-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Tuesday, 30 August 2011

இலக்கியத் தேடலின் பத்தாம் கூட்டம்


நம் இலக்கியத் தேடலின் பத்தாம் கூட்டம்
செப்தம்பர்த் திங்கள் ஞாயிற்றுக் கிழமை 04 ஆம் நாள்
(04 .09 .2011 )மதியம் 03 .00 மணி முதல் 06.00 வரை நடை பெறுகிறது
தலைப்பு: உலகமொழிகளின் தாய் தமிழே!
சிறப்ரை: சொல்-மொழி-வரலாற்று ஆய்வாளர் தக்கார் ம.சோ.விக்டர், அரியலூர், தமிழ்நாடு
இடம்
ARISTO RESTAURANT
18, RUE DUMARQUAY
75010 PARIS
பெஞ்சமின் : 06 27 13 71 54
செயராமன்: 06 03 58 23 38

புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்களை இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருமாறு பிரான்சு முத்தமிழ்ச்சங்கத் தலைவர் கோவிந்தசாமி செயராமன்




முத்தமிழ்ச்சங்கமும், இலக்கியத் தேடலும்; ஒன்றிணைந்து சூன் மாதம் 2012 ஆம் ஆண்டில் தமிழ் இலக்கிய உலக மாநாடு நடைபெற திட்டமிட்டுவுள்ளன. இவ்விழாவின் தலைவராக பேராசிரியர் பெஞ்சமின் லெபோவும் அமைப்பாளராக திரு கோவிந்தசாமி செயராமனும் செயலாளராக தமிழியக்கன் தேவகுமரனும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதன் தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்களை இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருமாறு பிரான்சு முத்தமிழ்ச்சங்கத் தலைவர் கோவிந்தசாமி செயராமன் முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்து உள்ளார். அதோடு புதுச்சேரி சபாநாயகரையும் நேரில் சந்தித்து தமிழ் இலக்கிய உலக மாநாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின் போது தமிழ் இலக்கிய உலகமாநாட்டின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு பழனிச்சாமியும் உடனிருந்தார்.

சென்னiயில் கலை இலக்கிய ஒன்று கூடல்








கலை இலக்கிய ஒன்று கூடல்,யாளி பவுண்டேஷன் சென்னை சார்பா௧ கனடாவின் 'இயல்' விருது பெற்ற ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (ஆஸ்திரேலியா), 'ஆடுகளம்' திரைப்பட நடிப்பிற்காக இந்தியாவின் தேசிய விருது பெற்ற ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ( நோர்வே) பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெற்ற இசைத்தமிழ் வித்தகர் இராச.வெங்கடேசனார் ( புதுச்சேரி) ஆகியோரைப் பராட்டும் பொருட்டு சிறு ஒன்று கூடல்.நடந்தது ஜூலை 17, 2011 மாலை 5.00க்கு இடம்: ஒய்.டபிள்யூ.சி.ஏ- இளம் கிருத்துவ மகளிர் இல்ல வளாகம் இண்டர்நேஷ்னல் கஸ்ட் ஹவுஸ்
எழுமூர் தினத்தந்தி அலுவலகம் அருகில், பூந்தமல்லி ரோடு, சென்னையில் நடந்தது
பங்கேற்றவர்கள், திருமிகு தசரதன் (பாரீஸ் தமிழ்ச் சங்கம், பிரான்சு)
திருமிகு பிரபஞ்சன்,திருமிகு கோவிந்தசாமி ஜெயராமன் ( முத்தமிழ்ச் சங்கம் பிரான்சு) , திருமிகு மாலன் ,திருமிகு ஸ்தனிகாசமரசம்( பிரான்சு)
திருமிகு ஞானராஜசேகரன் , திருமிகு தளிஞ்ஞான் முருகையன் (பிரான்சு) ,திருமிகு ரெ.பாலகிருஷ்ணன்,திருமிகு நித்தியானந்தன் (லண்டன்) ,திருமதி தமிழச்சி ,திருமதி மதன கல்யாணி,திருமிகுஇராம.மணிகண்டன், திருமிகு தளவாய்சுந்தரம், திருமிகு நடராஜன்,திருமதி சந்தியாநடராஜன்,திருமதி பூங்குழலி
திருமிகு ஏ.வி.இளங்கோ,திருமிகு சுந்தரபுத்தன்.
இந்நிககழ்ச்சிைய யாளி பவுண்டேஷன் சென்னை சார்பா௧ ௧ைலவிமர்சிி௧ர் இந்திரன் ஏற்பாடு செய்தி௫ந்தார்


