்த நிகழச்சிகளில் பேச்சாளர்களைப் பேராசிரியர் அறிமுகப் படுத்திய பாங்கும் அவரவர் உரை முடிந்த பின் அவர்கள் பேச்சு வேகத்தில், சொல்ல மறந்த, துறந்த தகவல்களைக் குறிப்பிட்டு நிறைவு செய்ததும், நகையொடும் சுவையோடும் தொகுத்து வழங்கியதும் அருமை. இவ்விழாவில் கலந்தகொண்ட அனைவருக்கும் இனிய சிற்றுண்டி வழங்கியவர் திருமிகு அகோர மூர்த்தி குருக்கள். வந்திருந்தோர்க்கு நீர், குளிர் பானங்கள் வழங்கியவர் திருமிகு சுரேஷ். தமிழ்த் தாத்தாவைச் சிறப்பித்த இவ்விழாவுக்குப் பெரிதும் உதவியவர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. இவர்கள் மூவருக்கும் அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமனும் முத்;தமிழ்ச் சங்கமும் தம் உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறார்கள்.
இறுதியாக அடியார்க்கன்பன் திருமிகு கோவிந்தசாமி செயராமன் அவர்கள் அனைவர்க்கும் நன்றி கூறி அடுத்த ஆண்டுச் சிறப்பாக நடைபெற இருக்கும் இலக்கிய விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தலோடு விழா நிறைவு பெற்றது. பின்னர் அனைவரும் சிற்றுண்டி அருந்தி இல்லம் திரும்பினர்.

Friday 2 May 2008

DICTIONNAIRE FRANCAIS MODERNE


புத்தம் புதிய பிரெஞ்சு மொழிப் பேரகராதி H.நாகராஐன் எழுதி வழங்கும் பிரெஞ்சு- தமிழ் அகராதி

தொடர்பு முகவரி
H.Nagarajan M.A
60,Allée des kiosques

94420 Le Plessis Trévise
FRANCE
Tél 0145763848/0660819665
E.mail:
nagaradja50@yahoo.fr