-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Friday 18 May 2007

ஓளவை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது ப10க்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

ஓளவை பிராட்டியார் அவர்கள் விநாயகனைத் துதித்துப்பாடிய இந்த பாடலில் மனித சமுதாயம் நோயின்றி வாழவும் நீண்ட ஆயளைப் பெறவும் பல மருத்துவ கருத்துக்களையும் கூறியுள்ளார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

வாக்குண்டாம் :- உடல்வாகு உண்டாகும்
நல்ல மனமுண்டாம் :- நல்ல தெளிவான பண்புகளை உடைய மனம் உண்டாகும்
மாமலராள் :- பெருமைக்குரிய தாமரைப்ப10, து}துவேளைப்ப10, ஆவாரம்ப10
நோக்குண்டாம் :- கண்பார்வை துல்லியமாக அமையும்
மேனி நுடங்காது :- உடல் தளர்வடையாது
ப10க்கொண்டு :- மேலே கூறிய மலர்களைக் கொண்டு
துப்பார் திருமேனி :- எவரும் ஏரெடுத்துப் பார்க்காத குப்பையில் முளைத்திருக்கும்
குப்பைமேனி
தும்பி :- தும்பைச் செடி
கையான் :- கையான் தகரை எனும் கரிசாலங்கண்ணி
பாதம் :- சிறு செறுப்படைச் செடி
தப்பாமல் :- தவறாமல்
சார்வார் தமக்கு :- இந்த மூலிகைகளின் குறிப்பறிந்து குணம், அளவு அறிந்து கையாள்வோருக்கு நல்ல மனமும் ஆரோக்கியமும் நரை, திரை, மூப்பு இல்லாத வாழ்வும் உண்டாகும்

ஆதாரம் : ஞானதீபம்

Thursday 17 May 2007

வள்ளலார் இன்று வந்தால்

தமிழே அமுதே எனையாளும் உயிரே
அழகே அருளே பொருளே எனுது}னே
பொன்னே மணியே முத்தே என்வாழ்வே
அன்னையே உன்னையே என்றும் தொழுவேன்.

வள்ளலார் இன்று வந்தால்

பாட்டரங்கில் பாங்காய் எனை அழைத்தீரே
வாழ்த்தினேன் பாவலர் பலரும்
அருளுடன் அருட்பா படைத்தேன்
ஒருமையுடன் ஒன்றி இருக்கச் சொன்னேன்
உயிர்களிடத்தில் அன்பு செலுத்தச்சொன்னேன்
உத்தமர் உறவை வேண்டும் என்றேன்
உள்ளொன்று வைத்து பேசுவனிடம்
உறவு வேண்டாம் என்றேன்
கருணை உள்ளம் வேண்டும் என்றேன்.
சோதி வழிபாட்டை வலியுறுத்தினேன்
நோயற்ற வாழ்வு வாழச் சொன்னேன்
சாதிமத பேதத்தைப் போக்கினேன்
மனிதா மனம் மாறிபோனாய், மதத்தில்
மதங்கொண்டு மிருகமாய் மாறினாய்
நல்லறிவை விற்றுப் புல்லுருவி ஆனாய்
அன்பை விட்டாய் துன்பம் கொண்டாய்
உத்தமனை வதைத்தாய் நரியாக போனாய்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினாய்
கருணையை விட்டாய் கழுகாய் பறந்தாய்
பண்பைப் விட்டு பணத்தைச் சேர்த்தாய்
அன்புடன் உறவாடிப் பிறர் மனத்தைக்கொன்றாய்
சங்கம் படைத்தாய் பகைமையை வளர்த்தாய்
சங்கத்துக்குள் சங்கம் அச்சங்கத்துக்குள் சங்கம்
கானகம் சென்றாலும் அகந்தை அழியாய்
மானிடவாழ்வு உய்ய நல்வழி சொன்னேன்
பாதை மாறி நரகம் சென்றாய்
உன்னைத் திருந்த நீயே முயற்சிசெய்.

இதழ்கள் 1-2006

under construction

இலக்கிய விழாவில் மகாகவி பாரதியாரின் 125 வது ஆண்டு விழா



முத்தமிழ்ச் சங்கம்-தமிழ்வாணி பிரான்சு சார்பாக செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமையன்று மகாகவி பாரதியாரின் 125 வது ஆண்டு விழா பாரீசு மாநகரில் Maison de l'Inde 7R ,Boulevard Jourdan, Paris75014 (salle de Indra Gandhi)என்ற இடத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. தாயகத்தில் இருந்து சிறப்பு விருந்தினராக புதுவை புரட்சி எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும், இசைக் கலைஞர் காரை இளையபெருமாளும் வருகை தர உள்ளார்கள்.

காலை 9.30 மணியிலிருந்து 19.30 மணிமுதல் நாட்டியம்,பட்டிமன்றம், சிறப்புரை, கவிதை மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.மேலதிக விவரங்களுக்கு:
00 33. (0)6.03.58.23.38. / 00.33.1.39.86.86.53


Mouttamije Association
Tamizhvani Magazine


tamizhvani@free.fr