வரவேற்பு

பிரான்சு முத்தமிழ்ச்சங்கத் தலைவர் சோவிந்தசாமி செயராமனுக்கு சென்னையில் திருவாளர் சதாசிவம் ;டiளெ உடரடி சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்ச்சான்றோர்களும் சில பொறியாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கடல்அகழ்வு ஆராய்ச்சியின் குறும்படம் ஒன்றை வெளியிட்டனர்.
பாரீசு பரதேசி

புதுவையில் ஒன்றுகூடல்




14.07.2011 பிரான்சு முத்தமிழ்ச்சங்கம் சார்பாக, பிரான்சு அரசின் செவாலியே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கலைமாமணி இராச வேங்கடேசனாரை பாராட்டும் பொருட்டு ஒன்றுகூடல் அஜீஸ் நகரில் உள்ள செல்வமுருகா திருமண நிலையத்தில் நடந்தது. முத்தமிழ்ச்சங்கத் தலைவர் கோவிந்தசாமி செயராமன் அனைவரையும் வரவேற்றார். கலைவிமர்சகர் இந்திரனும், புதுவை புரட்சிஎழுத்தாளர் பிரபஞ்சனும் முன்னிலை வகித்தனர். நீதியரசர் தாவீதுஅன்னுசாமி தலைமைதாங்கினார். நிகழ்ச்சியில் சப்தகிரி உரிமையாளர் சிவக்கொழுந்து, திரு பாவலர்மணி சித்தன், திரு கண.கபிலனார் (பிரான்சு), திரு சுகுமாறன் முருகையன் (பிரான்சு), திரு தசரதன்(பிரான்சு), திரு தளிஞ்சான் முருகையா(பிரான்சு), மருத்துவர் சனார்த்தனம்(சென்னை), திருமதி மதனகல்யானி, சொல்லாய்வுசசெல்வர் மா.சோ.விக்டர் (அரியலூர்- தமிழ்நாடு), வில்லிசைவேந்தர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். விருது பெறும் திரு வேங்கடேசனாருக்கு நினைவு பரிசு முத்தமிழ்ச்சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. மதிய உணவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாரீசு பரதேசி

Sunday, 3 July 2011

ஒன்றுகூடல்


வணக்கம்
கலைமாமணி இராச. வேங்கடசனார் அவர்களுக்கு
பிரான்சு அரசு செவாலியே விருது வழங்குவதை முன்னிட்டு அவரை சிறப்பிக்க இருப்பதால்; தமிழ் அன்பர்கள் அனைவரும் வருக!
அன்புடன்
கோவி செயராமன்

