


முத்தமிழ்ச்சங்கமும், இலக்கியத் தேடலும்; ஒன்றிணைந்து சூன் மாதம் 2012 ஆம் ஆண்டில் தமிழ் இலக்கிய உலக மாநாடு நடைபெற திட்டமிட்டுவுள்ளன. இவ்விழாவின் தலைவராக பேராசிரியர் பெஞ்சமின் லெபோவும் அமைப்பாளராக திரு கோவிந்தசாமி செயராமனும் செயலாளராக தமிழியக்கன் தேவகுமரனும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதன் தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்களை இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருமாறு பிரான்சு முத்தமிழ்ச்சங்கத் தலைவர் கோவிந்தசாமி செயராமன் முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்து உள்ளார். அதோடு புதுச்சேரி சபாநாயகரையும் நேரில் சந்தித்து தமிழ் இலக்கிய உலக மாநாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின் போது தமிழ் இலக்கிய உலகமாநாட்டின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு பழனிச்சாமியும் உடனிருந்தார்.
No comments:
Post a Comment