14.07.2011 பிரான்சு முத்தமிழ்ச்சங்கம் சார்பாக, பிரான்சு அரசின் செவாலியே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கலைமாமணி இராச வேங்கடேசனாரை பாராட்டும் பொருட்டு ஒன்றுகூடல் அஜீஸ் நகரில் உள்ள செல்வமுருகா திருமண நிலையத்தில் நடந்தது. முத்தமிழ்ச்சங்கத் தலைவர் கோவிந்தசாமி செயராமன் அனைவரையும் வரவேற்றார். கலைவிமர்சகர் இந்திரனும், புதுவை புரட்சிஎழுத்தாளர் பிரபஞ்சனும் முன்னிலை வகித்தனர். நீதியரசர் தாவீதுஅன்னுசாமி தலைமைதாங்கினார். நிகழ்ச்சியில் சப்தகிரி உரிமையாளர் சிவக்கொழுந்து, திரு பாவலர்மணி சித்தன், திரு கண.கபிலனார் (பிரான்சு), திரு சுகுமாறன் முருகையன் (பிரான்சு), திரு தசரதன்(பிரான்சு), திரு தளிஞ்சான் முருகையா(பிரான்சு), மருத்துவர் சனார்த்தனம்(சென்னை), திருமதி மதனகல்யானி, சொல்லாய்வுசசெல்வர் மா.சோ.விக்டர் (அரியலூர்- தமிழ்நாடு), வில்லிசைவேந்தர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். விருது பெறும் திரு வேங்கடேசனாருக்கு நினைவு பரிசு முத்தமிழ்ச்சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. மதிய உணவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாரீசு பரதேசி
No comments:
Post a Comment