Saturday, 2 July 2011

பாரிசில் இலக்கிய விழா – இலக்கியத் தேடல் விழா

பாரீசிலும் சரி பாரில் வேறு எங்கும் சரி, விழாவைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை. இதற்கு விலக்காக நடை பெற்ற விழா, இலக்கிய விழா-இலக்கியத் தேடல் விழா! சூன் திங்கள் 4 -ஆம் நாள் பாரீஸ் 14 ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்ற இடத்தில் இவ்விழா நடந்தேறியது. இதில் மகா கவி தாகூரின் 150 -ஆவது ஆண்டு விழாவும் இடம் பெற்றது.
சரியாக 03 மணிக்கு, திரு. இராமு செயபால் இரட்டையர் குத்துவிளக்குக்கு ஓளியூட்டினர். ஆசிரியர் பி சின்னப்பா, திருமதி பவானி இராமு இறைவேட்டலையும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும் இனிமையாகப் பாடினர். செல்விகள் கோதண்டம் சாரா, கோதண்டம் ஒலியா நடேசகவுதம் இசைக்கு நாட்டியம் சிறப்பாக ஆடி, தம் குரு திருமதி மஞ்சுளா சிறீதரன் பெயரை நிலை நாட்டினர். முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன் வரவேற்புரை வழங்கினார். முன்னிலை வகித்த திருவாளர்கள் சுகுமாரன் முருகையன், தமிழியக்கன் தேவகுமாரன், பேராசிரியர் பா. தசரதன் தம் முன்னுரைகளில் தாகூரைப் பற்றிப் பல செய்திகளை உரைத்தனர். புதுவைத் தமிழுலகம், பேராசிரியர் செவாலியே சச்சிதானந்தம் அவர்களை நன்கு அறியும். விழாவுக்கு வந்திருந்த அவரை அவைக்கு அறிமுகம் செய்து பேசினார் அவர் நண்பர் திரு நாரா ராசவேலு. அவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் செவாலியே சச்சிதானந்தம் தாகூரை, பிரஞ்சுக் கவிஞரும் நாவல் ஆசிரியருமான விதோர் யுகோவுக்கு ஒப்பிட்டு உரையாற்றினார். தலைமை தாங்கிய திருமிகு அலன் ஆனந்தன் மகா கவி தாகூரின் மாண்புகளை விளக்கினார். பட்டிணப் பாலை என்ற சங்க இலக்கியத்தைப் பிரஞ்சில் மொழி பெயர்த்த திரு கோபால கிருட்டிணன் தம் நூலை அறிமுகப் படுத்திப் பேசினார். பொன்னாடைக்குப் பதிலாகப் புத்தகங்களைப் பரிசாக அளிக்கும் பழக்கம் இப்போது முதன்மை பெற்று வருகிறது. அதனை ஒட்டி, இவர்கள் அனைவருக்கும் முத்தமிழ்ச் சங்கம், இலக்கியத்தேடல் சார்பாக திரு முனுசாமி சந்திரன் நூல்களை வழங்கினார்.
அடுத்து, கருத்துரை அரங்கம். தலைமை: பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. முதல் உரை அளித்தவர் திருமதி அமல்ராஜ் எலிசபெத். தலைப்பு: (தாகூர்)’தேசிய கீதம் தந்த விடுதலை வீரர்’. இந்திய நாட்டின் தேசிய கீதமாக விளங்குவது தாகூர் இயற்றிய பாடல் என்பதைக் கூறி அப்பாடலின் பொருளையும் தமிழில் விளக்கினார். (தாகூர்) ‘சாந்திநிகேதனம் கண்ட கல்வியாளர்‘ என்ற தலைப்பில் எடுப்பான குரலில் மிடுக்காக உரை ஆற்றினார் ஆசிரியர் ப. சின்னப்பா. கவிதாயினி லினோதினி சண்முகநாதன், சிலப்பதிகாரத்தில் காணும் கலை நயங்களைத் தொகுத்து வழங்கினார். தம் தலைமை உரையில், (தாகூர்) ‘கீதாஞ்சலி படைத்த மகா கவி” என்ற தலைப்பில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ மகா கவி பற்றியும் அவர் படைத்த கீதாஞ்சலி பற்றியும் பிறர் அறியா, அரிய செய்திகளை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து கவியரங்கம். (தாகூர்) ‘ஆன்மிகம் இசைத்த குயில்‘ என்ற தலைப்பில் கவிதை படித்த திருமதி. பவானி கீர்த்தியால், இராமு முதல் முறையாகக் கவியரங்கம் ஏறியவர். சிக்கலின்றி, விக்கலின்றிக் கவிதை படித்தார். தாகூர் பற்றித் தாமே இயற்றிய பாடல் ஒன்றை இறுதியில் பாடிக்காட்டி, பாராட்டைப் பெற்றார். திரு புலவர் பொன்னரசு, குறள், வெண்பா ஆகிய மரபுக் கவிதைகளில் கவிதை வழங்கி இறுதியில் பாட்டு ஒன்றுடன் தம் கவிதை அரங்கை நிறைவு செய்தார். இவர் தலைப்பு; (தாகூர்) ‘மானுடம் பாடிய வானம்பாடி‘.
இதனைத் தொடர்ந்து இலக்கியத்தேடலின் 9 ஆம் கூட்டம் நடை பெற்றது. உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி ஆவது தமிழ் மொழியே என்பதைச் சொல்லாய்வு வழிநின்று விளக்கினார் ஆசிரியர் பி. சின்னப்பா. அவர் கூற்றுக்கு வலிமை சேர்க்கும் வண்ணம், இலக்கியத் தேடலின் அமைப்பாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ சில பல எடுத்துக்காட்டுகளைக் கூறினார். இறுதியில் திரு ரவி பாலா நன்றி உரை நவில விழா இனிதே நிறைவு பெற்றது. இரவு 9 மணிக்கு முடிவு பெற வேண்டிய விழா முன்னதாகவே 8 மணி அளவிலேயே முடிந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இடையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர்கள் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, புலவர் பொன்னரசு.

முத்தமிழ்ச் சங்கம் நடத்தும் 12 ஆம் ஆண்டு இலக்கிய விழா மற்றும் இலக்கியத்தேடல்-9 அழைப் பிதழ் தாகூரின் 150 ஆம் ஆண்டு விழா


தமிழ்க் கலாச்சார மன்றம்


இலக்கியத்தேடல் 9

இதனைத் தொடர்ந்து இலக்கியத்தேடலின் 9 ஆம் கூட்டம் நடை பெற்றது. உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி ஆவது தமிழ் மொழியே என்பதைச் சொல்லாய்வு வழிநின்று விளக்கினார் ஆசிரியர் பி. சின்னப்பா. அவர் கூற்றுக்கு வலிமை சேர்க்கும் வண்ணம், இலக்கியத் தேடலின் அமைப்பாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ சில பல எடுத்துக்காட்டுகளைக் கூறினார்.
-இலக்கியத் தேடல் விழா! சூன் திங்கள் 4 -ஆம் நாள் பாரீஸ் 14 ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்ற இடத்தில் இவ்விழா நடந்தேறியது.

திருவள்ளுவர் கலைக்கூடம்




ஆண்டுதோறும் இச்சங்கத்தின் தலைவர் அண்ணாமலை பாஸ்கர் சிறப்பாக செயல்பட்டு இவ்விழா ஏற்பாடு செய்து உள்ளார்.

இலக்கியத்தேடல் 8


தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள உடனடி ஆபத்து பற்றி நம் இலக்கியத்தேடலில் 8 ஆம் கூட்டத்தில் M.Le beau Benjamin உரை ஆற்றினார். அது சமயம், வட தமிழகம், தென் தமிழகம் ஆகியவற்றில் பரப்புரை செய்து மக்கள் கவனத்தைக் கவர நாங்கள் எடுக்கும் முயற்சிகள் பற்றி குறிப்பிட்டார்.. அது தொடர்பாகத் தமிழகப் பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகள்

இந்தக் கூட்டம் திருமிகு பெஞ்சமின் லெபோ ஜயா அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

சுப்பையா நூற்றாண்டு விழா

பாரீசு தமிழ்ச் சங்கம் இவ்விழாவினைக் கொண்டாடவுள்ளது. புதுவையிலிருந்து முக்கிய விருந்தினர்கள் வருகைபுரிய உள்ளனர்.

Invitation
Centenaire du dirigeant populaire V.SUBBIAH
FÊTE de PONGAL

Date : Dimanche 16 janvier 2011 de 10h à 22h
Lieu : Salle des Fêtes, Ecole Jean Jaurès, 13 avenue Jules Ferry, 92240 Malakoff
Métro : Malakoff- Plateau de Vanves (ligne n° 13) Bus : 126 ou 191 (arrêt : Gabriel Péri-André Coin). Parking dans la cour de l’école

ENTREE GRATUITE

Programme : Centenaire de V.SUBBIAH à 10h
Présidence et bienvenue : B.Dassaradane
Bharatanatyam : Mlle. Abirami Kanagarajah
Allocutions : M. Nara. Kalainathan, M.L.A, Parti Communiste de l’Inde (CPI)
M. Jacques Fath, Parti Communiste Français (PCF)
M. R. Viswanathan, M.L.A, Parti Communiste de l’Inde (CPI)
Publication du Souvenir : M.Nazim
Allocution : M. T. Geethanathan, Séc.général, Union des Agriculteurs, Puducherry
Poésie : Kavisittar Kana. Kabilanar
Remerciements : M. Annamalé Bhasker

Déjeuner sur place

Programme de la Fête de PONGAL à 15h
Lumière traditionnelle et louange à la langue tamoule
Bienvenue : M. B. Dassaradane, Président, France Tamil Sangam
Présidence : M. J. Moudiappanadin, Secrétaire Général, France Tamil Sangam
Invité d’honneur : Mme.Gaitri I.Kumar, Chef de Mission Adjoint, Ambassade de l’Inde
Bharatanatyam : Mlle.Deepikka Mithran
Allocutions : MM.Sougoumarane Mourougayane, Alain Anandane, Pannirselvame, Mourougou Batmanabin
Poésie : Kavignar K. Bharathidasan

Entracte : PONGAL et rafraîchissements

Danses, Vinaï et Chants : Elèves de Annamalai University, Paris
« Sollér Arangam »
Vallouvar Kattoum Iraïyiyal : M.Muthukumaran
Vallouvar Thittoum Arasiyal : M.Thalinjan Mourougaya
Vallouvar Outtoum Mojiyiyal : M.Benjamin Lebeau
Vallouvar Mouttoum Ouyiriyal : Mme. Elisabeth Amalraj
Remerciements: M. Cogoulane Carounagarane, Trésorier, France Tamil Sangam
Contact : B. Dassaradane. Tél 01 42 53 03 12

Monday, 28 February 2011

அந்தாதி நூல் அறிமுகம்




34 வது சென்னை புத்தகக் காட்சியில், பிரான்சில்உள்ள கவிதைச் சித்தர் கண.கபிலனார் எழுதிய அந்தாதிப் பாவகையில் பிரான்சில் வாழும் தமிழ்த் தொண்டர் கோவிந்தசாமி செயராமன் அவர்களை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட இந்நூலை புலவர் த.கோவேந்தன் நினைவு அறக்கட்டளை சார்பாக 06.01.2011 அன்று விழிகள் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டது.
கலைவிமர்ச்சகர் இந்திரன் முன்னிலையில் கவிஞர் வசந்தகுமாரன் அவர்கள் வெளியிட திருமிகு சுகுமாறன் (டி.எஸ்.பி) அவர்கள் பெற்றுப்கொண்டார்.

இலக்கியத்தேடலின் 7ஆம் கூட்டம்






05.12.2010 அன்று பாரீசு 75009, அம்மன் உணவகம்,41 rue Pierre Fontaine ல் நடைபெற்றது. போராசிரியர் தளிஞ்சான் முருகையா 'சிறுவர்களுக்கு தமிழ் கற்பித்தல்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தங்களுடைய பிள்ளைகளுக்கு பள்ளியில் தமிழ் வழி கற்ப்பித்தல் எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள ஒர் அரிய வாய்ப்பாகும்.